காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 05

முதலில் அவனை பார்த்து மூவரும் பயந்து தான் போயினர். ஆனால் ஓட நினைக்கவில்லை. ஓடுவதற்கு தெம்பும் இருக்கவில்லை. எப்படியோ சில மனிதர்களை கண்டுவிட்ட திருப்தியில் அவர்களிடம் பேசுவதற்காக கில்கமேஷ் முன்னேறி வந்தான்.

“ஒஹ். ஒஹ். போலீஸ் கிட்ட இருந்து தப்பிச்சி இப்படி காட்டுவாசி கிட்ட மாட்டிக்கிட்டோமே!”என ஆர்தர் புலம்பினான்.

“கிட்ட வராதே அங்கேயே நில்லு….”என்று மீரா ஒரு குச்சியை வைத்து அவனை விரட்ட பார்த்தாள்.

கில்கமேஷ்ஷும் சுமேரிய மொழியில் தான் எங்கு இருக்கிறேன் என்று இவர்களிடம் பேச முயற்சித்தான். முதலில் அவன் என்ன சொல்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை தான்… ஆனால் அதை ஜெனிபர் புரிந்து கொண்டாள்.

“ஏய் இருங்க.. .உங்களுக்கு நியாபகம் வரலியா… அவன் பேசுறது சுமேரிய மொழி… நாம முதல் செமெஸ்டர்ல படிச்சோமே…”

“அட ஆமா…. யாரிவன்… பாக்குறதுக்கு இவ்வளவு பயங்கரமா இருக்கான்?”என மீரா கேட்க

“அதை அவன்கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்குவோம்.. அம்மா ஜெனி. நீயே அவன் கூட பேசு.. உனக்கு தானே அந்த லாங்குவேஜ்ல பெஸ்ட் ரிசல்ஸ்….”என ஆர்தர் சொல்ல ஜெனியும் பேச ஆரம்பித்தாள்.

“ஆமா ,நீங்க யாரு… இவ்வளவு பழமை வாய்ந்த மொழியை இவ்வளவு சுலபமா பேசுறீங்க?”என்ற முதல் கேள்விக்கு கில்கமேஷ் உரக்க சிரித்தான்.

“என்ன இவன் இப்படி சிரிக்கிறான்… ஒருவேளை தப்பா ஏதும் கேட்டுட்டியா?”என ஆர்தர் சந்தேகத்துடன் கேட்க ஜெனி அவனை முறைத்தாள்.

அப்பறம் அவனே பேசினான். “நான் என்னோட நாட்டை தேடிக்கிட்டு இருக்கேன். பலவருசங்களா குகையில் இருந்ததால பாதையை என்னால சரியா கண்டுபிடிக்க முடியல்ல.”என்றான்.

“ஒஹ்ஹ்..இவரு ஏதோ ஆதிவாசி போலத்தான் இருக்கு ..வழி தவறிட்டார் போல இருக்கு… என்ன ஊர் என்னு கேளு ஜெனி”என மீரா சொல்ல ஜெனியும் மீண்டும் அவனிடம்

“எங்கிருந்து வர்ரீங்க?”என கேட்டாள்.

“நான் உருக் நகரத்தொட அரசன்,மாவீரன் கில்கமேஷ்!”என்றதும் ஒரு செகண்ட் எதுவும் பேசாமல் இருந்த மூவரும் விழுந்தடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர். கில்கமேஷ்ஷுக்கும் இவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என புரியவில்லை.

“பார்த்தியா ஜெனி.. இவரு கில்கமேஷ் ஆமே….. என்னால இதுக்கு மேல சிரிக்க முடியாது… கண்டிப்பா இவன் ஏதோ மென்டல் ஹாஸ்பிடல்ல இருந்து தப்பிச்சி வந்தவனா தான் இருக்கணும்.”என்றான் ஆர்தர்.

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்…”என்றாள் மீரா.. ஆனால் சிறிது நேரத்தில் சிரிப்பை நிறுத்திய ஜெனி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தாள்.

“இல்ல இவன் பைத்தியமா இருக்க முடியாது… சுமேரிய மொழியை இவ்வளவு அக்கூரேட்டா பேசுற இவன் எப்படி பைத்தியமா இருக்க முடியும்… நிச்சயமாக இல்லை..”என்றெண்ணியவள் மீண்டும் அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

“நீங்க உருக் நகரத்தை தேடுறதா சொன்னீங்க இல்ல…. ஆனா உங்களுக்கு தெரியுமா அப்படி ஒரு நகரம் இப்போ இந்த உலகத்திலேயே இல்லை”என்றாள்.

“என்ன சொல்றே…. என்ன உளர்ர…எப்படி அது நடக்கும் பிரம்மாண்டமான கொத்தளங்கள் கொண்ட என்னோட நகரம் எப்படி காணாமல் போகும்…. நான் கொஞ்ச காலம் தானே குகைல இருந்தேன்…. என்னாச்சு உண்மையை சொல்லு.”என மிரட்டினான் கில்கமேஷ்.

அப்போது மீராவும் ஆர்தரும். “விட்டுட்டு வா ஜெனி…. எதுக்காக இவன் கூட பேச்சை வளர்க்கிறே!”என சொல்ல “இல்ல …எனக்கு தெரியும் இவன் பைத்தியம் கிடையாது… அவனோட பேச்சு உண்மையா இருக்கு.  இந்த ஆதங்கம் உண்மையானது…”என்றான்.

“உனக்கென்ன மூளை குழம்பி போய்டுச்சா… அப்படின்னா 8000 வருசமாகியும் கில்கமேஷ் இறக்கல எங்குறியா?”என ஆர்தர் கேட்டான்.

“அதை அவன் வாயாலேயே கேட்டு தெரிஞ்சிக்குவோம்.”என்றவள் மீண்டும் பேசினாள்.

“ஆத்திரப்படாதீங்க மிஸ்டர் கில்கமேஷ்…எங்களுக்கு முதல்ல இருந்து என்னாச்சுன்னு சொல்லுங்க. முடிஞ்சா நாங்க உங்களுக்கு உதவுறோம்.”என்றாள்.

அவனும் என்கிடுவை பற்றி ஆரம்பித்து அவன் இறந்தது . தான் உயிர் ரகசியத்தை பெற சென்றது .ஆதி பிதாவை சந்தித்தது. குகையில் தவம் இருந்தது. பின்னர் வெளியாகி வந்தபோது வழி மறந்து போனது வரை ஒன்றுவிடாமல் சொல்லி முடிக்க மூவரும் பேச்சு மூச்சின்றி அப்படியே கற்பாறையில் அமர்ந்து விட்டனர். அவர்களுடைய பதிலுக்கு கில்கமேஷ் காத்திருந்தான்.

“ஓஹ் மை கோட்… இதை என்னால நம்பவே முடியவில்லை….. காவியங்களும் களிமண் தட்டுக்களும் சொன்ன காவியத்தலைவன் கில்கமேஷ் இப்போ நம்ம கண்ணு முன்னாடி நிக்குறான் காய்ஸ்.”என்று ஜெனி வாயை பிளந்தாள்.

“சாவை வென்ற ஒரே மனிதன்…. நோ சான்ஸ்…. இப்போ கூட என்னால இதெல்லாம் நம்ப முடியவில்லை…”என ஆர்தரும் சொன்னான்.

“பாவம் அவர் எவ்வளவு காலம் குகையில் இருந்தாருன்னு அவருக்கே தெரியல்ல …இப்போ  அவரோட நாடே இல்ல என்னு தெரியாது இவ்வளவு தூரம் பயணிச்சு வந்து இருக்காரு…. எதுக்காக வந்து இருப்பாரு…. அவரோட திட்டம் தான் என்ன?” என மீரா கேட்டதும் மூவரும் கில்கமேஷை வியப்புடன் பார்த்தனர்.

“எனக்கு பதில் சொல்லுங்க” என்று கையை குறுக்கே கட்டிக்கொண்டு திடகாத்திரமான கில்கமேஷ் நின்று கொண்டிருந்தான்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

முதலில் அவனை பார்த்து மூவரும் பயந்து தான் போயினர். ஆனால் ஓட நினைக்கவில்லை. ஓடுவதற்கு தெம்பும் இருக்கவில்லை. எப்படியோ சில மனிதர்களை கண்டுவிட்ட திருப்தியில் அவர்களிடம் பேசுவதற்காக கில்கமேஷ் முன்னேறி வந்தான். “ஒஹ். ஒஹ்.…

முதலில் அவனை பார்த்து மூவரும் பயந்து தான் போயினர். ஆனால் ஓட நினைக்கவில்லை. ஓடுவதற்கு தெம்பும் இருக்கவில்லை. எப்படியோ சில மனிதர்களை கண்டுவிட்ட திருப்தியில் அவர்களிடம் பேசுவதற்காக கில்கமேஷ் முன்னேறி வந்தான். “ஒஹ். ஒஹ்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *