பணம் அனுப்புவதை இலகுபடுத்த மத்திய வங்கியின் புதிய செயலி

  • 11

‘SL-Remit’ என்ற பணம் அனுப்பும் செயலியொன்றை இலங்கை மத்திய வங்கி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

முறைசாரா வழிகளைப் பயன்படுத்தி பணம் அனுப்பும் முறையை இழக்கச் செய்யும் குறிக்கோளுடன் புதிய, குறைந்த செலவிலான பண அனுப்பும் முறைகள், வழிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இலங்கைக்கென புதிய பண அனுப்பும் வழிகளை ஆய்வுசெய்து பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கி குழுவொன்றினை நியமித்துள்ளது.

இலங்கையின் அரச மற்றும் தனியார் வணிக வங்கிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பவற்றில் உள்ள அனுபவம்பெற்ற தொழில்சார் நிபுணர்களை இந்தக் குழு உள்ளடக்குகின்றது.

இது வெளிநாட்டுக்கு பணம் அனுப்புவதையும் இலகுபடுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் அறிக்கையின்படி,

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி, ஹட்டன் நஷனல் வங்கி, ஹொங்கொங் அன்ட் சங்காய் வங்கி, கார்கில்ஸ் வங்கி, டயலொக் எக்ஸியாட்டா, மொபிட்டல் (பிறைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பவற்றிலுள்ள அனுபவம்பெற்ற தொழில்சார் நிபுணர்களை இப்பணியாற்றுக் குழு உள்ளடக்குகின்றது.

இலங்கைக்கு அதிக பணவனுப்பல்களைக் கவர்வதற்கு பயனர்கள் சுயமாகப் பதிவுசெய்தல், எந்தவொரு நாட்டிலிருந்தும் பணவனுப்பல்களை வசதிப்படுத்துவதற்கு உலகளாவிய பணப் பரிமாற்றல் தொழிற்படுத்துநர்கள் மற்றும் உலகளாவிய நிதியியல் தொழில்நுட்பங்கள் என்பவற்றுடன் இணைவதற்கான இயலுமை, இலங்கையிலுள்ள ஏதேனும் வங்கிக் கணக்கிற்கு/மொபைல் பணப்பைக்கு உடனடி நிதிப் பரிமாற்றல் போன்ற அம்சங்களுடன்கூடிய “SL-Remit” என்று பெயரில் தேசிய பணவனுப்பல் மொபைல் செயலியொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு பணியாற்றுக் குழு முன்மொழிந்துள்ளது. இதற்கு மேலதிகமாக, இச்செயலி நேரடி பட்டியல் கொடுப்பனவுகள், கவர்ச்சிகரமான வெளிநாட்டு செலாவணி வீதங்கள், குறைவான கொடுக்கல்வாங்கல் கட்டணங்கள் போன்ற பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கியிருக்கும்.

நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு,  இலங்கை வங்கியாளர்கள் சங்கம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் ஆகியன உள்ளடங்கலாக ஆர்வலர்களின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கி “SL-Remit” மொபைல் செயலியினை தற்பொழுது நடைமுறைப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘SL-Remit’ என்ற பணம் அனுப்பும் செயலியொன்றை இலங்கை மத்திய வங்கி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். முறைசாரா வழிகளைப் பயன்படுத்தி பணம் அனுப்பும் முறையை இழக்கச்…

‘SL-Remit’ என்ற பணம் அனுப்பும் செயலியொன்றை இலங்கை மத்திய வங்கி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். முறைசாரா வழிகளைப் பயன்படுத்தி பணம் அனுப்பும் முறையை இழக்கச்…