புன்முறுவலுடன் மரணத்தை எதிர் கொண்ட புற்று நோயால் மரணித்த சிறுவன் சுதைஸின் ஆலோசனைகள்

  • 5

ஸமீம் மவ்லவியின் அன்பு மகன் சுதைஸ் மரணித்து விட்டார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

பொத்துவில்லைச் சேர்ந்த சமீம் மௌலவின் மகனான இவர். அல் – ஹாமியா அரபுக் கல்லூரியில் அல்குர்ஆன் மனன பிரிவில் கற்கும் மாணவனுமாவார்.

கடந்து இரண்டு வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடும் சோதனையில் வாடிய சுதைஸ் இன்று (13.06.2021) மரணமடைந்துள்ளார்.

திருக்குர்ஆனை மனனம் செய்வதில் கடும் ஆர்வம் கொண்ட சுதைஸ் தனது மரணம் வரை சுமார் 12 ஜுஸுக்களை ஹிப்ழ் செய்திருந்தார். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையில் உறுதியாகவே இருந்தார். பாசமாக பழக கூடியவராகவும் இனிமையாக பேசக் கூடியவராகவும் இருந்தார்.

13 வயதில் குர்ஆனின் 12 ஜுஸ்வுக்களை மனனமிட்டுள்ளார் சுதைஸ். கடைசியாக மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் 2 ஜுஸ்வுக்களை மனனமிட்டிருந்தார்.

இது அனைத்தையும் விட, தனக்கு மரணம் மிகவும் நெருங்கியிருந்ததை அறிந்தும் முகத்தில் புன் சிரிப்புடன், அனைவரும் மரணித்தே தீருவார்கள். அப்படி யாரும் கால காலம் உயிர் வாழ்வதாக இருந்தால் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்திருப்பார்கள். அன்பு நபியே மரணித்து விட்டார். எனவே நான் மரணத்திலிருந்து விதிவிலக்கு பெறுவேனா? என்று தனது தந்தையிடம் கேட்டிருந்தார்.

இறுதியாக ஸுதைஸ் கதைக்கின்ற ஒளி ஒலிப்பதிவை பலரையும் போல் கண்கள் குளமாக பார்த்தபோது அதில் அந்தப் பிஞ்சு நெஞ்சம் சொல்லாத ஆயிரம் வாழ்க்கைத் தத்துவங்கள் செய்திகள் இருப்பதனை உணர முடிந்தது.

குறித்த மாணவனின் அறிவுரைகள் காணொளி

சங்கைக்குரிய ராஹுல ஹிமி தேரர் அவர்களின் அனுதாபச் செய்தி

ஸமீம் மவ்லவியின் அன்பு மகன் சுதைஸ் மரணித்து விட்டார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். பொத்துவில்லைச் சேர்ந்த சமீம் மௌலவின் மகனான இவர். அல் – ஹாமியா அரபுக் கல்லூரியில் அல்குர்ஆன் மனன…

ஸமீம் மவ்லவியின் அன்பு மகன் சுதைஸ் மரணித்து விட்டார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். பொத்துவில்லைச் சேர்ந்த சமீம் மௌலவின் மகனான இவர். அல் – ஹாமியா அரபுக் கல்லூரியில் அல்குர்ஆன் மனன…