பேஸ் புக் பேக் ஐடிகள் நிறுத்தப்படுவது. சமூகத் தேவை

  • 49

இன்று பேஸ் புக் பாவனை மக்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இது போன்ற சமூக வலைத்தளங்களின் பாவனையில் மார்க்க வழிகாட்டல்களைப் பேணுவதுடன் நம்மீதுள்ள கடமைகளை செய்வதற்குத் தடையாக அவை இருக்காத வகையில் நலவுகளுக்காக மட்டும் அவற்றைப் பயன்படுத்தவும் வேண்டும். அருள்கள் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது.

ஆனால் இன்று அவற்றின் பாவனையில் பாரியளவில் மார்க்க வரையறைகள் மீறப்படுகின்றன. குறிப்பாக தவறான நோக்கங்களுக்காகத் திறக்கப்படும் பேக் ஐடிகள் மிகப்பெரும் பொய் மற்றும் ஏமாற்றும் மோசடியுமாகும். பொய் நயவஞ்சகர்களுக்கே உரித்தான பண்பு. அது பெரும் பாவம்.

“நிச்சயமாக பொய் பாவத்துக்கு இட்டுச் செல்லும். பாவம் நிச்சயமாக நரகத்துக்கு இட்டுச் செல்லும்.” (அல் ஹதீஸ்)

எனவே பொய்யோடு தொடர்பு படும் அனைத்து விடயங்களிலும் மிகக் கவனமாக நாம் நடந்து கொள்ளவேண்டும். ஆக பேக் ஐடிகள் திறப்பதோ அல்லது பேக் ஐடிகள் என்று தெரிந்த பின்பும் அவற்றினூடாக நட்பைத் தொடர்வதோ கூடாது.

பொய்கள் மற்றும் வதந்திகள் பரவுதல், மானங்கள் களங்கம் செய்யப்படுதல், பெண்ணின் பெயரில் ஆணும் ஆணின் பெயரில் பெண்ணும் தோன்றுதல், அந்நிய ஆண்கள், பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தல். அருவருப்பான வார்த்தைகளால் தேவையற்ற விமர்சனங்களும், முரண்பாடுகளும் முன்வைக்கப்படுதல் போன்ற சமூகக் கட்டமைப்பை சீர்குலைக்கும் தீமைகளும் விடயங்களும் ஏராளம் நடைபெறுகின்றன; நடைபெற்றிருக்கின்றன.

அதனால் இந்த பேக் ஐடி கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுவது அவசியமாகும். மாறாக நாம் அதற்குத் துணை போவதோ அல்லது அங்கீகாரம் வழங்குவதோ கூடாது.

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யாதீர்கள் [அல்குர்ஆன்- 5:2]

எனவே மேற்கூறிய நோக்கங்களுக்காக முகம் தெரியாத பேக் ஐடிகளை நாம் பாவனை செய்வோராயின் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்வதுடன் ஏனைய பேக் ஐடிகளுடனான தொடர்பையும் துண்டித்துக் கொள்வோம்.

வளர்ந்து வரும் எமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு நல்ல பண்பாடுகளையும் ஒழுக்கங்களையும் எமது செயற்பாடுகளினூடாக வளர்த்து விடுவோம்.

இது விடயமாக ஒருவருக்கொருவர் ஞாபகமூட்டுவது மார்க்கக் கடமையும் சமூகத்தினதும் காலத்தினதும் தேவையுமாகும். இல்லையேல் பாரிய சமூக ரீதியான குழப்பங்களுக்கு முகம் கொடுக்கும் அபாய நிலை தோன்றலாம்.

அல்லாஹ் அவற்றிலிருந்து எம்மைக் காத்து நம் அனைவருக்கும் நேர்வழியைக் காட்டி அருள் பாலிப்பானாக.

பாஹிர் சுபைர்

இன்று பேஸ் புக் பாவனை மக்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இது போன்ற சமூக வலைத்தளங்களின் பாவனையில் மார்க்க வழிகாட்டல்களைப் பேணுவதுடன் நம்மீதுள்ள கடமைகளை செய்வதற்குத் தடையாக அவை இருக்காத வகையில் நலவுகளுக்காக…

இன்று பேஸ் புக் பாவனை மக்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இது போன்ற சமூக வலைத்தளங்களின் பாவனையில் மார்க்க வழிகாட்டல்களைப் பேணுவதுடன் நம்மீதுள்ள கடமைகளை செய்வதற்குத் தடையாக அவை இருக்காத வகையில் நலவுகளுக்காக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *