கொரோனா

  • 19

கொரோனா
நீ எம்மைத் தாக்க வந்த எமனா??
ஹிட்லரின் தங்கச்சி மவனா???

உன்னை முட்டியில் அடக்கி
ஆற்றில் போட்டாங்க…
உன் நல்ல நேரம்,
நீரில் மிதந்து தப்பி வந்தாய்!

பாணியில் பிரட்டி உன்னை
நக்கிடப் பார்த்தாங்க…
உன் நல்ல காலம்,
நாக்கின் ஓரத்தில் புகுந்து
ஓட்டைப் பல்லினூடு காற்றில் பறந்தாய்!

எரித்தாலும் எரியாத எரிமலையே!
புதைத்தாலும் நிலத்தடி நீரில்
கலந்துவிடும் ‘கல்கிரி’யே (කල් කිරි) !

உன் பெயரால் ஏற்பட்ட கடன் கோடி
அதனால் மக்கள் போகிறார்கள் தெருவுக்கு ஓடி

காய்கறிக் காரன் விலையை ஏத்துறான்!
பேக்கரிக் காரன் மாவைப் பதுக்குறான்!

வண்டி விலை வானத்தை தொடுது.
பெற்றோல் தாங்கியில்
பெற்றோல்
அடியைத் தொடுது

கோதுமை மாவோ விலையேறிட்டுது.
பால்மா எடுத்த காலம் மலையேறிட்டுது!

விலைவாசி போகுது
தலைக்கு மேலே ஏறி.
நிலைமை போகுது
கட்டுப்பாட்டை மீறி

வக்சீன் நிலையத்துல கூட்டமா
நிக்கிறாங்க கால்கடுக்க!
அங்கும் யாரும் இல்லை
விதிகளைக் கடைப்பிடிக்க!

கடைசி ஆயுதமாகப் போடப்
போறாங்க பொதுமுடக்கம்!
மீறினால் ஓட்டமாவடியில்
பொது அடக்கம்!

Ifham Aslam

கொரோனா நீ எம்மைத் தாக்க வந்த எமனா?? ஹிட்லரின் தங்கச்சி மவனா??? உன்னை முட்டியில் அடக்கி ஆற்றில் போட்டாங்க… உன் நல்ல நேரம், நீரில் மிதந்து தப்பி வந்தாய்! பாணியில் பிரட்டி உன்னை நக்கிடப்…

கொரோனா நீ எம்மைத் தாக்க வந்த எமனா?? ஹிட்லரின் தங்கச்சி மவனா??? உன்னை முட்டியில் அடக்கி ஆற்றில் போட்டாங்க… உன் நல்ல நேரம், நீரில் மிதந்து தப்பி வந்தாய்! பாணியில் பிரட்டி உன்னை நக்கிடப்…