பகிடிவதை எனும் பயங்கரவாதம்

  • 553

இன்று பள்ளி செல்லும் ஒவ்வொரு மாணவனும் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற கனவைச் சுமந்தவனாகவே காணப்படுகின்றான். அவர்களைச் சுமந்த பெற்றோர்களும் அதனையே விரும்புகின்றனர். முதலாவதாக நாம் பல்கலைக்கழகம் என்றால் என்ன என்பதை நோக்குமிடத்து ஒரு மாணவனின் பல்வேறு திறமைகளையும் அதனோடு சேர்ந்த நன்னெறிகளையும் வெளிக்கொண்டுவரும் ஒரு இடமாக காணப்படுகிறது. அந்த வகையில் எமது நாட்டில் 15 பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கனவை சுமந்து அவர்களாகவே பல்கலைக்கழக வாசலில் அடி எடுத்து வைக்கின்றனர். ஆனாலும் பகிடிவதை எனும் பயங்கரம் மாணவர்களை உலுக்கி எடுக்கிறது.

“பகிடிவதை என்றால் என்ன?” என ஆராயும் போது ஒரு கல்வி நிலையத்தில் மாணவருக்கு உடல் அல்லது உள ரீதியான பாதிப்பை விளைவிக்கும் எந்த ஒரு செயலும் பகிடிவதை என அழைக்கப்படுகிறது. அரச சார்பற்ற அமைப்பான கியூரின் நிறுவனர்களில் ஒருவரான “அருசு அகர்வால்” பகிடிவதையால் மிகவும் மோசமாக தாக்கத்திற்கு உள்ளாகிய நாடாக இலங்கையை குறிப்பிடுகிறார். இலங்கையில் பகிடிவதை ஆனது பிரித்தானிய ஆதிக்கத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று எங்கும் வேரூன்றி காணப்படுகின்றது. பகிடிவதையானது மேல்நிலை – இடைநிலை மாணவர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்டதாகும். ஆனால் பின்னைய காலங்களில் தீவிரமடைந்து மாணவர்களின் உயிருக்கு சேதம் விளைவிக்கும் ஒரு பயங்கரவாத தன்மையாக மாறிவிட்டது.

உதாரணமாக 1975 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் இருந்து தப்பிப்பதற்காக இராமநாதன் மண்டபத்தில் இரண்டாம் மாடியில் இருந்து கீழே குதித்த 22 அகவை நிரம்பிய மாணவியான உரூபா இரத்தினசீலி இதனால் முடக்கு நோய்க்கு ஆளானாள்¸ இன்னும் 1993 ஆம் ஆண்டு உருகுணை பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் 2002ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் என அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

இதனால் ஒவ்வொரு மாணவனும் உடல் உள ரீதியான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்கள் தங்களது விலை மதிப்பற்ற உயிரை மாய்த்துக் கொள்வதோடு அவர்களது கனவும் அந் நொடியே மாய்ந்து விடுகிறது. பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் சர்வ நாசம் ஆகிவிடுவதோடு ஒவ்வொரு மாணவனினதும் கனவு குழி தோண்டி புதைக்க படுகிறது. இந்நிலை மாறவேண்டும்¸ முற்றுமுழுதாக மாறவேண்டும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு என்று ஒரு சுதந்திர நிலை காணப்படவேண்டும. பல்கலைக்கழக சூழலில் நிம்மதியாக கல்வி கற்பவர்களுக்கு இடமளிக்கவேண்டும். பல்கலைக்கழக சுதந்திரக் காற்றை சுவாசிக்க இடமளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் திறமைகள் பீறிட்டுக் கிளம்பும்.

ஆனால் இன்று இலங்கையில் பகிடிவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு தான் செல்கிறது. எமது நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பகிடிவதை எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 919 ஆம் இலக்க சுற்றறிக்கையின்படி உயர்கல்வி நிறுவனங்களின் அனுமதி பெறும் மாணவர்கள் ஒவ்வொருவரும் பகிடிவதையை தொடங்கவோ தூண்டவோ மாட்டேன் எனவும் பகிடிவதைக்கு உதவ மாட்டேன் எனவும் கட்டாயம் கையொப்பம் இட வேண்டும்.

எனவே நாம் பகிடிவதையில் ஈடுபடாமல் மற்றவர்களையும் ஈடுபடுத்தாமல் ஒரு சிறந்த சமூதாயத்தை கட்டியெழுப்ப முயற்சிப்போம். எமது பல்கலைக்கழக நற்பெயருக்கு இழிவு வராமல் காப்போம். இறுதியாக பகிடிவதை அற்ற சமூகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி கொள்வோம்.

Nishfa
First Year
SEUSL

இன்று பள்ளி செல்லும் ஒவ்வொரு மாணவனும் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற கனவைச் சுமந்தவனாகவே காணப்படுகின்றான். அவர்களைச் சுமந்த பெற்றோர்களும் அதனையே விரும்புகின்றனர். முதலாவதாக நாம் பல்கலைக்கழகம் என்றால் என்ன என்பதை நோக்குமிடத்து ஒரு…

இன்று பள்ளி செல்லும் ஒவ்வொரு மாணவனும் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற கனவைச் சுமந்தவனாகவே காணப்படுகின்றான். அவர்களைச் சுமந்த பெற்றோர்களும் அதனையே விரும்புகின்றனர். முதலாவதாக நாம் பல்கலைக்கழகம் என்றால் என்ன என்பதை நோக்குமிடத்து ஒரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *