பல்கலை ப்(f)ரஷர்களுக்கு ஓர் மடல்

  • 12

பல் கனவு சுமந்து பல் கலை கற்க பல்கலைக்கழகம் தன்னில் பாதம் வைக்கும் என்  இனிய ப்(f)ரஷர்ஸ்களுக்கு…!

உங்கள் அனைவர் மீதும் இறை சாந்தியும் சமாதானமும் என்றும் நிலவட்டும்!

நீங்கள் பதின்மூன்று வருடங்கள் பாடசாலைக்கல்விதனைக் கற்று உயர்கல்விதனைக் கற்க பல்கலை வந்தீர். ஏராளமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் ஏராளமானோரின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் நீங்களும் ஒருவராய் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! புகழனைத்தும் இறைவனையே சாரும். அல்ஹம்துலில்லாஹ்!

ஆம்! நீங்கள் நினைப்பது மிகச்சரிதான். இது சுதந்திரம் நிறைந்த இடம். தவறில்லை.  உங்களைப்பார்க்கவோ ஏன் என கவனத்துடன் கேட்கவோ யாருமில்லைதான்.  இனி  நம் விருப்பப்படிதான் எல்லாம்.

அன்புத் தம்பி தங்கைகளே! நீங்கள் அவ்வாறு நினைத்திருந்தால் அல்லது உங்களிடம் யாரும் அவ்வாறு சொல்லியிருந்தால் தவறு. உயர் கல்வி கற்க வந்த நீங்கள் உங்கள் தரத்தையோ உங்கள் குடும்பத்தின் தரத்தையோ உங்களைப்  பெற்ற உங்கள் அன்புப் பெற்றோரின் கனவுகளையோ மறந்தும் கூட கலைத்துவிடக்கூடாது. சில வேளை நீங்கள் நினைக்கக்கூடும் இதன் பிறகும் கட்டுப்பாடா என்ன.? என்று.

விடயம் அவ்வாறல்ல. நீங்கள் எந்தப்பல்கலையில் எந்தப்பீடத்தில் கற்கின்றீர் என்பது முக்கியம் அல்ல. உயர் கல்வி கற்க வந்து அதனை உரிய முறையில் கற்காமல் உங்கள் தரத்தையே இழந்துவிடாமல் உங்கள் சுய கண்ணியத்தை எங்கும் பேண வேண்டும்.

பல்கலைக்கழகம் என்பது பல்லினத்தார் வாழும் சூழலாகும். எவ்விடத்திலும் அவர்களுடன் நன்முறையில் நடவுங்கள். அவர்களின் உணர்வுகளை எச்சந்தர்ப்பத்திலும் மதித்து நடந்துகொள்ளுங்கள். சிறு சிறு பிணக்குகளை  தலைப்புச்செய்தியாக்கப்பட முன் உங்களில் உள்ள நம்பிக்கைக்குரிய நபருடன் பேசித் தீர்த்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒருவர் செய்யும் தவறால் முழு சமூகத்திற்கும் தவறான பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது. அது வரலாறாகிவிடவும் கூடாது.

உங்களுக்குக் கிடைத்த நண்பர்கள் மார்க்கத்திற்கு அப்பாற்பட்டிருந்தால் அவர்களுடன் சேர்ந்து நீங்களும் மார்க்கத்தின் வரம்பு மீறுவது முறையல்ல. அவர்களுக்கு இயன்றளவு வழிகாட்டுங்கள். அவ்வாறே அவர்கள் திருந்தாவிட்டால்  முடிந்தளவு விலகி இருப்பது உண்மையான முஸ்லிமாக நீங்கள் பல்கலையை விட்டும் வெளியேற வழிவகுக்கும். மற்றும் எந்த சந்தர்ப்பத்திலும் முறையற்ற தொடர்புகளில் ஈடுபடவோ சம்பந்தப்படவோ வழிகாட்டவோ வேண்டாம்.

இங்கு நடைபெறும் எல்லாப் போட்டிகளிலும் எல்லா நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள முன் அதில் மார்க்க வரையரை பேணப்படுகிறதா எனப்பார்க்க வேண்டும். அத்துடன் மார்க்கத்தின் வரையறைகளை மீறாத மிகச்சிறந்த உங்கள் திறன்களை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகளை நலுவவிடாமல் சந்தர்ப்பங்களைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதன் மூலமாக வெறுமனே ஒரு பட்டதாரியாக மட்டுமன்றி இந்நாடு எதிர்பார்க்கும் சிறந்த ஒரு புத்திஜீவியாக வெளியேற முடியும்.

உங்கள் ஆடைகளை அல்லாஹ் விதித்த கட்டளைப்படி அமைத்துக்கொள்ளுங்கள். பிறர் பார்வையை சுண்டுமளவுக்கோ அல்லது பிறர் பார்த்து சிரிக்குமளவுக்கோ இருக்கக்கூடாது. பார்ப்பதற்கு மரியாதையாகவும் கண்ணியமாகவும்  இருக்க வேண்டும்.
நீங்கள் சரியாக நடந்தால் மட்டுமே அடுத்த சந்ததிகளுக்கு உங்களால் வழிகாட்ட முடியும். ஏனெனில் சொல்லால் ஒன்றும் செயலால் இன்னொன்றுமாக இருப்பவர்களை அல்லாஹ் என்றும் விரும்புவதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் உயர்ந்த இலட்சியத்தை அடைய முழு மூச்சாக செயற்பட வேண்டும். அதன் மூலம்தான் சமூகம் உங்கள் மூலம் எதிர்பார்க்கும் நல்லவற்றை உங்களால் வழங்க முடியும். நீங்கள் எச்சந்தர்ப்பத்திலும் மனது உடைந்துவிடக்கூடாது. அல்லாஹ்வின் மேல் முழுமையாக நம்பிக்கை வையுங்கள். வழிகாட்ட அவனை விட சிறந்த வழிகாட்டி யாருமில்லை. அத்துடன் நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு முஸ்லிம்  என்பதை மறந்துவிடக்கூடாது. எங்கிருந்தாலும் தனிமையிலிருந்தாலும் அல்லாஹ்வின் கேள்வி கணக்கிற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.

உங்கள் ஹலாலான இலட்சியங்களை அடைய அல்லாஹ் வழிகாட்டுவானாக! ஆமீன்!

இப்படிக்கு

உங்கள் சகோதரியாய்,
Binth Fauzar
SEUSL

பல் கனவு சுமந்து பல் கலை கற்க பல்கலைக்கழகம் தன்னில் பாதம் வைக்கும் என்  இனிய ப்(f)ரஷர்ஸ்களுக்கு…! உங்கள் அனைவர் மீதும் இறை சாந்தியும் சமாதானமும் என்றும் நிலவட்டும்! நீங்கள் பதின்மூன்று வருடங்கள் பாடசாலைக்கல்விதனைக்…

பல் கனவு சுமந்து பல் கலை கற்க பல்கலைக்கழகம் தன்னில் பாதம் வைக்கும் என்  இனிய ப்(f)ரஷர்ஸ்களுக்கு…! உங்கள் அனைவர் மீதும் இறை சாந்தியும் சமாதானமும் என்றும் நிலவட்டும்! நீங்கள் பதின்மூன்று வருடங்கள் பாடசாலைக்கல்விதனைக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *