சீனி, அரிசி உச்சபட்ச விலை வர்த்தமானி வௌியீடு

  • 9

சீனி, அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (02) முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய

வெள்ளைச் சீனி

  • பொதி செய்யப்படாதது – ரூ. 122
  • பொதி செய்யப்பட்டது – ரூ. 125

சிவப்புச் சீனி

  • பொதி செய்யப்படாதது – ரூ. 125
  • பொதி செய்யப்பட்டது – ரூ. 128

அரிசி

  • வெள்ளை/ சிவப்பு பச்சை அரிசி – ரூ. 95
  • வெள்ளை/ சிவப்பு நாட்டரிசி – ரூ. 98
  • வெள்ளை/ சிவப்பு சம்பா – ரூ. 103
  • கீரி சம்பா – ரூ. 125

பாவனையாளர் அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்கவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இறக்குமதியாளர், வழங்குனர், உற்பத்தியாளர், விநியோகத்தர் அல்லது வியாபாரி எவரேனும் குறித்த உச்சபட்ச சில்லறையை விலைகளுக்கு கூடுதலாக, விற்பனை செய்யவோ, விற்பனைக்கு விடவோ, விற்பனைக்கு வெளிப்படுத்தவோ அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை குறித்த வர்த்தமானியில் கட்டளையிட்டுள்ளது.

[pdfjs-viewer url=”https%3A%2F%2Fyouthceylon.com%2Fwp-content%2Fuploads%2F2021%2F09%2FMRP-Fixed-for-Sugar-Rice-Extraordinary-Gazette-Issued-September-02-2243-13_T-1.pdf” viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]

[pdfjs-viewer url=”https%3A%2F%2Fyouthceylon.com%2Fwp-content%2Fuploads%2F2021%2F09%2FMRP-Fixed-for-Sugar-Rice-Extraordinary-Gazette-Issued-September-02-2243-14_T.pdf” viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]

சீனி, அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (02) முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய…

சீனி, அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (02) முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய…