எண்ணெய் நெருக்கடிக்கு தீர்வாக 250 கோடி டொலர் அமெரிக்காவிடம் கடன்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச சந்தையில் இருந்து 250 கோடி அமெரிக்க டொலர் கடனை பெற எரிசக்தி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட கான்செப்ட் குளோபல் என்ற நிதி நிறுவனத்திடமிருந்து கடன் பெற அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. கடனுக்கு 2 வருட சலுகைக் காலமும், திருப்பிச் செலுத்தும் காலம் 12 வருடங்களும் ஆகும்.

எரிசக்தி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த கடன் விரைவில் 3 சதவீத ஆண்டு வட்டி விகிதத்தில் பெறப்படும்.

பெற்றோலியக் கூட்டுத்தபானம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு சுமார் 330 கோடி அமெரிக்கா டொலர் கடன்பட்டிருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

கூட்டுத்தாபனம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இரு அரச வங்கிகளில் நிலுவையில் உள்ள கடன் கடிதங்களை தீர்க்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. LNN Stafff

Select your currency
LKR Sri Lankan rupee
%d bloggers like this: