Galle – HNDE மாணவி மீது கத்திக்குத்து தாக்குதல்

காலி – லபுதுவப் பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் கல்விகற்கும் மாணவி ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் கத்தியால் குத்திவிட்டு, அவரிடமிருந்து தொலைபேசியை பறித்துச்சென்ற நிலையில், சந்தேகநபரை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 23 வயதுடைய தனமல்வில பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவியின் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு சம்பவத்திற்காக பயன்படுத்திய கத்தியையும் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த மாணவி தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

குறித்த மாணவியும் தனமல்வில பகுதியில் வசித்து வருபவர் என்பதோடு, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தில் பொறியியல் பிரிவில் கல்வி கற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கைதான சந்தேகநபரை காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில் பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய பாடசாலை மாணவியும் 20 வயதுடைய இளைஞரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பொஹெம்பியகந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த இருவருக்கும் காதல் தொடர்பில் இருந்ததாக கரந்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.