இன்றைய நற்பணி

  • 18

மனது முழுக்க சோகம்
மனிதனைக் கொல்லும் கொரோனாவால்
மகிழ்ச்சிகள் செத்துக்கிடக்கு
மரணங்கள் மட்டும் மலிந்த வண்ணம்

கைத்தொலைபேசியோ தொல்லையாக
குவிந்து வரும் செய்திகளே
துன்பத்தின் அச்சாணிகள்

கனவுகள் தொலைந்து
பாடசாலைகள் மூடி
போரையொத்த காலமிது
கவலைகள் ஈன்றெடுக்கும் நேரமிது

மனம் மழுங்கியுள்ளதால்
மரத்துப்போனதால்
மகிழ்வை மனம் கேட்கிறது
மீள்வை உள்ளம் நாடுகிறது

நண்பா!
நல்லதை மட்டும் பரப்புங்கள்
நலவை மட்டும் நாடுங்கள்- இன்றைய
நற்பணி என்னவென்றால்
நல்லபடி மனதை காப்பதாகும்

Binth Ameen

மனது முழுக்க சோகம் மனிதனைக் கொல்லும் கொரோனாவால் மகிழ்ச்சிகள் செத்துக்கிடக்கு மரணங்கள் மட்டும் மலிந்த வண்ணம் கைத்தொலைபேசியோ தொல்லையாக குவிந்து வரும் செய்திகளே துன்பத்தின் அச்சாணிகள் கனவுகள் தொலைந்து பாடசாலைகள் மூடி போரையொத்த காலமிது…