முஸ்லிம்களின் எதிரிகள் யார்? துரோகிகள் யார்?

  • 11

முகத்தில் குத்தும் எதிரியையும் முதுகில் குத்தும் துரோகியையும் இனம் கானாததே முஸ்லிம் சமூகம் அனுபவிக்கும் பிரச்சினைக்கு இன்று முதற் காரணம். எதிரியை விட துரோகியே பயங்கரமானவன்.

எதிரி என்பவன் நம்மை எதிர்த்து நம் முன் நேருக்கு நேர் முன் வந்து எமது விடயங்களை எதிர்பவனே எதிரி. இது சமூக ரீதியிலாகவும் இருக்கலாம் தனிப்பட்ட விடயமாகவும் இருக்கலாம்.

துரோகி என்பவன் நம்முடனே இருந்து, நமக்குளே இருந்து, நமது நிலை அறிந்து நமக்குல் குழி பறிப்பவனே நமது துரோகி. ஆக எதியைவிட துரோகியே பயங்கரமானவன். எதிரியை சமாளிக்கலாம் துரோகியை சமாளிக்க முடியாது. இதுவே உலக நியதி.

அண்மைக் காலம் முதல் முஸ்லிம் சமுகம் தமது உரிமைகள், மார்க்க விவகாரம் சம்பந்தமான பிரச்சினைகளையும் எதிர்ப்புக்களையும் எதிர் நோக்கி வந்தாலும், நமது உரிமைகளை பெற்றுக் கொள்வதிலும்
மார்க்க கடைமைகளை செய்வதிலும், எந்த அரசியல் கட்சியாயினும் இன்று இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு பொதுவான எதிர் போக்கு உடையவர்களாவே காணக்கூடியதாக உள்ளது. இதில் இன்று கட்சி வேறுபாடு நிறவேறு பாடு என்ற பிரிவினை இன்றி முஸ்லிம்களை எதிர்கும் விடயத்தில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையிலயே செயற்படுவதை காணமுடிகின்றது.

அண்மையில் நடந்த திருத்தச் சட்ட மூலத்தில் முஸ்லிம்களின் உரிமைகளுக்கும், மத அனுஷ்டான விடயங்களுக்கும் ஆப்பு வைக்கும் விதத்திலான பிரச்சாரங்கள் முன்னெடுக்ப்பட்ட நிலையில் முஸ்லிம் சமூகத்தில் இருந்து இது சம்பந்தமாக பாரிய எதிர்பலைகள் தோன்றின. இந்நிலையில் சில முஸ்லிம் கட்சி உறுப்பினர்கள் முஸ்லிம்களின் விறுப்பத்திற்கு மாறாக செயட்பட்டதை நாம் கண்டோம்.

தற்போது இந்நாடகம் மக்களின் சிந்தனைத் திறையரங்குகளில் திறையிடப்பட்டுள்ள நிலையில், நாடகத்தின் பின்னனி இயக்குனர்களினதும் அமைப்பளர்களினதும் நடிகர்களினதும் வேசங்கள் வெழுக்கத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் முஸ்லிம் மக்களின் உரிமைமைகளுக்கு குறிவைக்கும் வேடர்களுக்கு அம்பாய் அமைந்தது நம் அரசியல் தலைமைகள்தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. திருத்தத்திற்கு
ஆதரவு அளித்தோருக்கு வாக்களித்ததை வழங்கிவிட்டோம். என, அரசின் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் அறிவித்துள்ள நிலையில், உண்மை வெளிவரக்காரணம் லாபப் பகிர்வில் நடந்த பிழையா?

அவ்வாறாயின் மேடை மேடையாய் ஆட்சியாளர்களை, நமது எதிரியாய் காட்டி, நமது உஷ்ணத்தில் குளிர் காய்ந்த, சந்தர்ப்பம் காத்து முதுகில் குத்திய எதிரிகளா இவர்கள்? எதிரியைவிட பயங்கரமானவர்கள் இவர்கள். இனியாவது நம் சமூகம் எதிர்கால நலனை கருத்தில் கொண்டாவது விழிப்படைய வேண்டும்.

முஸ்லிம் அரசியல் நிலைமை அவ்வாறாயின், ஆன்மீகத்தில் அதைவிட கேவலமும் துரோகமும். சமூக அக்கரையுடன் உரிமைக்காக மார்க்க கடமைக்காக போராட வேண்டியவர்கள், அதற்காக கடமைப்பட்டவர்கள், அவற்றை பாதுகாப்போம் என மக்களிடம் வாக்குறுதி அளித்து, பதவி ஏறியவர்கள் அதற்காக போராடாமல், அரசியல்வாதிகளின் கால்களில் விழுந்தாவது பதவியையும் வரப்பிரசாதங்களையும் பாதுகாத்துக்கொள்ளவும், அனுபவிக்கும் அதி உயர்தர வாழ்கையை பாதுகாத்துக் கொள்ள எரித்தாலும் பரவாயில்லை, பொரித்தாலும் பரவாயில்லை என அரசியல் வாதிகளின் முடிவுகளுக்கு அங்கீகாரமளித்து மார்க்கத்தில் இல்லாதை உள்ளதென்றும், உள்ளதை இல்லாதது என்றும், உரிமைக்காக போரும் வேண்டாம் போராட்டமும் வேண்டாம் என, சாம்பலை கொடுத்தாவது சமூகத்தை சமாளித்து மக்களை மடயர்களாக்கும் மந்திரவாதிகளாக போராடுகிறது ஆன்மீகம்.

இவர்கள் இரு தரப்பும் இன்று அப்பாவி முஸ்லிம் சமூகத்தின் முதுகில் குத்தும் துரோகிகளே.

இவர்கள் தத்தமது தனிப்பட்ட வாழ்கையின் வெற்றிக்காக முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியில் மும்முரமாய் விளையாடும் விளையாட்டு வீரர்களே. இதை இந்த சமுகம் சிந்திக்க தவரும் வரையில் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதி என்பது கனவே.

பேருவளை ஹில்மி

முகத்தில் குத்தும் எதிரியையும் முதுகில் குத்தும் துரோகியையும் இனம் கானாததே முஸ்லிம் சமூகம் அனுபவிக்கும் பிரச்சினைக்கு இன்று முதற் காரணம். எதிரியை விட துரோகியே பயங்கரமானவன். எதிரி என்பவன் நம்மை எதிர்த்து நம் முன்…

முகத்தில் குத்தும் எதிரியையும் முதுகில் குத்தும் துரோகியையும் இனம் கானாததே முஸ்லிம் சமூகம் அனுபவிக்கும் பிரச்சினைக்கு இன்று முதற் காரணம். எதிரியை விட துரோகியே பயங்கரமானவன். எதிரி என்பவன் நம்மை எதிர்த்து நம் முன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *