எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியால வரலாற்றில் முதல் தடவையாக 04 பேர் புலமைப் பரீட்சையில் சித்தி

மேல் மாகாணம் கம்பஹா மாவட்டத்தில் கவியரசியும் அதிபருமான திருமதி எஸ். ஏ. இஸ்மத் பாத்திமா அதிபராக இயங்கிக் கொண்டிருக்கும் எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் 2022 தரம் 5 புலமைப் பரீட்சையில் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 04 பேர் சித்தியடைந்துள்ளனர்.

பாடசாலையிலிருந்து பரீட்சை எழுதிய 26 மாணவர்களில் நான்கு பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

S.F. MANHA. (152), M.M.A. WALEEDH (151), M. R.F. MANAL (147), M.R. HAFSA,(145)  ஆகிய மாணவ மாணவிகளே வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர்.

இந்த நான்கு மாணவர்களுக்கும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்த ஆசிரியை திருமதி. எம்.என்.பி.ஹஸ்னா ஆவார். இது தவிர இன்னும் பல ஆசிரிய ஆசிரியைகளும் இந்த மாணவர்களுக்காக பாடுபட்டமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை. வரலாற்றில் ஒரே தடவையில் நான்கு மாணவர்கள் சித்தியடைந்தமை இதுவே முதற் தடவையாகும் என அதிபர் இஸ்மத் பாத்திமா தெரிவித்தார்.

மேலும் பாடசாலைக்கு இந்தப் பெறுபேற்றினை பெற அருள் புரிந்த இறைவனுக்கும் கடமையாற்றிய அனைத்து ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், கல்விப் பணிமனை, உதவிக் கல்விப் பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர் அனைவர்களுக்கும் பாடசாலை சார்பாக பாராட்டுக்களையும் நன்றிகளையும் அதிபர் தெரிவித்தார்.

கடந்த 26/01/2023 அன்று பாடசாலையில் அதிபர் திருமதி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா தலைமையில் நடைபெற்ற (Language Day -2022) மொழிகள் தினத்தின் போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷேய்க் எம்.எச்.எம்.புஹாரி அதிபர் மற்றும் வகுப்பாசிரியை திருமதி எம்.என்.பி.ஹஸ்னா ஆகியோர் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

IMG-20230130-WA0045
IMG-20230130-WA0044
IMG-20230130-WA0043
IMG-20230130-WA0046
IMG-20230130-WA0047
IMG-20230130-WA0048
previous arrow
next arrow

26 மாணவர்கள் பரீடசைக்கு விண்ணப்பித்து பரீட்சையை எழுதி நூற்றுக்கு மேல் 17 மாணவர்கள் எழுபது புள்ளிகளுக்கு மேல் 23 மாணவர்களும் பெற்றமை சிறந்த பதிவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.