ஷரீப் எனக்கு இதுக்கு மேல மனுசர்க்காக நடிக்க ஏலா எனக்கு divorce வேணும்.

  • 22

திருப்பு முனை
பாகம் 22

“டொக் டொக்”

கதவு தட்டும் சத்தம் கேட்டது. லீனா சென்று கதவை திறந்தாள்.ஷரீப் வந்திருந்தான்.

“லீனா நா கொஞ்சம் வெளிய ஒரு பயணம் போகனும் பெய்த்துட்டு வாறேன்.”

என்று அவளது கையைப்பிடித்து அவளை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

“இது என்னா புதுசா?” என எண்ணினாள் லீனா. அது அவளுக்கு பிடிக்கவில்லை. மெதுவாக அவனிடமிருந்து விலகினாள்.

“லீனா நா வர கொல ஒஙலுக்கு என்னா கொண்டு வருவேன்டு தெரியுமா?”

“தெரியா.”

“ஒங்களுக்கு நெனவிரிக்கா. முடிச்ச புதுசுல ஒரு நாள் நீங்க எனக்கிட்ட மொத மொதலா பால்கோவா வாங்கி கேட்டீங்க. அப்ப நா அத வாங்கி தரல்லயே. இன்டக்கி கட்டாயம் வாங்கி தாறேன்.”

“எதுக்கு இன்டக்கி வாங்கி தாறேன்டுறீங்க?”

“அது ஒங்களுக்கு அவ்வளவு புடிக்கும் தானே அதான்.”

“ஒங்களுக்கு யாரு சொன்ன இந்த கதய?”

“உண்ம தானே புடிக்கும் தானே.”

இல்லவே இல்ல எனக்கு பால்கோவா என்டாலே சுத்தமா புடிக்காது.”

“பொய். ஒங்களுக்கு அது தான் அவ்வளவு புடிக்கும்.”

“ம்ம். புடிச்சிச்சி தான் ஒரு காலம். ஆனா இப்ப புடிக்கல்ல.”

“ஏன் லீனா?”

“பசிக்க போக கொல கெடக்காத சாப்பாடும். கேட்க கொல கெடக்காத உதவியும். எதிர்ப்பாக்க கொல கெடக்காத அன்பும் அதுக்கு பொறகு கெடச்சி அருத்தமே இல்ல. அது போல தான் இதுவும்.”

ஷரீப் லீனாவையே பார்த்து கொண்டிருந்தான். அவனால் எதுவும் கூற முடியவில்லை.

“லீனா இன்னம் கோவமா தான் இரிக்கிறீங்க போல”

அவள் பதில் ஏதும் பேசவில்லை.

“லீனா ஏன் இப்படி இரிக்கிறீங்க. நா முந்தி பார்த்த லீனா நீங்க இல்ல. நீங்க மாறிட்டீங்க.”

“நீங்களே மாறிட்டீங்களே ஷரீப். யாரோ ஒருத்திக்காக.”

“லீனா அவனது பெயர் சொல்லி பேசியது அவனுக்கு ஆச்சரியம்தான். ஆனாலும் அதை அவன் கண்டு கொள்ளவில்லை.”

“நா மட்டும் மாறாம இருந்தா சரியா? அதான் நானும் மாறிட்டேன். ஆனா இந்த மாற்றம் நானா கேட்டு வாங்கின மாற்றம் இல்ல. நீங்க எல்லாம் சேர்ந்து தந்தது.”

“ஷரீப் நா ஒஙல எந்தளவுக்கு நம்பினேன் என்டு தெரியுமா? நா ஒஙட மேல எவ்வளவு எரக்கம் வெச்சிருந்தன்டு தெரியுமா? எல்லாதயும் இப்படி நாசமாக்கிட்டீங்களே!”

“நா ஒஙல எவ்வளவு பெரிய எடத்துல வெச்சி பாத்தேன். ஆனா கேவலம் நீங்க எனய ஒரு மனுசியா கூட மதிக்கல்லயே நாய்க்கி மாதிரி தானே கணக்கெடுத்தீங்க. ச்சீ”

“ஒஙல முடிக்க முன்னுக்கு எத்துனயோ பேர் எனக்கு சொன்னாங்க. ஒஙல முடிக்கவே வானான்டு. ஆனா நா யார்ட பேச்சயும் கேக்கல்ல. ஏன் தெரியுமா? நீங்க அவ்வளவு நல்லம்டு நெனச்சேன். கடசில ஊர் சொன்னத நீங்களே உண்மயாக்கிட்டீங்க.”

“கடசி வரக்கும் நீங்க கொஞ்சம் சரி எனய புரிஞ்சிக்கோவே இல்லயே ஷரீப். ஏன்ட மனசுல இரிக்கிற எதயுமே நீங்க வெளங்கிகொல்ல இல்ல. பரவல்ல. ஏன்ட வலி ஒங்களுக்கு வேடிக்கயா இரிக்கி இல்லயா?”

“சில விஷயங்கள மேலோட்டமா பாத்தா பெருசா ஒன்டும் வெளங்காது. அந்தந்த எடத்துல இருந்து பார்த்தா தான் அதுட வலி கஷ்டம் என்னான்டு வெளங்கும்.”

“ஷரீப் நீங்க எதுல வேணும்னாலும் விளாடுங்க. ஆனா ஒரு நாளும் அடுத்தவங்கட வாழ்க்கயிலயோ அடுத்தவங்கட மனசுலயோ விளயாடிடாதீங்க. மனுசன உசுரோட சாகடிக்க இது ரெண்டுமே போதும். ஒன்ட இழந்தவனுக்கு தான் அதுட வலி என்னான்டு வெளங்கும்.”

“ஷரீப் ஒரு பொம்புளக்கி மாமி ஊட்ல 1008 பிரச்சின வரும். மாமியால மாமாவால மதினிமாரால. இப்படி பிரச்சினகள் வரும். ஆனாலும் அவ பொறுத்துட்டு வாழுவா. ஏன் தெரிமா? யாரு பிரச்சின படுத்தினாலும் அத சொல்லி அழவோ. ஆறுதல் சொல்லவோ தனக்குன்டு தன்ட மாப்புள இரிக்கிறானே என்டு தான். ஆனா ஷரீப் என்ன பிரச்சின வந்தாலும் மாப்புளயே தனக்கில்லன்டு இருந்தா எப்படி ஷரீப் ஒரு வாழ்க்கய வாழ்ற.”

“நா ஒஙல மட்டும் தான் நம்பி வந்தேன். அப்படி இருந்தும் நீங்க எனக்குன்னு இல்லயே? இரிக்க கொல யார்க்கும் யார்ட அருமயும் வெளங்காது. இல்லாம போனா தான் வெளங்கும். அடுத்தவங்களுக்கு நா நல்லா இரிக்கிறேன்டு காட்ட பொய்யா சிரிச்சி வாழ்ற ஒரு வாழ்க்க எனக்கு வானா ஷரீப். எனக்கு இதுக்கு மேல மனுசர்க்காக நடிக்க ஏலா. எனக்கு divorce வேணும்.”

ஷரீப் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

“ஏன் லீனா வாழ்க்க என்டா அப்படி தான். 1008 பிரச்சின வரும். அதுக்காக divorce வரக்கும் போறதா?”

“ஆனா ஏன்ட வாழ்க்கயே எனக்கு பிரச்சினயா தானே இரிக்கி ஷரீப்”

“லீனா நீங்க ஆசபட்ட மாதிரி நா ஒஙல வெச்சிக்கோறேன். அவ்வளவுக்கு ஏன்ட மேல நம்பிக்க இல்லயா?”

லீனா ஒரு குறுஞ் சிரிப்புடன்,

“நீங்க எனய நல்லா பாத்துக்கோவிங்களா. இத நா நம்ப. ஒஙல நம்பினா மண் குதுரய நம்பி ஆத்துல எரங்கின கத தான்.”

“ஏன் ஒங்களுக்கு எனய நம்ப ஏலாதா லீனா?”

“எப்படி நம்ப சொல்றீங்க. எத வெச்சி நம்ப சொல்றீங்க. ஒட்டு மொத்த நம்பிக்கயுமே ஒடச்சிட்டு இப்ப நம்ப சொல்றீங்களா! ஷரீப் நம்பிக்க போனா அது திரும்பி வாறது மிச்சம் கஷ்டம்.”

“சரி இனி நா ஒஙலோட நல்லா பேசி கதக்கிறேன் போதுமா.”

“என்னத்துக்கு இப்படி தான் சொல்வீங்க. அப்புறம் ஒஙட புத்திய தானே காட்டுவீங்க. வெட்டி பேச்சி வானா divorce தாங்க.”

“இல்ல அது மட்டும் கெடக்காது லீனா?”

“ஏன்? அப்படின்னா ஒங்களுக்கு சேர்ந்து வாழ விருப்பமா? விருப்பம்டா ரோஸிய மறந்துட்டு வாங்க. எஙட ஊருக்கு பெய்த்து கூலிக்கி ஒரு ஊடெடுத்து இரிப்போம்.”

“அப்படி எல்லாம் எனக்கு அங்க வந்திரிக்கேலா.”

“ஏன் நா இவ்வளவு எரங்கி வந்தும் ஒங்களுக்கு புடிவாதமா? லீனா ஒன்ட வெளங்கி கோங்க..என்ன நடந்தாலும் எனக்கு இங்க இருந்து எங்கயும் வர ஏலா.”

“அதான். ஏன் வர ஏலா ஒங்களுக்கு. மனசு உடுதில்ல போல”

“ஓ. எனக்கு ரோஸிய யார்க்காகவும் உட்டு போட ஏலா?”

‘அது தான் எனக்கு தெரியுமே. ஒஙல திருத்த ஏலா’ என்று லீனா மனதில் நினைத்து விட்டு,

“ஒங்களுக்கு பொண்டாட்டி என்ட பேருக்கு தான் நா தேவ. பேருக்கு வாழனும்டா வேற எவளயும் பாருங்க. ஒஙலுக்கே அவ தான் பெருசுன்டா இனி பேசி வேலல்ல. divorce அ நீங்களே தாங்க. நா கேஸ் போட்டா அது ஒங்களுக்கு சரில்ல.”

“ஏற்கனவே நடந்த divorce உம் நீங்க குடுக்கல்லயே. அவங்க தானே குடுத்தாங்க அதான் சொல்றேன்.”

“ஏலா லீனா. நா divorce தர மாட்டேன் ஒங்களுக்கு.”

“இவ்வளவு தன்மயா சொல்லிட்டேன். நீங்க தராட்டி நா எடுக்க வேண்டி வரும்.” லீனா அவனை பார்த்து உறுதியாக கூறினாள்.அவன் கதவை தடாரென மூடிக் கொண்டு வெளியே சென்றான்.

தொடரும்
Noor Shahidha
SEUSL
Badulla

திருப்பு முனை பாகம் 22 “டொக் டொக்” கதவு தட்டும் சத்தம் கேட்டது. லீனா சென்று கதவை திறந்தாள்.ஷரீப் வந்திருந்தான். “லீனா நா கொஞ்சம் வெளிய ஒரு பயணம் போகனும் பெய்த்துட்டு வாறேன்.” என்று…

திருப்பு முனை பாகம் 22 “டொக் டொக்” கதவு தட்டும் சத்தம் கேட்டது. லீனா சென்று கதவை திறந்தாள்.ஷரீப் வந்திருந்தான். “லீனா நா கொஞ்சம் வெளிய ஒரு பயணம் போகனும் பெய்த்துட்டு வாறேன்.” என்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *