இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது சர்வதேச கலை ஆய்வு மாநாடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது சர்வதேச கலை ஆய்வு மாநாடு (SEUIARS) இன்று (2022.12.06) கலை கலாசார கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

‘நிலைபேறான அபிவிருத்திக்கான தற்போதைய தெருக்கடியை சிறந்த பங்காளிகளுடன் சமாளித்தல் (Coping with Current Crisis for the Sustainable Development with Partners in Excellence)’ எனும் கருப்பொருளில் சர்வதேச ஆய்வரங்கு கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் M.M. Fazil தலைமையில், இணைப்பாளர் M.L. Fouzul Ameer, மாநாட்டு ஆலோசகர் பேராசிரியர் M.I.M.Kaleel, புவியியற் துறை தலைவர் K.Nijamir, செயலாளர் I.L.M. Zahir மற்றும் பொருளாளர் M.H.M. Rinos உள்ளிட்ட குழுவினரின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் A.Rameez பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இலங்கையின் தற்போதைய நிலைமைகளுக்கு தீர்வு காணக்கூடியனவாக ஆய்வுகள் அமைய வேண்டும், அவை நிலைபேறான அபிவிருத்திக்கு வழிகோல வேண்டும் எனவும் அவற்றை வாய்ப்புக்களாக பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தூர்.

இவ்வாய்வு மாநாட்டில் பிரதம பேச்சாளராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை பேராசிரியர் Pinnawala Sangasumana தேரர் இணைய வழியினூடாக இணைந்து உரையாற்றினார். சமகால இலங்கையின் நெருக்கடிகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.

இம்மாநாட்டில் பல்கலைக்கழக பதிவாளர், பல்கலைக்கழக பீடத்தலைவர்கள், ஆய்வாளர்கள், விரிவுரையாளர்கள், நூலகப் பொறுப்பாளர்கள், மற்றும் இளங்கலை பட்டதாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் புவியியல், பொருளாதாரம், சமூகவியல், கல்வி வரலாறு, தகவல் தொழிநுட்பம், மெய்யியல், உளவியல், மொழியியல் உள்ளிட்ட 61 ஆய்வுக் கட்டுரைகள் ஒவ்வொரு பிரிவுவாரியாக நிகழ்நிலையினூடாகவும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இம்முறை இவ்வாய்வு மாநாட்டை தென்கிழக்குப் பல்கலைக்கழக புவியியற் துறை ஏற்பாடு செய்திருந்தமை விசேட அம்சமாகும்.

அஸ்மா மஸாஹிம்
புவியியல் சிறப்புக் கற்கை
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

IMG-20221206-WA0028
IMG-20221206-WA0037
IMG-20221206-WA0028
IMG-20221206-WA0029
IMG-20221206-WA0027
IMG-20221206-WA0026
IMG-20221206-WA0030
previous arrow
next arrow