கொடபிடியவில் நடுப்பகலில் திருட்டு – மாணவன் ஒருவன் சந்தேகத்தில் கைது
அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட கொடபிடிய கிராம சேவகப் பிரிவில் நேற்று (24.01.2018) பிற்பகல் திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவமானது, நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் கொடபிடியவில் வயலோரமாகவுள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவத்தில் வீட்டுரிமையாளரின் மனைவியின் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதென சந்தேகிக்கத்தின் பேரில் பதினைந்து வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருடையதென சந்தேகிக்கப்படும் செருப்பொன்றும் வயலில் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொள்கின்றனர்.
பச்சைப்பசேல் என்ற வயல்வெளியையும் பாய்ந்தோடும் நில்வள கங்கையையும் கொண்ட, ஊரின் நடுவே கொங்ரீட் வனாந்தரமாக அக்கிராமமும் நகரமயமாகின்றதுக்கு சான்றாக பல கட்டிடங்களையும் கொண்ட சன அடர்த்தி மிக்க ஊரே கொடபிடிய. அன்று (25.01.2018) அப்பிரதேச சமூகத்திலும் சமூகவலைத்தளங்களிலும் பிரதான செய்தியாக அமைந்திருந்தது அந்த திருட்டுச் சம்பவமாகும்.
இன்று அதில் சந்தேகநபர் சார்பாக நீதிமன்றத்தில் வாதட திட்டமிட்டுள்ள சட்டத்தரணி அப்துல் ராஸிக் நடந்த சம்பவங்களை ஒருமுறை மீட்டிப்பார்த்தான்.
ஊரில் கடும் கோடை காலம் மாணிக்கம் அகழ்ந்து தேய்வடைந்து முதலைகளின் வசிப்பிடமாக மாறியுள்ள நில்வள நதியும் வற்றியேருந்தது. நில்வள நதி வற்றினால் அனைத்து முதலைகளும் ஆற்றை விட்டு குடியகழும். ஊர் மக்களோ ஆற்றிற்கு குடிபெயரும்.
ஓராண்டுக்குள் திருமணமாகி ஊரின் எல்லையில் புதிதாக வயலோரத்தில் குடிபுகுந்தவர்களே இஸ்பஹான் சாரா தம்பதியினர். கோடைக்காலம் என்பதால் இஸ்பாஹான் சாரா தம்பதியினரும் ஊரின் தென் எல்லையில் உள்ள ஆற்றின் பள்ளித்துறைக்கு ஆடை துவைக்கவும் நீராடவும் சென்றனர்.
ஆற்றிற்கு சென்ற ஜோடிகளோ எவரும் இல்லாதால் பழைய நிகழ்வுகளில் மூழ்கினார்கள்.
“நாங்க சின்னத்துல ஸ்கூல்உட்ட ஆத்துலேதான்”
“இப்பதான் ஆத்துல மொதல, ஊர்ல கிலாஸ் சின்னவங்களுக்கு ஆத்துல இறங்ஙவும் பயம் ஆத்துல இறங்க டய்மும் இல்ல.”
“அதுதான் இந்த ஆறு ஒரு வளம் ஊர்மக்கள் அதுல குப்பகள கொட்டி இப்ப அது எஙளுக்கே எமனாக வந்துட்ட.”
“ஆமா நம்ம காதல் மொட்டும் மலர்ந்தது இந்த ஆற்றில்தான்”
அப்போது ஆண்களும் பெண்களுமாக ஆற்றிற்கு வந்திறங்வே, இஸ்பாஹான் அவனது நண்பர்களுடன் பிலாக்காய் எடுப்பதற்கு ஆற்றின் அக்கரையில் முஸ்லிம்களுடன் அந்நியோன்னியமாக பழகும் வல்தொப்பியின் வீட்டிற்கு சென்றனர்.
“இந்த ஸைட் தானே பள்ளிகே வத்த?”
“ஓ எகட உம்மும்மா செல்றாதான் பெஸ்ட்டுக்கே இங்கதான் முஸ்லிம்கள் வாழ்த்தாம்”
“தியாரம் கண்டுபிடிச்ச போறகு அடுத்த ஸைட்கு போனாம்.”
“அதுதான் இங்க முஸ்லிம்கள்ட பள்ளியை பாதூகாக்க பாம்பொன்று வாழ்ந்தன்டும் சொல்ற.”
“இப்படி பேசி மட்டுபோத இத பத்தி ஹிஸ்டொரி புக் ஒன்றும் எழுது”
வல்தொப்பியின் வீட்டிற்கு சென்ற நண்பர்கள் அங்கு தேனீர் அருந்தி பலாக்காய் பறித்து வருவதற்குள் மூன்று மணித்தியாலம் கடந்துவிட்டது.
கிராமத்து பாடசாலைக் கால நண்பிகளுடன் சாராவோ தன்னையும் மறந்து ஊர்பலாய் பேசுவதில் மூழ்கியிருந்தாள்.
“சரி சரி கதச்சது போதும், அவசரமாக குளிச்சிட்டு வாங்க தின்னவுமில்ல பசியாக இருக்குது.” என ஆழைத்தான் இஸ்பாஹான்.
குளித்துவிட்டு வீட்டிற்கு சென்ற இஸ்பாஹான் சாரா தம்பதிக்கோ அதிர்ச்சிதான் காத்துக் கிடந்தது. மூடியிருந்த வீட்டின் முன் கதவைத் திறந்து படுக்கையறைக்கு சென்றவுடன் சாராவிற்கு அதிர்ச்சி,
“யா அல்லாஹ்! அலுமாரி திறந்துள்ளது. ஏன்ட சவடிய யாரோ களவாண்டு அல்லாஹ் சவடிய களவாண்டவன் நாசமாகட்டும்”
என அதிர்ச்சியுடன் கட்டிலில் விழுந்து அழுதாள். அங்கே சாராவின் திருமணத்தின் போது மஹராக வழங்கப்பட்ட 400, 001 ரூபா பெறுமதியான தங்க மாலையை காணவில்லை.
உடன் வீட்டின் பின்பகுதியை போய் அவதானித்தால் சமையலறையின் ஜன்னலொன்று உடைந்திருந்தது.
திருடன் இவ்வழியாகத்தான் திருடியிச் சென்றிருப்பான் என ஊகித்துக் கொண்டான். உடனடியாக செயற்பட்ட இஸ்பாஹான் முதலில் அகுறஸ்ஸ பொலிஸூக்கு அழைப்பை ஏற்படுத்தி நடுப்பகலில் ஏற்பட்ட திருட்டைப் பற்றித் தெரிவித்தான்.
அடுத்தாக தனது நண்பர்களுள் ஒருவரான அக்பருக்கு தெரிவித்தான். பத்து நிமிடங்களுக்குள் செய்தி காட்டுத் தீயாகப் பரவி நண்பர்களும் உறவினர்களும் இஸ்பாஹானின் வீட்டுக்கு வரத் துவங்கிவிட்டனர்.
அப்போது நேரம் நாலு மணி, ஊரிற்குள் திருட்டுச் சம்பவம் பற்றி பல வதந்திகளுடன் செய்தி பரவிக் கொண்டிருந்த சந்தர்ப்பம்.
ஆமினாவோ தன் மகன் அஸ்லமை தேடிக் கொண்டிருந்தான்.
ஆமினாவோ மூட நம்பிக்கை மற்றும் மந்திரீகங்களில் நம்பிக்கை அதிகம். அவனது மகனோ படிப்பில் பின்னுக்குத்தான் பாடசாலையில் யார் எதைச் செய்தாலும் சந்தேக நபர்களின் பட்டியலில் முதல் பெயர் அவனுடையதுதான். தன் மகனைத் தேடியவாறு ஆமினாவும் பிரதான வீதியிற்கு சென்றாள்.
அப்போது எதிரே வீதியில் ஆயிஷாத்தும்மா வந்து கொண்டிருந்தாள்.
“ஆமினா யார தேடுற”
“மகனத்தான்”
“ஓன்ட மகன் வெல்ன ஒம்பது மணிக்கெல்லாம் நாங்க ஆத்துல உடுப்பு கழுவச்சல்ல கொடவத்த துறயில இறங்கின. இப்ப நான் போறத்தொட்டக்கு மருந்து எடுக்க போன. வரச்சல்ல பானஸ்ஸ துறயில குளிச்சான்.”
“ஓ அதுதான் ஸ்கூலுக்கு பேய்த்து யாரோ ஸேர் ஏசினண்டு பாய்ஞ்சி பேய்த்து கொடாத்த துறயில குளிச்ச. நான் பண்ணண்டு மணிக்கேல்லாம் போய் கூட்டிவந்த. ஒரு மணிக்கு சாத்திரகாரன் வந்து மந்திரிச்ச அப்படியே அவனோட போன இன்னும் வரல்ல. வெல்ன ஆத்துல செருப்பையும் மிஸ் பண்ணி” என செல்ல முற்பட்ட ஆமினாவை நிறுத்தி தொடர்ந்தும் பேசத் துடங்கினாள் ஆயிஷத்தும்மா.
“கேள்விப்பட்ட சத்தார் ஹாஜிட மகள் ஸாராட ஊட்டுல தங்க சாமன் களவாண்டியாம்.”
“ஓ கேள்விப்பட்ட, நவ்பர்ட வேலபோல, ஆறு லட்சம் ருவட மால ஒன்டும். சல்லி ஒரு லட்சமும் களவாண்டியாம்.” என தன் காதுக்கு எட்டிய செய்திகளை புலனாய்வுத் தகவல்போல் வெளியிட்டாள் ஆயிஷத்தும்மா.
“பாவம் யாருக்கு செய்த அநியாயமோ தெரிய” எனக் கூறியவளாக தன் மகனைத் தேடி பிரதான வீதியருகே உள்ள பானஸ்ஸ துறை நோக்கிச் சென்றாள் ஆமினா.
இஸ்பஹானின் வீட்டைச் சுற்றி பலரும் பல திசைகளிலும் தேடலில் ஈடுபட்டனர்.
உறவினரும் நண்பனுமான அர்க்கம் வீட்டின் பின் கதவுழியாக வயலோரம் நெடுகே தேடிச் சென்றான் அப்போது ஊரிடத்தில் செருப்புபொன்றும், பத்துரூபாய் காசொன்றும் காணப்பட்டது. தடயங்களாக அதனை குறித்துக் கொண்டான் அர்க்கம்.
பஸ்ஸில் வருவது என்றாலும் நகரிலுருந்து அரை மணித்தியாலத்தில் ஊரிற்கு வந்திடலாம் ஆனால் பொலிஸ் அங்கு வருவதற்குள் இரண்டு மணித்தியாலம் கடந்துவிட்டது.
பொலிஸ் விசாரணை ஆரம்பமாகியது.
“எப்போது திருட்டு நடந்தது?”
“பதினொருமணிக்கும் மூன்று மணிக்கும் இடையில்.”
“அப்போது வீட்டில் யாரும் இல்லையா?”
“ஊட்டுல நானும் வைபும் மட்டும்தான் அக்கம் பக்கத்தில ஊடுகளும் இல்ல. பதினொரு மணிக்கெல்லாம் ஆத்துக்கு போன வரச்செல்ல மூனு மணி”
“யாரையாச்சும் சந்தேகமா?”
“இல்ல அபிடி ஊர்ல கோவமான யாரும் இல்ல.”
“களவாண்டியுள்ள மாலையின் பெறுமதி?”
“நாலு லட்சம் ருவ”
“மாலையின் அடையாளம்? “
“சாரா என்ற பெயர்ல ஒரு பெண்டனோட, 22 கரட் தங்க மால”
“ஏதாவது தடயம் கிடைச்ச?”
அப்போது அர்க்கம் தான் வயலில் கண்ட செருப்பு பற்றி கூறினான்.
பின்னர் பொலிஸார் மோப்பம் பிடித்து, கைரேகைகளை பதிந்து, சம்பவம் குறித்து தரவுகளையும் பதிந்து கொண்டனர்.
ஊர்மக்களின் தேடலில் அர்க்கமின் கண்டெடுத்த செருப்பு மற்றும் பத்து ரூபா காசைத் தவிர வேறொன்றும் சிக்கவில்லை.
“ஊர்ல உள்ள பெரிய கல்லன் நவுபர் அவன்தான் களவாண்டி இருப்பான்”
“சிங்கள அசல் யார்சரி களவாண்டு இருப்பாங்க”
“ஆத்துக்கு குளிக்க போன டய்ம் ஆத்துல புழுந்தோ தெரிய”
“செருப்ப பார்த்த ஒரு பதினஞ்சி வருஷத்து பொடியன் ஒன்டுட மாறிதான் இருக்கு எதுக்கும் பிரின்ஸ்பல்ட செல்லி ஸ்கூல் புள்ளகளயும் விசாரிச்ச சரி”
“இப்ப ஸ்போர்ட் மீட் ஸீஸன், ஆறும் வத்தி, ஸ்கூல்ல இருந்தும் புல்லயல் பாய்ஞ்சி ஆத்துக்கும் ஊட்டுக்கும் போற அப்படி யார் சரி பொடியன்மார் செட் வந்து எடுத்தோ தெரிய”
“ஊர்ல கஞ்ச காரர் நிறச்சி யார் சரி கஞ்ச வாங்க சல்லி இல்லாம களவாண்டோ தெரிய”
“ஊர் நிர்வாகம் ஒழுங்க இருந்த இபிடி ஒரு களவும் நடாக்காது. தெரியவ ஒரு முற பள்ளி சல்லி முட்டியையும் களவாண்ட தானே”
“நானும் அடிக்கடி காணுஅ அஸ்லம் ஸ்கூல்ல இருந்து பாய்ஞ்சி வார. எனக்கு அவனத்தான் சந்தேகம்”
“அவஙட ஊட்டுக்கும் யாரோ சாத்திர காரணும் டய்லி வந்துட்டு போற”
“ஓ நானும் கண்ட இன்டகி ரெண்டு மணி மட்டுல பைக்ல ரெண்டு பேரும் அகுறஸ்ஸ ஸைட்கு போறத”
என இரவின் ஆரம்ப நேரம் மஹ்ரிபுடைய அதான் ஒலிக்கும்வரை நண்பர்களும், உறவினர்களும் ஆளுக்காள் பலரை சந்தேகப்பட்டவர்களாக பல கதைகளை உருவாக்கி விட்டுப் பிரிந்து சென்றனர்.
என்றாலும் பிரதான தடயமான செருப்பைக் கண்டுபிடித்த அர்க்கம் மற்றும் அவனது உயிர்த்தோழர்களான ஸனத் மற்றும் அர்ஷத் ஆகியோர் குறித்த தடயத்தை வைத்து திருடனை தேட முயற்சி செய்தனர்.
மாணவன் ஒருவனுடைய செருப்பு என்பதை ஊகித்தவர்களாக அர்க்கம் குழு சாதாரண தரப் பரீட்சை எழுதும் வகுப்பில் கெட்டிக்கார மாணவன் அப்துல்லாஹ் வை செருப்புள்ள இடத்திற்கு. அழைத்துச் சென்று காட்டினார்கள்.
அவன் பாடசாலை மாணவத் தலைவர்களுள் ஒருவன் அவனது பொறுப்பு சப்பாத்து அணியாமல் செருப்புடன் வரும் மாணவர்களை பாடசாலை நுழைவாயிலில் விசாரணை செய்து, தகுந்த காரணமின்றி வரும் மாணவர்களின் செருப்புகளை பாடசாலை முடிவடையும்வரை பரிமுதல் செய்து வைத்திருப்பதாகும். எனவே அவனுக்கு அந்தச் செருப்புச் சோடியை அணிந்து வந்தவனை உடனடியாக நினைவிற்கு வந்தது.
“இந்தச் செருப்ப மொர்னிங் ஸ்கூலுக்கு அஸ்லம்தான் போட்டுக்கொண்டு வந்த. அத நாங்க பரிமுதல் செய்தோம். ஆனால் அவன் இன்டக்கி ஒம்பது மணிக்கே பாய்ஞ்சி போன அந்த டய்ம் செருப்ப எடுத்தானோ இல்லையோ தெரிய, ஸ்கூல் உடும்போது செருப்பு இருந்த என்டு பார்க்கல்ல. பொதுவா கேட்டடிலதான்நசெருப்பு எனவே இவினிங் போனாலும் செருப்ப எடுக்கலாம்.”
“சரி நீ போகலாம்”
எனக் கூறிவிட்டு அக்ரம் குழு தடயம் மற்றும் கிடைத்த தகவல்களை மீளாய்வு செய்தனர்.
“அர்கம்! கிடைச்ச இன்போர்மசன் எல்லாத்தையும் வைச்சி பார்த்தால், அஸ்லமும் சாத்திரகாரனும் ரெண்டு மணிக்கெல்லாம் களவாண்டின மாறிதான் இருக்குது.”
“எனகும் அவங்க ரெண்டுபேரையும்தான் டவ்ட்”
“அப நாங்க பெஸ்ட்டுக்கு அஸ்லமை கொண்டுவந்து விசாரிப்போம்”
உடன் செயற்பட்ட அர்க்கம் நேராக பைக் ஒன்றில் அஸ்லமை பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து அழைத்து வந்தான். அதற்குள் ஊரில் மேலும் சில செய்திகள் பரவத் துவங்கின.
“ஸத்தார் ஜாஜிட மகள்ட வீட்டுல களவாண்டினது அஸ்லமாம்.”
“களவு எடுத்த சாமானெல்லாம் சாத்திரகாரன்ட ஊட்டுலயாம்”
“பொலிஸால அஸ்லமை புடிச்சுக் கொண்டு பைத்தாம்”
இதைக் கேள்விப்பட்டதும் கவலைப்பட்டவளாக ஆமினா, திருட்டு இடம்பெற்ற இஸ்பாஹானின் வீட்டிற்கு இரவு பத்து மணியளவில் சென்றாள். அப்போது அஸ்லம் குழுவால் இடம்பெற்ற இரகசிய விசாரணையின் சாரம்சத்தை சாரா கூறத் துவங்கினாள்.
“இன்டகி ஒகட மகன் ரெண்டு மணிக்கெல்லாம், சாத்திரகாரனோட வந்து களவாண்டினாம். சாத்திரகாரன் போற வழியில உகட மகன பானஸ்ஸ துறைக்கி கிட்ட இறக்கீட்டு பைத்திருக்கு. அந்த களவாண்டுட்டு போகச் செல்லாதான் செருப்பு மிஸ்ஸாகியிருக்கு. அதுதான் இப்ப வயலோரத்தில் இருக்குது.” என பட பட வென கூறி முடித்தாள்.
மகன் இன்டகி ஸ்கூலுக்கு செருப்போடாதான் போன ஆனால் அப்படியே ஆத்துக்கு போனா டைய்ம் கொடவத்த துறயில வைச்சி இல்லாபோனன்ட.
ரெண்டு மணிக்கெல்லாம் சாத்திரகாரனோட அவன்ட ஓட்டுக்கு மருந்து செய்யவே போன.”
“எனக்கு தெரிய அவன் அர்க்கம்ட சொல்லிக்கியே அவங்கதான் பின்னுத்து ஜன்னல ஒடச்சி களவாண்ட என்டு”
“இப்ப எங்க ஏன்ட மகன்”
“பொலிஸோட போன, சாத்திரகாரன்ட வீட்டுக்கு”
ஒரு மணித்தியாலயத்திற்குள் சந்தேகத்தின் பெயரில் அஸ்லம் மற்றும், மந்திரவாதி இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். மேலும் இஸ்பாஹான் சாரா தம்பதியினருக்கு நாளை – காலை மாத்தறை மாவட்ட நீதிமன்றத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
காலையாகும் போது சமூகத்தை கடந்து சமூகவலைத்திளங்களிலும் பிரதேச ஊடகங்களிலும் பிரதான செய்தியாக அமைத்திருந்தது குறித்த சம்பவமாகும்.
சட்டத்தரணி, அப்துல் ராஸிக், குறித்த சம்பவத்துடன் தொடர்பான சில தரவுகளை வீட்டையும், பிரதான வீதியின் சில CCTV காணொளி காட்சிகளையும் சேகரித்துக் கொண்டான்.
பகல் 12:00 மணியாளவில் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை தொடுத்த வாதி சார்பாக முன்னின்ற சட்டத்தரணி முஷரப் தனது வாதத்தை முன்வைத்தார்.
“நேற்று இரண்டு மணியளவில் அஸ்லமும் மந்திவரவாதியும்தான் திருடியதாக அஸ்லமே ஒத்துக் கொண்டான். பிரதான தடயமாக அவனது செருப்பு உள்ளது. எனவே அவர்கள்தான் குற்றவாளி”
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அப்துல்ராஸிக்,
“இவர்கள் பாடாசாலை செல்லும் மாணவனொருவனை பயமுறுத்தி குற்றத்தை ஒப்புக் கொள்றுமாறு தான் கூறியதுபோல்தான் உள்ளது. நான் பிரதான வீதியின் CCTV வீடியோ பார்த்த அதில் அஸ்லம் சரியாக 2:05கு பைக்கிள் அகுறஸ்ஸ ஸைட்கு போய் 2:16கு வாரது உள்ளது. ஆனால் போறதிலும் வாரதிலும் அஸ்லம் செருப்பு அணிந்திருக்கவில்லை. எனவே குற்றவாளியாக அவரின் செருப்பை சாட்சியாக கொள்ள முடியாது. அஸ்லமின் தாய் சொன்ன அவன்ட 12:00 மணிக்கெல்லாம ஆத்துல வைத்து செருப்பு இல்லாப் போனன்ட”
எதிர்தரப்பில்
“இஸ்பாஹான் ஆத்துக்கு போன பதினொரு மணிக்கு அப இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பதினோரு பண்ணண்டு மணிக்கு இடையில திருடியிருக்கலாம்.” என இன்னொரு கருத்தை முன்வைத்தார் வாதிகள் சார்பில் சட்டத்தரணி முஷரப்.
“நான் நாலு மணித்தியால விடியோ பார்த்தான் அதில ரெண்டு மணிக்கு முன்னாடி அவங் போனதிற்கு ஆதரம் இல்ல. ஆனால் 11:20இற்கும் 12:35 இற்கு இடையிலும், இந்த 2:20 இற்கும் 2:35 இடையிலும் அஸ்லம், ஸனத், அர்ஷத் மூனு பேரும் போயிருக்காங்க. அடுத்தது நவ்பரும் அந்த ரோட்ல பத்றைக்கு போயிருக்கு எனவே அவங்களும் திருடியிருக்கலாம் தானே.”
“அந்த டய்ம் அந்த மைன் ரோட்ல போனவங்க களவாண்டத்தான் போனன்டு வீடியோவ பார்த்து சொன்னால் நம்ப முடியுமா?”
“நீதிபதி அவர்களே! அஸ்லமும், இவர்கள் சொல்ற மந்திரவாதியும் திருடவில்லை. தேவையெனின் இவர்களின் கைரேகைகளை பரிசோதனை செய்யவும்.”
இறுதியாக நீதிபதியவர்கள்,
“மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி இடம்பெறும். அன்று இருவரினதும் கைரேகளை பரிசோதனை செய்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அஸ்லம் மற்றும் மந்திரவாதி சமரசிங்க ஆகிய இருவருக்கும் பிணையில் செல்ல அனுமதிக்கவும்” எனக் கூறினார்கள்.
31.01.2018 மீண்டும் நீதிமன்றத்தில் இஸ்பாஹான் எதிர் அஸ்லம் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அன்று நீதிபதி விவாதங்கள் இன்றி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கைரேகை பதிவுகள் தொடர்பான பரிசோதனை முடிவை வாசித்தார்.
“இங்கு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்லம் மற்றும் வீரசிங்க ஆகியோரின் கைரேகைகளும் திருட்டு இடம்பெற்ற இடத்தில் பதிவாகியுள்ள கைரேகைகளும் ஒத்துவருவதில்லை. எனவே நீதிமன்றம் இரு சந்தேக நபர்களை விடுதலை செய்வதுடன் குறித்த வழக்கை தள்ளுபடி செய்கின்றது.”
வழக்கு முடிவை கேட்டதும் இஸ்பாஹான் சாராவிற்கோ அதிர்ச்சி. தன் மகன் திருடவில்லை என்பதால், ஆமினாவிற்கோ மகிழ்ச்சி. என்றாலும் அஸ்லம் உட்பட அனுவருக்கும் அந்தச் செருப்பு எவ்வாறு அவ்விடம் வந்தது என்பது பாரிய சந்தேகம்.
ஆமினாவும் மகனும் நீதிமன்றத்தலிருந்து வரும்போது.
“மகன் ஓன்ட செருப்பு எப்படி அங்க போன?”
“அதுதான் தெரிய.”
“நான் வெல்ன ஆத்துக்கு போன டய்ம் அங்க சனத் அய்யவும் குளிக்க வந்தும்மா”
“அது சரி நீ களவான்டன்டே அக்ரம்ட சென்னதாக சார சென்ன”
“என்ன கூடிகொண்டு போய் அவங்க விசாரிக்கல, அர்ஷத் நானாதான் நான் களவாண்ட என்று கதய உருவாக்கி உட்ட”
இரண்டு மாதம் கழித்து,
“ஏய், மால களவுபோய் ரெண்டு மாஸமாகிட்ட, கழத்துல ஒரு மால துண்டாவது இல்ல. வாங்கி தாங்க”
“சரி சரி கவலப்படாதே நாளைக்கு போவோம் மால வாங்க”
மறுநாள் காலியில் ஹஸன் ஜூவலரி இருவரும் சென்றனர்.
அங்கு சென்றவர்களுக்கு காட்சியில் வைக்கப்பட்டிருந்த மாலையொன்றைக் கண்டதும் அதிர்ச்சி. உடன் இஸ்பாஹான் மஹர் வாங்கியபோது, எடுத்த புகைப்படத்தையும் அதனையும் ஒப்பிட்டு பார்த்தனர். அதே சாரா என்ற பெயர் வளையலுடன் அதே வடிவத்தில் தங்கமாலை.
“ஹாஜியார் அஸ்ஸலாமு அலைக்கும்”
“நாங்க மாலயொன்று வாங்க வந்த, ஆனால் ஒரு விசயம் அறிந்து கொள்ளனும்”
“என்ன மாலைட ப்ரைஸ”
“இல்ல ஒங்கள சந்தேகப்படல, இந்த மால எங்கள கிடச்ச” என தன்மனைவியின் திருட்டுப் போன அதே மாலை விற்பனைக்காக வைத்துள்ள இடத்தைக் காட்டிக் கேட்டான்.
“இது மூனு பேர் ஏதோ குடும்ப கஷ்டம் என்று வித்தாங்க”
“அந்த டய்ம்ட CCTV வீடியோ பார்க்க முடியுமா?”
கடை முதளாளியும் தனது கொள்வனவு பட்டியலை அவதானித்து தினத்தை ஊகித்தவனாக குறித்த தின காணொளியை காட்டினான். அதனைப் பார்த்ததும் சாராவிற்கும், இஸ்பாஹானுக்கும் அதிர்ச்சி. அதை விற்பனை செயுவதற்காக அக்ரம் குழுவினரே வந்திருந்தனர்.
இஸ்பாஹான் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அகுறஸ்ஸ பொலிஸூக்கு அழைப்பு எடுத்தான்.
Ibnuasad