பாதையோரமாய்

அம்மா சிறுவயதில்
போலின்கள் இருந்தாக
புராணக்கதை போல்
சொல்லியிருக்கிறார்
சிறுமியாய் நான் இருக்கையிலே

இன்றைய அவலம் மீண்டும்
அதே சித்திரம்
சுவரோவியமாய் வரையப்படுகின்றது
வலிகளை அள்ளிக்கொடுக்கின்றது
வஞ்சகமில்லாமலே

போனவர் சீக்கிரம் வரவேண்டுமென
போfனடித்து பார்த்தே பாதி நேரம்
போகிறது வீட்டிலே
படபடக்கும் நெஞ்சுடன்

பாதையோரமாயே எங்கள்
பாதி எதிர்காலம் சீரழிகிறது
எதிர்த்து நிற்க வழியெதுவென
எண்ணியே தலையில்
உள்ள முடி
எச்சிலாய் குப்பையாய்
குப்பைத்தொட்டிக்கு
சென்றுகொண்டிருக்கிறது.

BINTH AMEEN
BA (SEUSL)
SLTS
Tags: