வீட்டின் டாய்லட் முதல் படுக்கை வரை கெமரா- பிங்பாஸ் விஷமம்

இன்று பரவலாக பலரும் பார்த்து ரசித்திடும் ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் காணப்படுகிறது. பிக்பாஸ் பற்றி பலரும் பலவிதமாக கருத்திட்ட போதிலும் ஒற்றை வரியில் கூறுவதாயின் “வியாபார நோக்கத்திற்காக விஷமங்களை திணிக்கும் ஓர் நிகழ்வு” எனலாம்.

பிக்பாஸ் என்பது “பிக் பிரதர்” என்ற பெயரில் டச் டீவி நடாத்திய நிகழ்ச்சியின் தமிழ் காப்பி எனலாம். இது தமிழ் வடிவில் வருகின்ற செய்தி தெரிந்ததும் சமூக ஆர்வலர்களினால் அதிகம் கண்டனத்திற்காளாகிய போதும் விஜய் டிவியின் பணத்தாசை சமூக நலனை மறைத்துவிட்டது. இன்னும் சொல்வதாயின் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பையும் தனக்கான விளம்பரமாக பயன்படுத்திக் கொண்டது விஜய் டிவி.

பல நிகழ்ச்சிகளில் நடிகை நடிகர்களை கோர்த்துவிட்டு காதல் கிசுகிசு ஆக்கி பல தனிப்பட்ட குடும்பங்களை குட்டையை குழப்புவதற்கு விஜய் டிவிக்கு நிகர் விஜய் டீவியே. இதனாலே நெட்டிசர்களுக்கு மத்தியில் இதற்கு “மாமா – டீவி” என்ற விருது வழங்கி கெளரவிக்கவும்படுகிறது.

இந்த புனித பணியை பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர்கள் விடுவதாக இல்லை. போட்டியாளர் தெரிவின் போதிலும் “நெருப்பும் பஞ்சும் சேர்ந்தால் பத்திக்கும்” என்பதை அதிகம் புரிந்து தேர்வுசெய்வர். அதன் விளைவால் நடிகர் நடிகைகளின் பல குடும்பங்கள் கண்ணீருடன் தலைகுனிந்து நிட்பதையும் திரையில் காட்டி காசுபார்க்கும் கைவித்தையும் தெரிந்துவைத்துள்ளனர் .

நடிகர் கமல்; இவருக்கு பெயர் உலக நாயகன். இவர் உலக நாயகனா ஒலக்க நாயகனா என்று கேட்குமளவு பிக்பாஸ் நிகழ்விற்கு நியாயங்கள் கூறுவார். இவர் பிக்பாஸ் நிகழ்விற்கு கூறும் ஒரே நியாயம் “மக்கள் ரசிக்கின்றனர்” என்பதே. இதற்கு பதிலாக சமூக வளையத்தில் அருமையான ஒரு பின்னூட்டலை கண்டேன்; “ஊர் பார்க்கிறது என்பதற்காக உரியானத்துடன் போகலாமா?”

அரசியல் வாதி, சமூக சேவகர் என தன்னை அடையாளப்படுத்தும் நடிகர் கமலகாசன் மக்களை நல்லதை மட்டுமே ரசிக்க வேண்டும் என்பதில் அவதானமாக இருக்க வேண்டாமா? மக்கள் ரசிக்கிறார்கள் என்பது தான் சமூகத்தில் விஷமத்தை உட்புகுத்துவதற்கான நியாயமே இல்லை என்பதை கூட தெரியாத மேதாவி அவர்.

இதிலும் இடையிடையில் தான் சில சமூக கருத்துக்களையும், அறிவுசார் விடயங்களையும் பகிர்ந்து நிகழ்விற்கு வெள்ளைதீட்ட முற்படுகிறார். “டாய்லட்ல போய் சாப்பிட்டா டாய்லட் டயினிங் ஹோலாக மாறிடுமா?”

இந்த நிகழ்ச்சியை இவ்வளவு விமர்சிப்பதற்கு என்னதான் காரணம் என வாசிப்பவர்கள் யோசிக்கலாம். நான் அவதானித்த சில குப்பைகளை பட்டியலிடுகிறேன். சிரிப்பாகவே உள்ளது. குப்பைத்தொட்டியில் குப்பைகளை காண்பிக்க போகிறேன் என நினைக்கையில், இருந்தும் அது பூஞ்சோலை என்றும் சிலர் நம்பியே உள்ளனர். நான் அவதானித்த சில விஷமங்களை மாத்திரம் பட்டியலில் இடம் அழிக்கிறேன். மீதமான இடைவெளியை நீங்கள் நிரப்பலாம்.

  • இந்நிகழ்ச்சியில் டையிடில் வெள்ள வேண்டுமாயின் தெரிந்திருக்கவேண்டிய ஒரே விடயம் “கூடவே உள்வங்களுக்கு எப்படி குழி பரிக்காறது” என்ற தந்திரம். அடிப்படை விழுமியங்களை தகர்தெரியும்படியாக மற்றவர்களை வீழ்த்தியேனும் நீ வாழ் என்ற முன்மாதிரியை நிகழ்ச்சி நித்தமும் திரையிடுகிறது. பார்ப்பவர்கள் மனதும் அவற்றை ஏற்கிறது. இதையே தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெளிக்காட்ட முனையவும் வாய்ப்புண்டு.
  • இது நடிப்பு இல்லை- நிஜம் என்ற பெயர். அத்தனை கேமராக்கள் அங்கு அவதானிக்க அங்கு எவரும் நடிப்பிதில்லையாம். ரியாலிடி ஷோவாம். எவரும் அத்தனை கேமராக்களுக்கு முன் தன் பலவீனங்களை தோற்றுவிக்க முற்பட மாட்டர். தன் பற்றிய நற்பெயரை சம்பாதிக்கவே முற்படுவர். சினிமாவில் இயக்குனர் எழுதிய கதைக்கு நடிப்பவர்கள் இங்கு தானே தனக்கு எழுதிய கதையில் நடிக்கினறனர் எனலாம். போலியும் வேஷமே முழுமையாக வெளிக்காட்டப்படும். இப்போலியும் வேஷமும் வெளிக்காட்டும் நடிகர்களில் இருந்து ஒரு நல்லமனிதனை தேர்ந்தெடுக்க முற்படுகின்றனர். எத்தனையோ இலச்சம் மக்கள் அவர்களை நல்ல மனிதர்களாக நம்பி வாக்கும் வழங்குகின்றனர். மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
  • அங்கு ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருப்பர், கட்டியணைப்பர், கைகொடுப்பர், தேவையேற்படின் முத்தங்களும் வழங்குவர், ஒரு படுக்கையின் சகஜமாக அமர்ந்து கொள்வர். ஆனால் இவை அனைத்தையும் பாலியலுடன் இணைக்க கூடாதாம். இதல்லாம் சகஜமாம். இந்த சகஜத்தையே பார்க்கும் ஒவ்வொருவரும் பழக்கமாக்கிக்கொள்வர். உங்கள் வீட்டின் ஒரு பதின்ம வயது பிள்ளை இவ்வாறு தனது பாடசாலையில் நடந்துகொண்டால் ஏற்பீர்களா? மாட்டீர்கள். அதயே நாம் பிக்பாஸ் மூலம் பழக்கப்படுத்துகிறோம்.
  • ரசிகர்கள் காணும்படியாக தலைக்கு தைலம் தடவுதல், மசாஜ் செய்தல் போன்ற ஆண் பெண் மத்தியில் சகஜமாக நடைபெறும். அதற்கு பெயர் நட்பாம். ஆணும் பெண்ணும் நட்புடன் இதல்லாம் செய்யலாமாம். இதையே பரஸ்பரம் காண்கிறோம்.
  • திரையில் காதல் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. ஏன் சில பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் எல்லைகடந்து ஏதேதோ நடந்த சம்பவங்களின் கானொழிகளும் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இதையெல்லாம் அங்கீகரிக்கும் படியான நிகழ்ச்சிக்கு நம்மில் பலர் அங்கீகாரம் வழங்கி வருகின்றனர்.
  • இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் நடிகர்கள், நடிகைகள், மோடல்கள் இவர்களை முன்மாதிரியாக சித்தரிக்கும் நிகழ்வே இது.
  • ஆடை யொழுக்கம். நான் இதை பற்றி விரிவாக பேச அவசியமில்லை. நிகழ்விற்கு உள்வாங்கப்பட்டுள்ள பல பெண்கள் ஆபாசமாக போட்டோ ஷூட் எடுத்து டிரன்ட் ஆகியவர்களே பிக்பாஸ் வீட்டில் மற்றும் பத்தினிகளாக இழுத்து மூடவா போகிறார்கள்.
  • இன்னும் சுவாரஸ்யத்திற்காக எதையும் செய்ய முற்படும் நிலையை அங்கு காணலாம். ஒருவர் நான்கு பெண்களை காதலிக்கிறார். காரணம் கேட்டதும் நிகழ்வின் சுவாரஸ்யதிற்காக என்று பதில் கூறுகிறார். ஒரு கல்லூரி மாணவன் சுவாரஸ்யத்திற்காக இவ்வாறு செய்யாதல் ஏற்பீர்களா? அதையே பழக்கப்படுத்துகிறோம்
  • குறை தேடும் குணம். சிரித்து பழகுவர். ஆனால் நயவஞ்சகமாக குறை தேடி குழி பறிக்கும் விளையாட்டே இது. இதையே காண்பிக்கின்றனர்.
  • இவையனைத்துக்கும் மேலதிகமாக ரசிகர்கள். உண்மையாகவே எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. இந்த பிங்போஸ் நாயகர்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் திடீரென எவ்வாறு முழைகின்றனர். முழுநேரமாக தன் நாயகனை/ நாயகியை பிரபல்யம் செய்வதற்காக எவ்வாறு இவர்கள் செயல்படுகின்றனர். இதுவும் தனது நிகழ்வை பிரபல்யப்படுத்த விஜய் டீவி செய்யும் தந்திரமாக இருக்குமோ என்பதே எனது கேள்வி? இல்லையின் பிங்போஸ் வீட்டின் போட்டியாளர்கள் தனக்கு கிடைக்கும் சம்பளமாக லட்சங்களில் சில பகுதியை விளம்பரத்திற்காக பயன்படுத்துகிறார்களோ என்பதும் எ‌ன்னுடைய மறுபக்க சந்தேகம். இதுவும் இல்லையெனில் எவனோ லட்சங்கள் சம்பாதிப்பதற்கு தன்னுடைய வேலை நேரத்தையும், குடும்ப நேரத்தையும் அர்பனித்துவிட்டு முட்டாள்தனமாக விளம்பரத்தில் ஈடுபடும் கூல்முட்டைகளின் செயற்பாடாக இருக்குமோ என்பதும் சந்தேகமே. வாசிப்பவர் எவருக்கேனும் தெரிந்தால் கொஞ்சம் தெளிவுபடுத்திவிடுங்க.

எம் சமூகத்தின் ஆன்மீக-விழுமிய உணர்வை தகர்ப்பதில் பிங்போஸும் இடம்பிடித்துள்ளது என்பதை தெரியாமலே குடும்பமாக அமர்ந்து இதை பார்த்து வறுகிறோம் என்பதே சோகம் தறுகிறது.

முடிவாக ஆபாசம், கீழ்தர சிந்தனை, நயவஞ்சகம், பிழையான முன்மாதிரி என பெரிதும் தனிநபர் அறநெறிக்கு பங்கம் ஏற்படுத்தும் கழிசரை நிகழ்வே இது. இதனை ஆபாச வீடியோக்களைவிட கேவலப்படுத்தும் அளவிற்கும் குப்பைகளை உள்ளடக்கியுள்ளது. இரகசியமாக ஒழுக்க விழுமியங்களை தகர்க்கும் நச்சு விஷமியே பிங்போஸ். முழுமையாக எமது வீட்டு சூழலில் இதற்காக புறக்கணிப்பை ஆரம்பிப்போம்.

Fazlan A Cader
Author: admin