எண்ணங்கள்

  • 17

எண்ணங்கள் என்றும் சிறப்பாக இருந்தால் எமது வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் குறைவு .இன்று அநேக பேரின் எண்ணங்களில் உள்ள பற்றாக்குறையே வாழ்வியல் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளன.

எண்ணம் இரண்டு வகைப்படும் .அது நாம் சிந்திக்கும் விதத்தை பொறுத்து வித்தியாசப்படுகிறது.

ஒன்று positive thoughts இன்னொன்று negative thoughts .

இன்று அநேகமானோரின் பிரச்சினைகளுக்கு காரணம் அவர்களின் மனதில் எழும் தவறான எண்ணங்களே!

ஏனெனில் இன்று சிறு பிள்ளை தொடக்கம் வளர்ந்தோர் வரை மறை எண்ணத்துடன் சிந்திக்கும் மனப்பான்மை வளர்ந்து வருகிறது.

மறைவான எண்ணம் எனும் போது எதுக்கெடுத்தாலும் அது இப்படி ,இது இப்படி என்று குறை கூறும் தன்மை

அது மாத்திரமின்றி எனக்குத்தான் இவ்வாறு நடக்கிறது மத்தவங்க எல்லாம் சந்தோசமாக இருக்கிறார்கள் என்ற தாழ்வு மனப்பான்மையும் தன்னை யதார்தமாக புரிந்து கொள்ள முடியாத நிலைமையும்

எதுக்கெடுத்தாலும் கோபம்,எறிந்து விழும் தன்மை .முகத்தை உம் என்று வைக்கும் நிலை .

என்னால் முடியுமா?எனக்கு ஒன்றும் ஏலாது என்ற தன்னம்பிக்கை அற்ற நிலை ,தன்னைத்தானே நம்பாத கோழை உள்ளம்.

எதுக்கெடுத்தாலும் பயம

அவனை எப்படியாவது கிழே தள்ளி விட வேண்டும் என்ற பொறாமை .

இன்று நம் சமுகத்தில் வீரிட்டு வளர்ந்து வருகிறது மனித உள்ளங்களில் இவ் விஷக் குணங்கள்.ஆதலால் பலர் நிம்மதியற்று தம் வாழ்வில் சிக்கித் தவிக்கின்றனர்.

மீளுவது எப்படி இவ் மறைவான எண்ணங்களில் இருந்து ,

சிந்திப்போம்.

எண்ணங்களை நேரான எண்ணங்களாக மாற்றுவோம்.தன்னைத்தானே சுய பரிசிலினை செய்வோம் நான் யார்??என் பலம் என்ன?பலவீனம் என்ன?பின் பலவீனத்தை இனங்கண்டு விடு பட முயற்சி செய்தல் வேண்டும் .

முதலாவது எமட மனதில் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்தால்,எம் மனதிற்குள் மனுசனுக்கு தானே பிரச்சினை வந்து போகும்.எல்லாம் நலவுக்குத்தான் என்ற மனப்பக்குவம் அவசியம்.பிரச்சினை நமக்கு மட்டும் தான் என்று அழுது புலம்பி ஒதுங்கி விட கூடாது.

பயத்தை விட்டு விலகுங்கள் .தைரியமாய் இருங்கள் பயம் உள்ள இடத்தில் தான் தேடல் அதிகமாய் உள்ளது என்பதை உணருங்கள்.சந்தேகத்தையும் பயத்தையும் ஒன்றுடன் ஒன்று போட்டு குழப்பாதீர்கள்.தௌிவாகவும் நிதானமாகவும் இருக்கப் பழகுங்கள்.

கோபமா எறிந்து விழாதீங்க .அதே தப்ப நான் செய்தால் என் நிலமை என்னவென்று மற்றவர்களின் நிலையில் இருந்து சிந்தியுங்கள்.

எப்போதும் உங்களுக்கு கீழ் உள்ளவர்களை பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள் .பொறாமைக்குணம் தானாய் இல்லாது ஒழியும்.

என்றும் நாம் இருக்கும் நிலைக்கு நன்றி செலுத்தப் பழகுங்கள்.நிச்சயமாக அடுத்த உயர்வு உங்களை நாடி வரும்.

அன்பர்களே !சமுகத்தின் உயர்வு அரசியலாக இருக்கட்டும்,பொருளாதாரமாக இருக்கட்டும்,சமுக வளர்ச்சியாக இருக்கட்டும் நல்ல எண்ணங்களில் தான் ஊற்று எடுக்கின்றன.

எனவே இன்றிலிருந்து எண்ணங்களில் மாற்றத்தை உண்டு பண்ணும் சமுகமாக ஒன்றினைவோம்.

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது.

Fathima Aysha Saffar.

SEUSL

Southern

எண்ணங்கள் என்றும் சிறப்பாக இருந்தால் எமது வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் குறைவு .இன்று அநேக பேரின் எண்ணங்களில் உள்ள பற்றாக்குறையே வாழ்வியல் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளன. எண்ணம் இரண்டு வகைப்படும் .அது நாம் சிந்திக்கும்…

எண்ணங்கள் என்றும் சிறப்பாக இருந்தால் எமது வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் குறைவு .இன்று அநேக பேரின் எண்ணங்களில் உள்ள பற்றாக்குறையே வாழ்வியல் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளன. எண்ணம் இரண்டு வகைப்படும் .அது நாம் சிந்திக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *