ஊண் என்னும் உணவு

  • 20

சமகால பேசுபொருளாக உயிர்க்கொல்லியான கொரோனாவைப் பற்றியும் அரசியல் விவகாரங்கள் பற்றியும் கேட்டும், பேசியும் சலித்துப்போன எமக்கு ஒரு ருசிகரமான வாசிப்புக்காகவே இக்கட்டுரை.

உடலை குண்டாக வைத்திருப்பதும் இந்த உணவுதான், உடலை ஒல்லியாக வைத்திருக்க உதவுவதும் இந்த உணவு தான், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவதும் இந்த உணவுதான், இப்படிப்பட்ட இந்த உணவுகளில் சில உணவுகளைப்பற்றி சற்று நேரம் அலசி ஆராய்வோம்.

உணவின் பரிமாண வளர்ச்சி என்பது மனிதர்களின் பரிமாண வளர்ச்சியோடு பின்னிப்பிணைந்த விஷயம். பசியை அடக்க உணவு என்பது மாறி ஒரு கட்டத்தில் நாவின் ருசியை அடக்க விதவிதமான உணவு என்று மாறிவிட்டது. பசி இயற்கையானது ருசி என்பது மனித குலத்தின் தேடல். இந்தக் கணம் வரை உலகில் புழங்கும் அத்தனை விதமான உணவு வகைகளும் அந்த தேடலின் விளைவே.

எண்ணி எழுதலாம் என பட்டியல் படுத்த முனைந்தாலும் பட்டியலைப் முழுமைப்படுத்த முடியவில்லை. ஆயிரம், பல்லாயிரம் வகையான உணவின் வகைகள் பிராந்தியந்தோறும் காலந்தோறும் உதித்துக் கொண்டே இருக்கக் கூடிய விடயம். மனித குலத்துக்கு மட்டுமேயான கலை உணர்வு என்பது உணவில்தான் தொடங்குகின்றது. விதவிதமான ருசியான உணவுப் பண்டங்கள் உருவாக்குவதுதான் நமது கற்பனையின் முதல் கன்னி பொருந்தி உள்ளது. நான் பெண், நீ ஆண், என்கின்ற முதல் பகுத்தறிவுக்கு அடுத்தபடி மனிதன் கண்டடைந்தது எது? உண்ணதகுந்தது எது! உண்ணதகாது என்பதுதான். அதன் தொடக்கம் அங்கிருந்துதான் பகுத்தறிவே ஆரம்பிக்கின்றது.

உணவு, உடை, உறையுள் எனும் மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மை வகிப்பது உணவு. இந்த உணவை வீண் விரையம் ஆக்காதீர்கள் என அனைத்து மதங்களும் போதிக்கின்றது. மனித குலத்தின் மனிதநேயமே மனிதனை வளர்ப்பதுதான். பசியோடு இருக்கும் இன்னொரு மனிதனுக்கு உணவளிப்பதுதான் இவைகள் இப்படி இருக்க எம்மில் எத்தனையோ பேர் உணவை வீணாக்குகிறோம். பசியோடு உள்ளவனுக்குத்தான் அது தெரியும். தான் உயிர் வாழ்வதற்கு இந்த உணவு எவ்வளவு முக்கியமானது.

உணவை வீணாக்காதீர்கள் என்ற கருப்பொருளை அனைவரும் சுமந்து கொண்டிருந்தாலும், அதனை யதார்த்தப்படுத்தி இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் இதனை நடைமுறைப்படுத்தி கொண்டிருப்பவர்கள் ரஷ்யர்கள். உணவை வீணாக்குவது என்பதே ரஷ்யர்கள் உடைய சரித்திரத்திலேயே கிடையாது. குறைந்தபட்சம் நூற்றாண்டு கால சரித்திரத்தில் வசதி வாய்ப்புகள் இருந்தும் சாப்பாடு கிடைக்காமல் தவித்த சமூகம் அல்லவா? அவர்கள். இதனாலேயே என்னவோ என்ன தேவையோ அதனை மட்டும் வாங்குவார்கள், எவ்வளவு தேவையோ அதை மட்டும் சமைப்பார்கள். ஒரு துளியும் வீணாக்குகிற பழக்கம் அவர்களுக்கு கிடையாது. மாஸ்கோ நகரத்து பெண்மணிகள் இடையே அவர்களது உணவு பழக்க வழக்கம் குறித்து ஆய்வு நடத்த சென்ற நோர்வே தேசத்து கடலுணவு ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்களை வாயடைத்துப் போகச் செய்த விடையமும் இதுதான். ஒரு பெண்மணி சாப்பிட்டு முடித்தபின் அவரது பிளேட்டை அப்படியே எடுத்து உள்ளே வைத்து அடுத்த வேளைக்கு எடுத்து பயன்படுத்தலாம் போல் அப்படியொரு சுத்தமாக இருக்கும். அநேகமாக எல்லா பெண்களுமே இந்த மாதிரி பிளேட்டை வழித்து, தரையில் சிந்தாமல் சாப்பிடுவது தேவையான அளவு மட்டுமே சமைப்பது என்பதை வழக்கமாக வைத்திருப்பதை பார்க்கலாம்.

சாக்லேட் உருவான வரலாறு

அறுசுவை உணவுகளுக்குள்ளே இன்பகரமான சந்தோஷமான தருணங்களில் பகிர்ந்து கொள்வது இனிப்பு பண்டங்களையே! சிறுவயதில் இருந்து எல்லோருக்கும் பிடித்த இனிப்பு பண்டம் என்றாலே சாக்லேட். அதிலும் மெக்சிகோ சிட்டியில் சாக்லேட் பிடிக்காதவர்கள் இருக்கின்றார்களா? என்று கேட்டாள் பதில் இல்லை என்பது தான். காதலர் தினமாக இருந்தாலும் பிறந்த நாளாக இருந்தாலும் நாம் ஒருவருக்கு ஒருவரிடையே பகிர்ந்துகொள்வது இந்த சாக்லேட்டைத்தான்.

சாக்லெட் வட அமெரிக்காவில் உள்ள மெசோ அமெரிக்காவில் தோன்றியது. முதல் புளித்த சாக்லேட் பானம் பொ.மு 450 க்கு முந்தையது. மெக்ஸிகோவில் பேசப்படும் Nahuatl என்ற மொழியில் உள்ள Xocolātl என்ற சொல்லில் இருந்து உருவானது. சாக்லெட் செய்ய பயன்படுத்தும் கோகோ விதைகள் கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு என்று அந்த காலத்து மெக்ஸிகோவினர் நம்பினர். அது மிகவும் விரைவாக பிரபலமடைந்தது. மெக்ஸிகோவில் வசித்த மாயன்களின் காலத்தில் சாக்லேட் நாணயமாக பயன்பட்டது.

இனி கி.மு-கி.பி இல்லை பதிலாக பொ.மு.-பொது ஆண்டிற்கு முன் பொ.பி.- பொது ஆண்டிற்கு பின் பயன்படுத்தப்படுகிறது.

20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வீரர்களுக்கு சாக்லேட் ஒரு அத்தியாவசிய பொருளாக கருதப்பட்டது. உலக சாக்லேட் தினம் 2009 ஆம் ஆண்டு முதல் ஜூலை 7 ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பொ.பி 1550 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட நாளை நினைவு கூறுகிறது என்றும் சிலர் நம்புகிறார்கள்.

கொக்கோ பீன்ஸ் அல்லது தியோப்ரோமா கொக்கோ மரத்திலிருந்து விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கொக்கோ பழத்தில் 20-60 விதைகள் வரை இருக்கும். இந்த விதைகள் இறுதி தயாரிப்பாக மாற நொதித்தல், உலர்த்துதல், வறுத்தல் மற்றும் அரைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சாக்லேட் ஆரம்பத்தில் பான வடிவில் மட்டுமே உட்கொள்ளப்பட்டது மற்றும் சுவைக்கு மிகவும் கசப்பாக இருந்தது. ஒரு முறை மசாலா மற்றும் சோளம் கூழ் கலந்த ‘சிலேட்’ (Chilate) என்ற பானம் அதில் இருந்து தயாரிக்கப்பட்டது. இது குடிப்பவருக்கு வலிமை அளிக்கும் என்றும் நம்பப்பட்டது.

பொ.பி 1519 ஆம் ஆண்டில், ஆஸ்டெக் பேரரசர் மான்டெசுமா, ஸ்பானிஷ் ஆராய்ச்சியாளரான ஹெர்னான் கோர்டெஸுக்கு Xocolātl என்ற பானத்தை வழங்கினார். கோர்டெஸ் அவருடன் ஸ்பெயினுக்கு மீண்டும் பானத்தை எடுத்துச் சென்று சர்க்கரை, வெண்ணிலா மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றைக் கொண்டு கூடுதல் சுவையைத் தந்தார். இதற்கு பிறகு சாக்லேட் இன்றுவரை உலகை ஆண்டுகொண்டு இருக்கிறது.

ஐஸ்கிரீம் உருவான வரலாறு

அடுத்து சிறுவயதிலிருந்து எல்லோருக்கும் பிடிக்கும் எல்லோரும் விரும்பக்கூடிய இன்னொரு உணவு என்றாலே ஐஸ்கிரீம்தான் ஐஸ்கிரீமை சுவைக்காதவர்கள் யாரும் இல்லை 90% அமெரிக்கர்கள், எப்போதும் தங்களது ஃபிரிட்ஜில் ஐஸ்க்ரீம் வைத்திருப்பார்களாம் ஐஸ்கிரீம் ஐரோப்பிய நாடுகளில் தோன்றியது என்றும், சீனாவில் தோன்றியது என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன.

பொ.மு 400-ம் ஆண்டுகளில், பெர்சிய பேரரசருக்கு மக்கள் விருந்து படைத்தனர். அதில் ஒரு கிண்ணத்தில் பனிக்கட்டி மீது திராட்சை ரசத்தை ஊற்றி, பேரரசருக்கு பரிமாறினர். இந்த உணவு கோடை காலத்தை முன்னிட்டு தயார் செய்யப்பட்டது. இது அரசரை கவர்வதற்காக, இதை மேலும் சிறப்பாக தயாரிக்க முயற்சி செய்தனர். பனிமலையின் உச்சியில் இருந்து பனிக்கட்டியை கொண்டு வந்து, பாதாள அறைகளில் சேமித்தனர்.

பனிக்கட்டியில் பன்னீர், சேமியா, குங்குமப்பூ, பழங்கள் ஆகியவற்றை கலந்து விதவிதமான வகைகளை தயார் செய்தனர். பொ.மு 200-ம் ஆண்டுகளில் பால், அரிசி கலந்த குளுமையான உணவை சீனர்கள் தயாரித்தனர்.

இந்த வகையில் சீன தயாரிப்பான ‘ஸ்னோ ஐஸ்கிரீம்’ பிரசித்திப் பெற்றது. ஐஸ்கிரீம் தயாரிக்கும் கருவியை சீனர்கள் தான் கண்டுபிடித்தனர் தற்போதும் அதிக அளவில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் நாடும் சீனாவே. ரோமானியப் பேரரசர் நீரோ, மலைகளில் உள்ள பழங்களை பறிக்க ஆட்களை அனுப்பினார். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட பழங்களின் மேல் பனிபடர்ந்திருந்தது. பனியுடன் பழத்தை உண்ட பேரரசர் நீரோ, புது சுவையை உணர்ந்தார். பின் பனிக்கட்டியுடன் பழங்களை கலந்து, புதுவிதமான உணவுகள் தயாரிக்க உத்தரவிட்டார்.

இவ்வாறு ஐஸ்கிறீமுக்கு உலகம் முழுவதிலும் பல வரலாறுகள் கூறப்படுகின்றன. இருப்பினும் 18-ம் நூற்றாண்டில் தான் முதன் முதலில் அமெரிக்கா,பிரிட்டன் நாடுகள், ‘ஐஸ்கிறீம்’ என பெயரிட்டு அழைத்தன.

அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், 1984-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதியை ‘ஐஸ்கிக்றீம்’ தினமாக அறிவித்தார். அன்றிலிருந்து ஜூலை மாத மூன்றாவது ஞாயிறு ‘ஐஸ்கிரீம்’ தினமாக கொண்டாடப்படுகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு உணவும் சாதாரணமாக எமது கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. மேற்கூறப்பட்டவாறு ஒவ்வொரு உணவுகளும் மிகப்பெரிய வரலாற்றை தம் கைவசம் வைத்துள்ளது.

இவ்வாறு மனிதனின் அடிப்படைத் தேவையாக இருக்கும் இந்த உணவு உலகுக்கு இறைவனால் வழங்கப்பட்ட மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். அதனை வீண் விரையம் செய்யாது நாம் பயன்படுத்துவோம்.

உசாத்துணைகள்:

  1. “உணவின் வரலாறு” (2010), பா.ராகவன், கிழக்கு பதிப்பகம்
  2. இணையதளம்
C.M.BISMI SAHA
AK/AS-SIRAJ MAHA VIDIYALAYAM
AKKARAIPATTU

சமகால பேசுபொருளாக உயிர்க்கொல்லியான கொரோனாவைப் பற்றியும் அரசியல் விவகாரங்கள் பற்றியும் கேட்டும், பேசியும் சலித்துப்போன எமக்கு ஒரு ருசிகரமான வாசிப்புக்காகவே இக்கட்டுரை. உடலை குண்டாக வைத்திருப்பதும் இந்த உணவுதான், உடலை ஒல்லியாக வைத்திருக்க உதவுவதும்…

சமகால பேசுபொருளாக உயிர்க்கொல்லியான கொரோனாவைப் பற்றியும் அரசியல் விவகாரங்கள் பற்றியும் கேட்டும், பேசியும் சலித்துப்போன எமக்கு ஒரு ருசிகரமான வாசிப்புக்காகவே இக்கட்டுரை. உடலை குண்டாக வைத்திருப்பதும் இந்த உணவுதான், உடலை ஒல்லியாக வைத்திருக்க உதவுவதும்…