எண்ணங்களின் சிதறல்கள்

  • 7

சில சமயங்களில் பல விடயங்கள் மனதை ஆக்கிரமித்து விடுகின்றன – பயம் எதிர்பார்ப்பு வலி இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒன்று மனதை முழுவதுமாக ஆக்கிரமித்து வாழ்வின் சில நாட்களை இரசிக்கத் தவறிய நாட்களாக்கி விடுகின்றது.

மனிதன் ஒன்றும் தனிமையில் இங்கு வாழ்வதில்லையே! அது சாத்தியமும் இல்லை. பல சந்தர்ப்பங்களில் சக மனிதர்களின் ஆதிக்கம் உயர்ந்து நிற்கும். அத் தருணங்களில் சில புரிதல் அற்ற மனிதர்களின் செயல்களில் புரட்சியேதும் இல்லையே! சொன்னால் ஏற்றுக்கொள்ளும் இடத்தில் அவர்கள் இல்லை. சொல்லிப் புரியவைக்கும் நிலைக்கும் எல்லை உண்டல்லவா

சிலரின் அகராதியில் ‘புரிதல்’ என்பது பொருளற்ற வார்த்தையாயிற்றே. ஆனாலும் வாழ்வின் விரக்தியில் இருந்து இருந்து தப்பித்தாக வேண்டுமே! இங்கு வலிகளை வெளிப்படுத்த தனியே மொழியேதுமில்லையே அப்படியே இருந்தாலும் அது மௌனமாகத் தானே இருக்கும். இது தானே வாழ்வின் நியதி.

வாழ்வில் ஏற்படும் இன்னல்களில் பாதி தற்காலிகமானவை மீதி கற்பனையானவை. திருப்பங்களும் எதிர்பாராத நிகழ்வுகளும் கதைகளில் மட்டுமல்ல மனித வாழ்விலும் தான் எனும் வாழ்வின் நிஜ உருவத்தை எப்போது உணர்வது? கனவுகளும் கற்பனைகளும் தானே மாயம் நிறைந்த வாழ்வைத் தருகின்றன.

மனிதனுடைய தேவை தானே அவனுடைய வேலையாகிப் போனது. நம் வாழ்நாள் தேவைகள் ஒருபோதும் தீர்ந்துவிடப்போவதில்லையே! மனதின் மிகப்பெரிய ஆசைகளெல்லாம் மிகச்சிறிய விடயங்களில் தானே உள்ளது. ஏனோ மனம் மட்டும் போலித்தன்மையில் இருந்து விடுபட்டு யதார்த்தத்தை உணர மறுக்கிறது. உணர்ந்தால் பல குழப்பங்களுக்கு என்றோ முற்றுப்புள்ளி வைத்திருக்கலாமல்லவா? யார் மேல் பழி இடுவது உலகம் தான் நினைத்ததை விட பெரியதாயிற்றே.

ஜாஸிரா ஜுனைடீன்
கொழும்பு பல்கலைக்கழகம்

சில சமயங்களில் பல விடயங்கள் மனதை ஆக்கிரமித்து விடுகின்றன – பயம் எதிர்பார்ப்பு வலி இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒன்று மனதை முழுவதுமாக ஆக்கிரமித்து வாழ்வின் சில…

சில சமயங்களில் பல விடயங்கள் மனதை ஆக்கிரமித்து விடுகின்றன – பயம் எதிர்பார்ப்பு வலி இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒன்று மனதை முழுவதுமாக ஆக்கிரமித்து வாழ்வின் சில…