சினிமாவும் சமூகமும்

  • 12

சீரியல் சீர்கேட்டில்
சிக்கித் தடுமாறும் – சமூகமதில்!
சிந்திக்க சில வரிகள்
செப்புகிறேன் – கேட்டிடுவீர்!

இசையெனும் மாயையதில்
தாம் மூழ்கி – இன்றிங்கு
சிற்றின்ப சுகமதிலே
நிம்மதி தேடும் உள்ளங்கள்
உருவாகியது எதனாலோ?

போதைவஸ்திலே
பேதலிக்கும் புத்தியதை
பக்குவமாய்த் தாம் காட்டி
வன்முறைச் சூழலதை
வக்கிர புத்தியுடனே
சமூகத்தின் மத்தியிலே
வளர்ப்பது எதுதானோ?

காதல் காட்சிகளும்
கலப்பான கூடல்களும்
கலாச்சார வரம்பு மீறி
காட்சியளிக்கும் சினிமாவைக்
காண்பதுதான் தகுமோ?

நடிகர் பலரதனை
தம் ரோல் மொடலாய்த் தாமேற்று
மார்பு தட்டும் கலாச்சாரம்
மாறுவது எப்போது?

சிந்தனைத் தூறல்கள்
சினிமாத்துறையில் உண்டென்று
சிற்சில கருத்துக்கள்
எம் செவி வழியே எட்டினாலும்
சீர்கேட்ட சினிமாவில்
சீரியல் சீர்கேடு
கரைந்துள்ள யதார்த்தமதை
மறுப்பதற்கில்லை! – இன்றிங்கு

நாகரீக மோகமென்று
அநாகரீக வழியதிலே
செல்லும் நாமின்று
சிந்தையிலே உணர்ந்திட்டு
சீக்கிரம் எம்மைத் திருத்திட்டால்
சீரான பிரதிபலன்
சிறப்பாய் எம்மை வந்தடையும்!

(இன்ஷா அல்லாஹ்)

Noorul Shifa Jafeer
(Jaffna)
South Eastern University of Sri Lanka

சீரியல் சீர்கேட்டில் சிக்கித் தடுமாறும் – சமூகமதில்! சிந்திக்க சில வரிகள் செப்புகிறேன் – கேட்டிடுவீர்! இசையெனும் மாயையதில் தாம் மூழ்கி – இன்றிங்கு சிற்றின்ப சுகமதிலே நிம்மதி தேடும் உள்ளங்கள் உருவாகியது எதனாலோ?…

சீரியல் சீர்கேட்டில் சிக்கித் தடுமாறும் – சமூகமதில்! சிந்திக்க சில வரிகள் செப்புகிறேன் – கேட்டிடுவீர்! இசையெனும் மாயையதில் தாம் மூழ்கி – இன்றிங்கு சிற்றின்ப சுகமதிலே நிம்மதி தேடும் உள்ளங்கள் உருவாகியது எதனாலோ?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *