முஸ்லிம் மக்களின் உடனடித் தேவை ACJU பன்முகப்படுத்தப்பட வேண்டும்

நம் சமூகத்தில் வாழ்ந்து சென்ற மூத்த தலைவர்கள், வருங்கால சமூகத்தின் மீது ஆர்வமும், தியாக நற்குணமும் கொண்ட பெரும் தலைகள், இந்த பெருந்தன்மை கொண்ட பெரும் தலைகளால் 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, அன்றைய முஸ்லிம்களுக்கு அவ்வப்போது ஏற்பட்ட சன்மார்க்க பிரச்சினைகளுக்காகவும் மக்களுக்கு மார்க்க வழி காட்டல்கள், நோன்பு, பெருநாள் பிறை அறிவித்தல் போன்ற சில வரையறுக்கப்பட்ட வேலைத்திட்டங்களோடு மட்டுப்படுத்தப்பட செயற்பாடுகளையே முன்னெடுத்து வந்தது.

இதை விட அக்காலத்தில் மக்களுக்கு இன்று போல் அரசாங்கத்தால் ஏற்படும் பிரச்சினைகளோ, அல்லது வேறு வகையின பல்வேறுபட்ட முஸ்லிம்களின் கல்வி சார்ந்த, அல்லது அரச தொழில் சார்ந்த பிரச்சினைகளோ ஏற்படவில்லை. ஆங்காங்கே காலத்திற்கு காலம் சிற்சில இனவாத ரீதியிலான பிரச்சினைகள் ஏற்பட்டபோது அக்கால முஸ்லிம் பிரதி நிதிகளும் ஆட்சியாளர்களும் அவ்வப்போது முளையிலேயே கிள்ளி எறிந்தனர்.

காலப் போக்கில் முஸ்லிம் மக்களின் தேவைகளும் பிரச்சினைகளும் அதிகரித்தது. ஆனால் அதற்கேற்றவாறு அவற்றை எதிர் கொள்ளக் கூடியவாறு முஸ்லிம் தலைமைத்துவமான ACJU பிரச்சினைகளுக்கும் காலத்திற்கும் ஏற்றவாறு தேவைகளை ஆராய்ந்து அதற்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் பன்முகப்படுத்தப்படவில்லை. இது பற்றி இதுவரையில் முஸ்லிம் சமூகம் தூரநோக்குடன் சிந்திக்கவுமில்லை.

உதாரணத்திற்கு எழுதப்படப்போகும் புதிய ஆரசியல் யாப்புக்கு தமிழ் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு முன்வைக்க, சட்ட ஆலோசனைகளையும் வரைபுகளையும் தமிழ் சமூகம் தயாரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை பாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் அண்மையில் தொலைக் காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவி்த்தார். இந்நிலையில் நம் தலைமை வட்டிலாப்பத்துடன் மண்டியிடுகின்றதையும், அதை மறைக்க இன்னொரு கூட்டம் போராடுவதையும் நாம் காண்கின்றோம். எதுக்கோ போராட வேண்டிய சமூகம் எதுக்கோ போராடுவதா?

நம் நிலமை இவ்வாறிருக்க 1924 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ACJU அதே சட்ட அமைப்புக்களோடு மட்டும் சிறு சிறு விரிவு படுத்தல்களுடனே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இது காலத்தினதும் மக்களின் தேவைக்கும் பிரச்சினைக்கும் ஏற்றாற் போல், அவற்றை முகங் கொடுக்க பல் துறை சார்ந்த வல்லுநர்களை அங்கத்தவர்களாக உள்வாங்கி, சேவைகளும் அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டு பன்முகப்படுத்தப்படவில்லை. இதற்கான வாய்ப்புக்களை தலைமைகள் ஏற்படுத்தி கொடுக்கவுமில்லை. காலஞ்சென்ற முஸ்லிம் பெருந்தகைகள் சமூக கெளரவம், நலன், சமூக விஸ்வாசம் நம்பிக்கை கருதி, உலமா தலைமையாக வேண்டும் என எழுதி வைத்தார்களோ, அதே இன்று முஸ்லிம் சமூகத்தின் மானத்தையும் மரியாதையையும் வாங்கி, முஸ்லிம்களை தலைகுனிய வைத்து சமூக முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பதை காண்கிறோம். மேலும் இந்த வாய்ப்பை சிலர் சொந்த வாழ்க்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு தெய்வீக வரப்பிரசாதமாக பயன்படுத்திக் கொண்டதை சம காலத்தில் நாம் காண்கிறோம்.

இதன் பிரதிபளிப்பே இன்று முஸ்லிம் சமூகம் பேச ஆளின்றி நாதியற்று போய் கொண்டிருக்கும் நாதியற்ற நிலைக்கு முதல் காரணமாகும்.

நான் இதை எழுதுவதற்கு முதல் சமூகத்தில் பல படித்த வயது வந்த சமூக சேவைக்கு உழைக்கும் முதியவர்களிடமும், சில சமூக முக்கியஸ்தர்களிடமும், இது பற்றி கதைத்த போது, அவர்களிடம் இருந்து வந்த பதில்கள் உண்மையில் கவலை தருகின்றன.

அவர்கள் கூறியவை.

அதாவது, “நீங்கள் சொல்கின்ற ஆலோசனைகளை நாம் சுமார் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பே தெரிவித்து விட்டோம். அன்றிருந்த தலைமையே இன்றும் இருக்கின்றது. ஆனால் அதில் உள்ள தலைமைகள் அதற்கு இடமளிப்பதில்லை. அதற்குள் படித்தவர்கள் துறை சார்ந்த வல்லுநர்கள் தலையிடுவதை அவர்கள் விரும்புவதில்லை. சமூகம் சம்பந்தமான கவலை உள்ள யாரும் அதில் தற்போது இல்லை. ஒரு சிலரின் சொந்த வாழ்க்கையின் நலன், பதவிகள் கருதியே அது நடாத்திச் செல்லப்படுகிறது. மேலும் ACJU வின் யாப்பில் ஒரு உலமாவே தலைவராக வரவேண்டும் என எழுதப்பட்டுள்ளது.

தலைமைத்துவத்திற்கு வரும் உலமாவிற்கே சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதால், அவர் இன்னொரு தலையீட்டினை விரும்புவதில்லை. எனவும் பலர் இது விடயமாக பலர் முயற்சி செய்து கலைத்து விட்டதாகவும்.” மிகவும் மன ஆதங்கத்தோடு தெரிவித்தார்கள்.

ஆக நாட்டில் முஸ்லிம்களுக்கு நடக்கும் சட்டம் சம்பந்தமான அசாதாரணங்கள் அரசியல் சம்பந்தமான, இராணுவ, பொலிஸ் சுகாதாரத்துறை, அரச தொழிற்துறை, கல்வித்துறை மற்றும் ஏனைய அனைத்து துறைகளில் பிரச்சினை வந்த போதிலும், முஸ்லிம் தலைமைத்துவம் என்ற வகையில் அதிகார பூர்வமாக முஸ்லிம் அரசியல் தலைமைகளையோ, உரிய அமைப்புக்களையோ அணுக அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்கும் வழிமுறைகள் ACJU வில் இல்லை. அவ்வாறு இருந்தாலும் அதற்கும் உலமா தலைவரே ஆலோசனையும் முடிவும் எடுக்க வேண்டியுள்ளதால் ஒரு உலமாவின் அறிவையும் அனுபவத்தையும் வைத்து இது எவ்வளவு தூரம் சத்தியப்படும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

அதாவது கல்வித்துறை சார்ந்த, அல்லது முஸ்லிம் சட்டம் அல்லது முஸ்லிம் உரிமைகள் சம்பந்தமாக, அல்லது அரச தொழிற்துறை சம்பந்தமாக முஸ்லிம்களுக்கு வரும் அசாதாரணம் சம்பந்தமாக, உரியவரை அணுக ஒரு ஆலோசனையை ஒரு உலமா முடிவு எடுக்க முடியுமா ?

உதாரணத்திற்கு தலைவரின் சாம்பலையும் வட்டிலாப்பத்தையும் நோக்கும் போது, தலைமையின் நிலை தான் இது என்றால், சீடர்களின் நிலை அல்லாஹ் தான் அறிவான். தக்க தருணத்தில் தட்டிக்கேற்காத
ஏனைய உறுப்பினர்கள் தலைவரின் தாளத்திற்கு மேளம் தட்டும் இவர்களின் மீதுள்ள நம்பிக்கையும் மரியாதையும் அற்றுப் போகின்றது.

நேர்மைக்கும் நீதிக்கும், முன் நிற்கவேண்டிய உதாரண புருஷர்கள் உயிரற்று தலைமையின் முன் தட்டிக்கேற்க துணிவின்றி, உருக்குலைந்து அறிக்கை விட்டு, தகுதி அற்ற தலைமையை காப்பாற்ற முனைவது படித்த படிப்பிற்கே கேவலமாகும்.

இதைவிடவும் தட்டிக் கேட்பவரை தண்டிக்க முனைவது இஸ்லாமிய வழிமுறை அல்லை. இது அதிகாரத்தின் உச்ச வரம்பை, எல்லை மீறிய ஒரு அராஜகத்தின் அடையாளமாகும்.

ஆகவே இன்று ஏற்பட்டிருக்கும் பல் வேறுபட்ட பிரச்சினைகளை அணுகும் விதத்தில் பல் துறை சார்ந்த அனுபவசாலிகள் உள்வாங்கப்பட வேண்டும்.

கல்வி ரீதியிலான பிரச்சினைகள் வரும் போது அதை அணுக சமூகத்தில் உள்ள படித்தவர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் உள்வாங்கப்பட்டிருத்தல் வேண்டும்.

பொலிஸ் இராணுவ பிரச்சினைகள் என வரும் போது சமூகத்தில் உள்ள மூத்த இளைப்பாறிய அனுபவமுள்ள துறை சார்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டிருத்தல் வேண்டும்.

ஆக வருங்கால பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அவற்றை எதிர்நோக்கும் விதத்தில் ஒரு சமூகத்தை சிறந்த சமூதாயத்தை சிறந்த வழியில் தாங்கிச் செல்லும் நிலைமைகளை உருவாக்க, செயல் திட்டங்களை செயல்படுத்தும், செயல் திட்டங்கள் கொண்ட அமைப்பாக சமூக நலன் கருதிய பன்முகப்படுத்தப்பட்ட அமைப்பாக புனர்நிர்மானம் செய்யப்பட வேண்டும்.

அதேபோல் சட்டம், வைத்தியம் என பல் வேறுபட்ட பிரச்சினைகளையும், சகல துறைகளிலும் அனுபவம் வாய்ந்த அறிவாளிகளின் ஒன்றியமாக ACJU பன்முகப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தி மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறான ஒரு சட்டபூர்வமான அமைப்பில் படித்தவர்கள் அடங்காத, இல்லாத குறையே இன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும்.

இன்று முஸ்லிம்களின் விவசாய காணிகள் தொல்பொருள் சட்டத்தின் கீழ் அபகரிக்கப்படுகின்றன. அந்த வறிய மக்களை திரும்பிப்பார்க்கவும் நாதியில்லா நிலவரம். இதுவும் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பாரிய பிரச்சினையே இதைப் பற்றி பேச நாதியில்லை. இதுவும் ஒரு சமுதாய பிரச்சினை என்பதை தலைமைகள் உணர தவறியுள்ளன. இப்படியான ஒரு பிரச்சினை அப்பகுதி மக்களுக்கு இருப்பது தலைமைகளுக்கு தெரியுமோ என்னவோ அல்லாஹ் அஃலம்.

எனவே நானும் இந்த சமூகத்தில் ஒரு முஸ்லிமாக பிறந்தவன் என்ற வகையில், எனக்கும் சமூகத்தின் மீது ஒரு கடன், கடமை இருக்கின்றது என்ற வகையில் இது சம்பந்தமாக கதைத்து, ஒரு ஆக்க பூர்வமான ஆலோசனையை முன்வைக்க, பல தடவைகள் முயற்சி செய்து தலைவரை தொடர்பு கொண்டேன்.

நடந்தது என்ன அடுத்த பதிவில் தொடர்கிறேன்

தொடரும்
பேருவளை ஹில்மி

One Reply to “முஸ்லிம் மக்களின் உடனடித் தேவை ACJU பன்முகப்படுத்தப்பட வேண்டும்”

Leave a Reply

Your email address will not be published.