போட்டியோடு போட்டியிட நீங்கள் தயாரா?

BINTH AMEEN
BA ( SEUSL)
SLTS

கோவிட் காலமதில் பாடசாலைகள் மூடப்பட்டு எல்லோரும் வீடுகளிலேயே அடைபட்டுள்ளதால் போட்டிகள் முடிவிலியாக வந்தவண்ணமே இருக்கின்றன.போட்டிகள் உண்மையில் நல்லவிடயமாய், திறமைகளுக்கு களமாய் இருந்தாலும் இன்றைய போட்டிகள் வெறும் பெயருக்காக நடாத்தப்படுபவையாக இருக்கின்றது என்பதே கவலைக்கிடமான செய்தியாகும்.

தற்கால போட்டிகள் திறமைகளை வெளிக்கொண்டுவர வழியமைக்கின்றதா என்றால் உண்மையில் கேள்விக்குறிதான்.

ஏனெனில் அவை திறமையை திரைநீக்கம் செய்ததோ, இல்லையோ லைக்களுக்கும் (like ,subscribe) சப்ஸ்கிரைப்களுக்குமே முன்னுரிமையளிக்கின்றன. இது உண்மையில் அவசரமாய் சீர்திருத்தம் செய்யப்படவேண்டிய முக்கிய பேசுபொருளாக இன்று மாறியுள்ளது.

இக்காலப் போட்டிகளில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு போட்டியாளர்கள் பாராட்டப்படுவதற்கு மாற்றமாக போட்டி நடத்துனர்கள் சப்ஸ்கிரைப் (subscribe) அதிகம் வாங்கி தனக்கான பரிசை வாங்க முற்படுகிறார்கள் என்பதே வருத்தத்துக்குரிய உண்மை.

ஒரு சில நல்உள்ளங்களைத்தவிர மற்றைய அனைத்துமே போட்டி, இலவச பயிற்சிப்பட்டறை என லேபல் இட்டுக்கொண்டு தனக்காய் இலாபம் தேடுவதை அடிமட்டத்திலிருந்து பார்த்தால் நானும் நீங்களும் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

நீங்கள் ஏதாவது போட்டிக்கு, இலவச பயிற்சிப்பட்டறைக்கு பதிவுசெய்யும் தொலைபேசி இலக்கம் பின்னர் உங்களுக்கு அவர்களின் வகுப்புக்கள், பாடநெறிகள் என தனக்கானதை ஏதோ ஒன்றை சாதிக்க அனுப்பவதாய் அமையும் என்பது உங்கள் அனுபவங்களிலிருந்து நீங்கள் தெளிவாக புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

எனவே போட்டிக்கென பெண்பிள்ளைகளின் இலக்கத்தை பதிவுசெய்வதை முற்றாக தவிர்த்து அதற்கென தனிஓர் தொலைபேசி இலக்கத்தை அல்லது மூத்த சகோதரரின் இலக்கத்தை பாவிப்பது நல்லது. போட்டி முடிந்தபின்னர் தொலைபேசி இலக்கத்தை முடக்கமோ நீக்கமோ செய்து கொள்ள உங்களால் இயலும்.

லைக் ,சப்ஸ்கிரைப் (like, subscribe) என பிச்சைகேட்டு வரும் போட்டிகளிலிருந்து முற்றுமுழுதாக உங்களை நீங்களே ஒவ்வொருவராய் ஒதுங்கிக்கொண்டால் அவ்விஷமிகளை எங்களால் அநாதரவாக்க முடியும்.

இதனை நீங்கள் ஒவ்வொருவரும் உரிமையெடுத்து செய்தால் நாளை நமதாகி நம் குழந்தைகளின் திறமைகள் வெளிப்படும் அழகிய களமாக போட்டிநிகழ்ச்சிகளை மாற்ற முடியும். “முயல்வோம் முன்னேறுவோம்.”

Author: admin