ஜம்மியத்துல் உலமாவின் நடவடிக்கை சரியானதா?

  • 8

ஜனாஸா எரிப்பு சம்பந்தமாக எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று கட்சி பேதம், மார்க்கக் கொள்கை வேறுபாடுகள் அனைத்திற்கும் அப்பால் ஒன்றுபட்டு நடாத்தப்பட வேண்டும் என்று பல பகுதியில் இருந்தும் கலிமாவின் சொந்தங்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க, கடந்த 23 ஆம் திகதி 3.30 மணி முதல் மாலை 5மணி வரை தலை நகரம் அதிர்ந்து போகும் அளவிலான கவனையீர்ப்புப் போராட்டம் நாட்டின் பல பகுதியிலும் உள்ள மக்கள் இஸ்லாமிய அமைப்புகள் தொன்டு நிறுவணங்கள் அனைத்தும் பங்கு கொண்ட நிலையில் அனைத்துத் தரப்பும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக நடாத்தி முடித்தனர்.

அதேவேளை ஏற்பாட்டுக் குழுவினரால் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கும் இதில் கலந்து கொண்டு ஜனாஸா எரிப்பு எதிர்ப்புக்கான ஆதரவை தந்து உதவுமாறு ஏற்பாட்டாளர்களால் ஜம்மீயாவின் செயலாளர் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதில் அவர்கள் கலந்து கொள்ளவோ, அல்லது மக்களை கலந்து கொள்ளும்படி வேண்டி அறிக்கைகள் விடவோ இல்லை.

அவர்கள் மொளனமாக இன்னொரு சமூகத்தின் பிரச்சினை போல், தம் நிலையில் இருந்து விட்டனர். இது தம் தலைவரினால் ஏற்பட்ட பிரச்சினை என்பதையும் மறந்து விட்டனர்.

அதேவேளை நாட்டின் பல பகுதிகளில் கபன் சீலைப் போராட்டம் என்று தொடங்கப்பட்டு போராட்டம் தொடர்ந்தும் நடை பெற்ற நிலையில், சில அமைப்புக்களால்நடாத்தப்பட்ட ஆர்பாட்டத்திற்கு மக்களை கலந்து கொள்ள வேண்டாம் கொரோனா தொற்றிவிடும் எனவும் அறிக்கை விட்டு மக்களை தடுத்தார்கள். அத்தோடு அவர்கள் ஜனாஸா எரிப்பு சம்பந்தமாக எந்த வித போராட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை.

இவர்களின் உண்மை முகம் என்ன?

இவர்கள் ஜனாஸா எரிப்பிற்கு ஆதரவா அல்லது தலைவர் சாம்பலை அடக்க மார்க்கத்தில் அனுமதி உண்டு என அரசுக்கு சார்பாக சமூகத்தை ஏமாற்றியதை நியாயப்படுத்துவதா?

இந் நிலையில் அத்தனை ஜனாஸா விடயங்களிலும் மௌனம் காத்த இவர்கள், தற்போது கிறிஸ்தவ மக்களால் உயித்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நியாயம் கேட்டு நடாத்த இருக்கும் கருப்பு ஞாயிறு தினத்தை ஆதரித்து ஜம்மியதுல் உலமாவின் செயலாளர் அறிக்கை விட்டிருப்பது நியாயமானதா?

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால் இவர்களின் செயல் முஸ்லிம் மக்கள் விடயத்தில் நியாயமற்றதே. இவர்களின் செயலில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் விழிப்பாக இருத்தல் வேண்டும்.

ஜனாஸா எரிப்பு சம்பந்தமாக எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று கட்சி பேதம், மார்க்கக் கொள்கை வேறுபாடுகள் அனைத்திற்கும் அப்பால் ஒன்றுபட்டு நடாத்தப்பட வேண்டும் என்று பல பகுதியில் இருந்தும் கலிமாவின் சொந்தங்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க,…

ஜனாஸா எரிப்பு சம்பந்தமாக எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று கட்சி பேதம், மார்க்கக் கொள்கை வேறுபாடுகள் அனைத்திற்கும் அப்பால் ஒன்றுபட்டு நடாத்தப்பட வேண்டும் என்று பல பகுதியில் இருந்தும் கலிமாவின் சொந்தங்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *