அன்டிஜென், பொருளாதார அவசரகாலச் சட்டம், நுகர்வோர் விவகார திருத்தச் சட்டமூலம் என சூடுபிடிக்கவுள்ள பாராளுமன்றம்

  • 9

பாராளுமன்ற அமர்வுகள் நாளை மற்றும் நாளை மறுதினம் (06/07.09.2021) இடம்பெறவுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர், ஊடகவிளாளர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை

சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளைய தினம் அன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் ஊடகவியலாளர்களும் கலந்துக்கொள்ள முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், இவ்வாறு சுகாதார பிரிவினரால் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார அவசரகால சட்டம் தொடர்பான விவாதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனம் நாளை 06ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அன்றைய தினம் இடம்பெறவிருந்த வாய்மூல விடைக்கான கேள்விகளை மற்றுமொரு தினத்துக்கு ஒத்திவைப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

நுகர்வோர் விவகார திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிப்பு

நுகர்வோர் விவகார திருத்தச் சட்டம் நாளை திங்கட்கிழமை (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை வேண்டுமென்றே உயர்த்தும் மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இந்த சட்டம் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரவித்துள்ளார்.

அதனடிப்படையில் தனிநபர் வியாபாரதிற்கான அ.திகபட்ச அபராதம் 20,000 ரூபாவில் இருந்து 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது

அத்துடன் ஒரு நிறுவனத்திற்கான அதிகபட்ச அபராதம் 200,000 ரூபாவில் இருந்து 1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தனிநபருக்கான குறைந்தபட்ச அபராதம் 1,000 ரூபாவில் இருந்து 10,000 ரூபாவாகவும், ஒரு நிறுவனத்திற்கான குறைந்தபட்ச அபராதம் 10,000 ரூபாவில் இருந்து 500,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு

07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை 1979ஆம் ஆண்டு 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசே ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன் 4.50 மணி முதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும். LNN Staff

பாராளுமன்ற அமர்வுகள் நாளை மற்றும் நாளை மறுதினம் (06/07.09.2021) இடம்பெறவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர், ஊடகவிளாளர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளைய தினம் அன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர்…

பாராளுமன்ற அமர்வுகள் நாளை மற்றும் நாளை மறுதினம் (06/07.09.2021) இடம்பெறவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர், ஊடகவிளாளர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளைய தினம் அன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர்…