செப்டெம்பர் 21 முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் திட்டம்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக தடுப்பூசி வழக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன் உறுப்பினராக வைத்திய நிபுணர் ஆர்.எம்.சுரன்ன பெரேரா இதனை தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக நாள்பட்ட நோய்கள் கொண்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் (21.09.2021) இருந்து அவர்களுக்கான தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிறுவர்களுக்காக பைஃசர் தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஆர் .எம் சுரன்ன பெரேரா மேலும் தெரிவித்தார்.

Select your currency
LKR Sri Lankan rupee
%d bloggers like this: