மனித உரிமைகள் மறுப்புத் தினம்

  • 12

இன்று மனித உரிமைகள் தினமாம்
விரும்பிய விதத்தில்
இறக்கும் உரிமையும் இல்லாத தேசத்தில்
இப்படியும் ஒரு தினம்
இருப்பதுவும் ஆச்சரியம்தான்

ஏழு தசாப்தங்கள் கடந்து விட்டது
ஐநாவின் உரிமைப்பிரகடனத்திற்கு
ஆனாலும் இன்றுவரை
தொடர்கின்றது
உரிமைக்கான குரல்
உலகெங்கும்

கருணைக்காகவும் மரியாதைக்காகவும் சுதந்திரத்திற்காகவும்
குரல் கொடுக்கும் ஐநாவே
எழுபது ஆண்டுகள்
கண்ட பலன் என்னவோ?

அறியாத வயதுப்
பச்சிளம் குழந்தையையும்
நெருப்பில் வேக வைக்கிறார்கள்
விளங்கவில்லையா
உன் கண்ணுக்கு இந்தக் கொடூரம்

பிரச்சாரங்களும் விவாதங்களும்
பேரணியும் நடத்தியும் கிட்டவில்லையே மானிடருக்கான உரிமைகள்

ஐநாவே எந்தச் சூழ்நிலையிலும்
மனித உரிமைகள்
மீட்கப்பட வேண்டும் என்ற
குறிக்கோள் மாற்றப்பட்டு விட்டதா?
இல்லை
குறிக்கோளையே மறந்து விட்டாயா?

இனி நாமும் கொண்டாட வேண்டியது
மனித உரிமைகள் தினமல்ல
மனித உரிமைகள் மறுப்புத் தினம்

Faslul Farisa Asadh
Second year
SEUSL

இன்று மனித உரிமைகள் தினமாம் விரும்பிய விதத்தில் இறக்கும் உரிமையும் இல்லாத தேசத்தில் இப்படியும் ஒரு தினம் இருப்பதுவும் ஆச்சரியம்தான் ஏழு தசாப்தங்கள் கடந்து விட்டது ஐநாவின் உரிமைப்பிரகடனத்திற்கு ஆனாலும் இன்றுவரை தொடர்கின்றது உரிமைக்கான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *