உள்ளூராட்சி தேர்தலுக்கு பல மாற்றங்கள்

  • 8

உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான 60 முதல் 40 கலப்பு விகிதாசார முறை தற்போது செயல்பட்டு வருகிறது/ இந்த விகிதத்தை 70 முதல் 30 ஆக மாற்றுமாறு மாகாண சபைத் தேர்தல் மீளாய்வுக் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அதன் பிரகாரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும்போது நூற்றுக்கு 60 தொகுதி அடிப்படையிலும் ஏனைய 40வீதம் விகிதாசார முறையிலும் இடம்பெறுகின்றது.

அதனை நூற்றுக்கு 70 தொகுதி அடிப்படையிலும் நூற்றுக்கு 30 விகிதாசார முறையின் கீழ் என்ற அடிப்படையில் மாற்றயமைக்குமாறு குழு பரிந்துரை செய்திருக்கின்றது.

நிலையற்ற உள்ளூராட்சி மன்ற கட்டமைப்பொன்று ஏற்படுவதற்கு இருக்கும் வாய்ப்பை குறைப்பதே இதன் நோக்கமாகும் எனவும் குழு தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது இருக்கும் 8 ஆயிரம் பேர் வரையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை எதிர்வரும் தேர்தலின்போது 6 ஆயிரத்து 500வரை குறையவேண்டும் எனவும் பரிந்துரை செய்திருக்கின்றது.

தற்போதுள்ள தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தொகையில் தேவையற்ற அதிகரிப்பு இடம்பெற்றிருக்கின்றது. அது ஆயிரத்து 500வரை குறையவேண்டும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை தொடர்பாக மீளாய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழு, அதன் அறிக்கையை  மாகாணசபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் கையளித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. LNN Staff

உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான 60 முதல் 40 கலப்பு விகிதாசார முறை தற்போது செயல்பட்டு வருகிறது/ இந்த விகிதத்தை 70 முதல் 30 ஆக மாற்றுமாறு மாகாண சபைத் தேர்தல் மீளாய்வுக் குழு…

உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான 60 முதல் 40 கலப்பு விகிதாசார முறை தற்போது செயல்பட்டு வருகிறது/ இந்த விகிதத்தை 70 முதல் 30 ஆக மாற்றுமாறு மாகாண சபைத் தேர்தல் மீளாய்வுக் குழு…