8 ஆண்டுகளின் பின்னர் தென்னாபிரிக்காவுடன் தொடரைக் கைப்பற்றிய இலங்கை

  • 9

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 47 ஓட்டங்களையும் துஷ்மந்த சமீர 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் அணித்தலைவர் கேஷவ் மஹாராஜ் 3 விக்கட்டுகளையும், ஜோர்ஜ் லின்டே மற்றும் ஷம்சி ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இதனையடுத்து 204 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 29.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக க்லாசென் 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் மஹேஷ் தீக்ஷன 4 விக்கட்டுகளையும் துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் ஊடாக இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதன் மூலமாக தென்னாபிரிக்க அணியுடன் 8 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணி இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. TM

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று…