சுதந்திரம்

  • 20

எல்லோர் வாழ்விலும்
இயற்கையாக தேவைப்படுவது
சுதந்திரம்

பறவைகள் சிறைப்பட்டு
கூண்டில் கிடக்க – அதன்
பார்வை ஏக்கம்
நம்மை கலி கொள்ள
திறந்து விடும் எண்ணம்
நம்மில் நிழலாய் ஓடும்

நம் நாடும் சிறைப்பட்டு
நிலமும் வளமும்
அந்நியர் வசமாக

திருநாட்டு மக்களின்
ஒற்றுமை அர்ப்பணிப்பு
வழிகோலியது சுதந்திரத்திற்கு

நாடு நமக்குரித்தாக
மலர்ந்தது தேசியுணர்வு
வேரூன்றியது நாட்டுப்பற்று

ஒன்றுபட்ட உயிர்ப்பித்த
திருநாட்டில்
இன்றும் ஒன்றுபட்டு
என்றும் ஒன்றாயிருங்கள்

உலகை வென்று
அச்சுறுத்தலை அழிக்க
ஒன்றுபடலே ஒளியாயிருக்கும்

நாட்டை நேசித்து
கண்ணாய் காத்து
ஜாதி மதம் மறந்து – நாட்டை
ஜொலிக்க செயற்படுவோம்

Binth Ameen
Tr (BA)
SEUSL

எல்லோர் வாழ்விலும் இயற்கையாக தேவைப்படுவது சுதந்திரம் பறவைகள் சிறைப்பட்டு கூண்டில் கிடக்க – அதன் பார்வை ஏக்கம் நம்மை கலி கொள்ள திறந்து விடும் எண்ணம் நம்மில் நிழலாய் ஓடும் நம் நாடும் சிறைப்பட்டு…

எல்லோர் வாழ்விலும் இயற்கையாக தேவைப்படுவது சுதந்திரம் பறவைகள் சிறைப்பட்டு கூண்டில் கிடக்க – அதன் பார்வை ஏக்கம் நம்மை கலி கொள்ள திறந்து விடும் எண்ணம் நம்மில் நிழலாய் ஓடும் நம் நாடும் சிறைப்பட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *