சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விசாரிக்க ஒரு தினம்

  • 14

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு குறிப்பிட்ட திகதியை நிர்ணயிக்க நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரன தெரிவித்தார்.

அதற்கான சுற்றறிக்கை, நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஊடாக, சகல மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஜூன் மாதம் 28ஆம் திகதியன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் (03.08.2021) நடைபெற்ற பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், அடிமைத்தனம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்தவும், புதிய சட்டங்களை கொண்டு வரவும் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க உரிய நடவடிக்கைகளைத் விரைந்து ஆரம்பிக்கவும் ஒன்றியம் வழிநடத்தும்” என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தவிசாளர் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.

கடந்த 6 மாதங்களில் 4,740 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஒன்றியத்தின் பிரதி தவிசாளர் ரோஹினீ கவிரத்ன எம்.பி தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு உட்பட்ட எந்தவோர் ஆண் அல்லது பெண் சிறுவர்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிராக சட்டத்தின் கடுமையான அமலாக்கம், சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த சட்டங்களை அமல்படுத்துதல் மற்றும் மிலேச்சத்தனமான சிறுவர் துஷ்பிரயோகம் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சிறுவர்கள் தொடர்பான சில பழைய சட்டங்களைப் புதுப்பித்தல், பாதுகாப்பு தொடர்பில் அனைத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையிலான முறையான ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு குறிப்பிட்ட திகதியை நிர்ணயிக்க நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர்…

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு குறிப்பிட்ட திகதியை நிர்ணயிக்க நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர்…