கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றுமாறு ஆரப்பாட்டம்

பத்தரமுல்லை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தேசிய கல்வியற் கல்லூரி பேராசிரியர்கள் சங்கம் மற்றும் அதில் கற்கும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கல்வியற் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றக் கோரி இன்று (08) காலை முதல் இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.