வாழ்க்கை

வாழ்க்கை என்பது என்ன. இந்தக் கேள்விக்கான பதில் பெரும் புலம்பலாக இருக்கலாம். வாழ்க்கையின் கடினத்தை உணர்த்த நேர்த்தியான வார்த்தைகள் இல்லாமல் போகலாம். ஆனால் இந்த வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு கடினமானது இல்லை. நாம் தான் கடினப் படுத்திக் கொள்கிறோம்.

என்னை பொறுத்தவரை இந்த வாழ்க்கையை கால நிலைக்கு ஒப்பிடுவேன். இங்கே வசந்த காலங்கள் வரும் ,அதே சமயத்தில் இலையுதிர் காலங்களும் வரத்தான் செய்யும். அடை மழை பெய்யும் சுட்டெரிக்கும் வெயில் அடிக்கும். இதோ நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ் காலம். அது உங்களுக்கு ஒரு நாள் எதிர்காலமாக தானே இருந்தது. அது மட்டுமா நாளை இது உங்களுக்கு இறந்த காலமாக கூட மாறும் தானே. ஆக குழப்பிக் கொள்ள வேண்டியது இல்லை கடந்து போவது தான் வாழ்க்கை இதுவும் கடந்துதான் போகும். இங்கே ஓரிடத்தில் தங்கியிருக்கும் அனைத்துமே மாயை தான் அப்படி ஒன்று இல்லவே இல்லை காலத்தின் வேகத்திற்கு ஏற்ப அனைத்துமே மாறித்தான் ஆக வேண்டும்.

ஒப்பனைகளும் முகங்களும் மறந்து போனாலும் ஞாபகங்கள் என்றுமே மறப்பதில்லை என்பது ஒரு பெரும் பொய். அது நல்ல ஞாபகங்களாக இருந்தாலும் கெட்ட ஞாபகங்களாக இருந்தாலும் காலத்தின் நீரோட்டத்தில் அடிபட்டு சிக்குண்டு இறந்து தான் போகும்.

இங்கே உங்களை நேசிக்கும் மனிதர்கள் இருப்பார்கள். அதேபோல உங்களை வெறுக்கும் மனிதர்களும் இருக்கத்தானே வேண்டும். உங்களை வெறுக்கும் மனிதர்கள் பற்றி உங்களுக்கு தெரியாமல் போய்விட்டால் உங்களை யார் தான் உண்மையில் நேசிக்கிறார்கள் என்பது தெரியாமல் போய்விடுமே. உண்மையில் உங்களை வெறுக்கும் மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் இல்லாது போய்விட்டால் உங்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியமே இல்லாமல் போய்விடுமே.

இறைவன் உங்கள் வாழ்க்கையில் நிகழ்த்துகிற அனைத்து கடினமான மற்றும் உங்களுக்கு பிடித்தமான எல்லாவற்றிற்கும் இறைவனுக்கே நன்றி செலுத்துங்கள். அவன் உங்களை வெற்றியாளர்களின் ஒருவராக மாற்ற தயார் படுத்துகிறானே தவிர உங்களை காயப்படுத்தவில்லை.

“குறிக்கோள்கள் தெளிவானால் வாழ்க்கை அழகாகும்.”

Nijas A Munas