துஷ்பிரயோகம் பாரதூரமானது

  • 9

அனைத்துவகையான உள நோய்களின் (psychological Disorders) மூல காரணி, தற்கொலை முயற்சி வரைக்கும் மனித மனதில் தொடர்ந்து தாக்கம் செழுத்தும் காரணி, உறவுகளை மெல்ல துண்டித்து அழித்து விடும் பயங்கரமான மானஸீக “கென்ஸர்”

“Emotional Abuse” (உணர்ச்சி துஷ்பிரயோகம்) தன்னைப் போன்ற இன்னொருவரின் உணர்வுகளை ஆநாகரீகமாக கையாண்டு அவரில் ஆதிக்க செழுத்த முயற்சிப்பதன் ஊடாக இந்த துஷ்பிரயோகம் விளைகின்றது.

இன்னொருவர் மீதான உணர்வு துஷ்பிரயோகம் 3 கட்டங்களின் ஊடாக விரிந்து செல்வதாக உளமருத்துவர்கள் வாதிக்கின்றனர்

  1. அடுத்தவர் பற்றிய பிழையான மதிப்பீடுகள் (perceptions)
  2. அடுத்தவர்களை நோக்கிய முகபாவனை (Facial responces)
  3. அடுத்தவர்களை நோக்கிய நடத்தை வெளிப்பாடுகள் (Behavioural responses )

உணர்வு துஷ்பிரயோகம் கணவன் மனைவி உறவில், பெற்றார் பிள்ளை உறவில், ஆசிரியர் மாணவர் உறவில், தொழில் தளங்களில், நண்பர்கள், சகபாடிகள் வட்டத்தில், பொது மக்கள் சபையில் சர்வ சாதாரணமாக இடம் பெறலாம்.

“Emotional Abuse ” இன் சில வடிவங்கள்,

  1. ஒருவரை உருக்கிப்பார்த்தல்.
  2. ஒருவரை காண்கின்ற போது முகத்தை சுருட்டிக் கொள்ளுதல்.
  3. காண்கின்ற அனைவரையும் விபச்சாரி என நினைத்தல்.
  4. செய்த உதவியை நேரம் பார்த்து சொல்லிக்காட்டுதல்.
  5. முக்கியமான ஒரு பேச்சில் பழைய சம்பவமொன்றை ஞாபகப்படுத்தி வாயை அடைத்து விடுதல்.
  6. பாராட்டு எதிர்பார்க்கப்படும்போது பாராட்டாமல் இருத்தல்.
  7. ஸலாம் சொல்லும் போது பதில் சொல்லாமல் இருத்தல்.
  8. பலரின் முன்னால் தன்னை இகழ்தல், ஏளனப்படுத்தல்.
  9. நன்றி சொல்ல வேண்டிய இடங்களில் சொல்லாமல் இருத்தல்.
  10. ஒருவர் பற்றி இன்னொருவரிடம் மோசமாக கதைத்தல்.
  11. இருவரை சண்டைக்கு மூட்டிவிடுதல்.
  12. கடைசியில் வந்து குறுக்கு வழிகளை பயன்படுத்தி பலர் வரிசையில் இருக்கும் போது தனது தேவையை முதலாவதாக நிறைவேற்றி செல்லுதல்.
  13. தன் தேவை நிறைவேறும் வரைக்கும் அன்பு காட்டி அதன் பின்னர் களட்டி விடுதல்.
  14. கலந்து ஆலோசிக்க வேண்டிய சந்தர்பங்களில் ஒரு தலைபட்சமாக முடிவெடுத்தல்.
  15. பலர் சேர்ந்து விளையாடும் போது ஒருவரை மட்டும் விளையாட்டுக்கு சேர்த்துக் கொள்ளாமல் இருத்தல்.
  16. கஷ்டப்பட்டு ஒரு நிகழ்ச்சிக்கு தயாராகி சென்று தமக்குரிய சந்தர்ப்பம் வரும் போது சந்தரப்பம் வழங்கப்படாமல் இருத்தல்.
  17. பல பிரச்சனைகளால் துன்பப்பட்டு வேதனையோடு இருக்கும் போது ஆருதல் கூறாமல் பிரச்சினையையே தொடர்ந்து பேசிக்கொண்டிருத்தல்.
  18. தன் பக்கம் நீதியிருந்தும், தன் பக்கம் சரியும், நீதியும், உண்மையும் இருக்கும் போதும் போழி சாட்சியங்கள் சோடிக்கப்பட்டு குற்றவாளியாக்கப்படல்.
  19. தனது நேசத்துக்குரியவர்களுக்கு முன்னால் (பிள்ளைகள், மனைவி, தாய், தந்தை) தலைகுனிவை ஏற்படுத்தலாம்.
  20. மதிப்பச்சம் என்ற ஒன்றை பயன்படுத்தி பிறரது கருத்துக்களை வெளிப்படுத்த அல்லது செவிமடுக்க சந்தர்ப்பம் கொடுக்காமை.
  21. குறித்த ஒரு விடயத்தை பெரிது படித்தி, பூதாகரப்படுத்தி காட்டி அவசியமில்லாத பயத்தை ஏற்படுத்துதல்.

இப்படி உணர்வுத் துஷ்பிரயோகத்தின் பட்டியலை நீட்டலாம். தொடர்ந்தும் உணர்வுத் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டால் அதிலிருந்து எப்படி மீளலாம் என்பதற்கான உளவியல் நுட்பமுறைகளையும் வழிகாட்டல்களையும் எதிர்பாருங்கள்.

அஷ்ஷெய்க் ஹுஸ்னி ஹனீபா
(நளீமி)
(Dip. In Counselling)

அனைத்துவகையான உள நோய்களின் (psychological Disorders) மூல காரணி, தற்கொலை முயற்சி வரைக்கும் மனித மனதில் தொடர்ந்து தாக்கம் செழுத்தும் காரணி, உறவுகளை மெல்ல துண்டித்து அழித்து விடும் பயங்கரமான மானஸீக “கென்ஸர்” “Emotional…

அனைத்துவகையான உள நோய்களின் (psychological Disorders) மூல காரணி, தற்கொலை முயற்சி வரைக்கும் மனித மனதில் தொடர்ந்து தாக்கம் செழுத்தும் காரணி, உறவுகளை மெல்ல துண்டித்து அழித்து விடும் பயங்கரமான மானஸீக “கென்ஸர்” “Emotional…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *