அகந்தை எனும் மமதை

  • 46

அகந்தையுடையவர்கள் எப்போதும் குனிந்தே பார்ப்பதால் தமக்கு மேலுள்ள உயரிய விஷயங்களை பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள். தன்னை மட்டும் உயரிய இடத்தில் வைத்துக்கொண்டு மற்றவர்களை குறைத்து பார்ப்பதே மமதையின் முதல் வேலை.

மனிதனுடைய வளர்ச்சிப்படியில் மமதை கால் நீட்டி படுத்துக் கொண்டிருக்கும்.இது தான் கடைசி படி என மனிதன் அதன் காலடியில் இளைப்பாற துவங்கும் போது வெற்றியின் கதவுகள் துருப்பிடிக்க ஆரம்பித்து விடும்.

அகந்தை மனிதர்களின் வேகமான கால்களை வெட்டி வீழ்த்தும் ஓர் ஆயுதமாகும் இது கண்களுக்கு தென்படாது.

எனக்கு எல்லாம் தெரியும் என்றால் மட்டுமே எல்லாம் செய்ய முடியும் என்ற மமதை மனம் இவைகளுக்கு மத்தியில் ஆழ்மனதில் நுழைந்து பார்த்தால் அங்கே வெற்றிடமாகவே காணப்படும்.

நீ எனக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற குறல்களும் மமதையின் வேர்களாகவே உள்ளது. பிறருடைய மரியாதை மழையில் நனைய நினைக்கும் விலங்காய் அகந்தை மனிதனை நடு தெருவில் நிறுத்தி விடுகிறது.

தனக்கு மரியாதையை எதிர் பார்க்கும் உள்ளம் பிறருக்கு மரியாதை செய்ய மறுத்து விடுகின்றது என்பது நிதர்சனமான வரிகளாகும். நான் தான் எல்லோரையும் விட பெரியவன் என்ற மமதை தான் பிறரை இழிவாக நினைக்க வைக்கிறது.

தனது வெற்றிக் கொடியை உயரத்தில் பறக்க வைப்பது போல் அகந்தை எண்ணம் கொள்ளும். பிறரை விட நான் தான் பெரியவன் என்ற சிந்தனையே அவனின் ஒட்டு மொத்த பணிவையும் தூக்கி எறிய வைக்கிறது.

இதோ என் சாதனைப்பட்டியல் என்று வெற்றி பட்டியலை மமதை தமது உள்ளத்தில் சுமத்தி திரியும் அது ஒருபோதும் தமது தவறுகளை அகந்தை உணர விடாது.

மமதையை இல்லாமல் செய்து விட்டு சக மனிதர்களுடன் கலந்து வாழும் வாழ்க்கையே வெற்றி, மகிழ்ச்சி யின் திசையை நோக்கி பயணிக வைக்கும்.

NAFEES NALEER (IRFANI)SEUSL
Kurnagal,Ibbagamuwa.
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அகந்தையுடையவர்கள் எப்போதும் குனிந்தே பார்ப்பதால் தமக்கு மேலுள்ள உயரிய விஷயங்களை பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள். தன்னை மட்டும் உயரிய இடத்தில் வைத்துக்கொண்டு மற்றவர்களை குறைத்து பார்ப்பதே மமதையின் முதல் வேலை. மனிதனுடைய வளர்ச்சிப்படியில் மமதை…

அகந்தையுடையவர்கள் எப்போதும் குனிந்தே பார்ப்பதால் தமக்கு மேலுள்ள உயரிய விஷயங்களை பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள். தன்னை மட்டும் உயரிய இடத்தில் வைத்துக்கொண்டு மற்றவர்களை குறைத்து பார்ப்பதே மமதையின் முதல் வேலை. மனிதனுடைய வளர்ச்சிப்படியில் மமதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *