காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 16

  • 16

அன்றிரவு முழுக்க ஜெனி தூங்கவே இல்லை. மீரா அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே தூங்கிப்போனாள். எதற்கும் ஜாக்கிரதையா இருப்போம் என்றுவிட்டு கில்கமேஷ் தூங்கிய அறையை வெளியில் பூட்டிவிட்டனர்.

“இவன் எப்போ என்ன பண்ணுவான்… எப்படி மாறுவான் என்றெல்லாம் சொல்ல தெரியாது.. அதனால அவனே வந்து தட்டும் வரை கதவு பூட்டியே இருக்கட்டும் “என்றான் ஆர்தர்.

“நீ சொல்றது தான் சரி டா…. நல்லா பூட்டி வை..” என ராபர்டும் சொன்னான்.

கில்கமேஷ் எழுந்திருப்பதற்கு மறுநாள் காலை  9 மணி ஆனது. முந்தைய நாள் இரவு நடந்தவை ஒரு நிமிடம் பட் பட்டென  கண்முன்னே தோன்றி மறைந்தது. தான் கட்டுப்பாட்டை மீறி நடந்ததை எண்ணி கவலைப்பட்டான். கில்கமேஷ் சாப்பிடுவதற்காக உணவை எடுத்து மேசையில் வைத்து விட்டு எல்லோரும் ஹாலில் அமர்ந்து இருந்தனர். கதவை திறப்பதற்கு ஆர்தர் தயாராக இருந்தான். கொஞ்ச நேரம் ஜெனியும் அங்கு இருந்துவிட்டு வீட்டுக்கு வெளியே சென்றுவிட்டாள்….

“எங்கடி போறே?”

“சும்மா… இந்த பக்கம் வாக்கிங் போகலாமுன்னு…”

“வேணும்  என்னா நானும் வர்றேன் இரு..”

“இல்ல மீரா… நீ இரு… நான் கொஞ்சம் தனியா இருக்க ஆசைப்பறேன்… ப்ளீஸ் எதுவும் நினைச்சிக்காதே!”

மீராவுக்கு ஜெனியின் மனநிலையை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

“சரி .ஜெனி…பார்த்து…ஜாக்கிரதை..”என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

கொஞ்ச நேரத்தில் இவர்கள் யாரும் எதிர்பாராத வகையில் கில்கமேஷ் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். அதிர்ச்சி அடைந்த ராபர்ட் ஆர்த்தரை பார்க்க…

“டேய்…சாவி என்கிட்ட இருக்குடா… இவன் எப்படி…” என்று விட்டு எட்டிப்பார்த்தால் கதவு கைப்பிடி உடைந்து போய் இருந்தது….

“ஆஹ்….போச்சு போ..எங்க இருந்து டா பிடிச்ச இவனை… ஐயோ நம்ம கிட்டதானே வரான்” என்று ராபர்ட் பயப்பட

அவர்கள் முன்னிலையில் வந்த கில்கமேஷ் சுற்றும் முற்றும் ஜெனியை தான் தேடினான். அதை பார்த்து விட்டு ஆர்தர் லேசாக மீரா காதில்..

“பாரு பாரு.. ஜெனியை தான் தேடுறான்..”என்றான்.

“ஜெனிபர் எங்க ..இங்க காணோமே?” என்று கேட்டான். அப்போது மீரா கோபத்தில்

“ஆமா நீ நேத்து பண்ண காரியத்துக்கு அவ இன்னமும் எங்க கூட இருந்தா தான் ஆச்சர்யமே?” என்றாள்.

அவனுக்கும் தர்மசங்கடமான நிலையில் எல்லோரிடமும்

என்னை மன்னிச்சிடுங்க… நான் உண்மையிலேயே வேணும் என்னு பண்ணல… திடீரென எனக்கு என்னாச்சுன்னு தெரியல… ஒரே போதை ஏறியது போல் இருந்தது..

எனும் போது மீரா ஆர்தர் மற்றும் ராபர்ட்டை முறைத்தாள்.

“இவ என்னடா இந்த லுக்கு விடுறா…”என ஆர்தர் கேட்க

“நாமதானேடா அங்க விஸ்கியை கொண்டுவந்து வெச்சோம்… அதான் முறைக்குறா போல இருக்கு.”என்றான் ராபர்ட்.

“என்னை மன்னிச்சிடுங்க… நான்.. ஜெனி கிட்ட மன்னிப்பு கேட்கணும்… அவ எங்க இப்போ..?” என்று கேட்க சற்று யோசித்த  மீரா

“அவ மனசு சரியில்லை என்னு இப்போதான் இந்த பக்கம் போனா… போய் பார்த்துக்க..” என்றாள்…

கில்கமேஷ் வெளியேறியதும் ஆர்தர்.. “எதுக்குடி இப்போ அவன் கிட்ட ஜெனி இருக்குற இடத்தை சொன்னே… மறுபடியும் ஏதாவது பண்ணிட போறான்..” என்று சொல்லிக்கொண்டே எந்திரிக்க

“அடங்குறியா… அவன் பேசியதை கேட்டே இல்ல… உண்மையிலேயே நேத்து போதை தலைக்கேறி தான் அப்படி பண்ணி இருக்கான்.. அதுக்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்க போறான்.. நீயும் இருக்கியே… முண்டம் முண்டம்” என்று திட்டினாள்.

ராபர்ட்டின் வீடு  பசுமையான காடு மற்றும் மலைப்பாங்கான இடத்தில் அமைந்து இருந்தது… அதற்கு அருகில் உள்ள இடங்களும் மனதுக்கு இதமளிப்பதாக இருக்க காலாற நடந்து கொண்டே இயற்கை அழகில் தன்னையும் மறந்து ஒரு மலைப்பறையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் ஜெனி. எங்கெல்லாமோ தேடி அலைந்து கடைசியாக அவள் இருக்கும் இடத்தை கண்டுகொண்டான் கே. கே. தனக்கு பின்னாடி யாரோ ஒருவரின் காலடி ஓசை கேட்டதும். அது மீரா தானோ என எண்ணிக்கொண்டு திரும்பி பார்க்காமலேயே ஜெனி,

“நான் தான் சொன்னேனே.. என்னை கொஞ்சம் தனியா விடு என்னு… எனக்கு ஒன்னும் ஆகாது… நீ போ நான் கொஞ்ச நேரத்தில் வர்றேன்.”என்றாள்.

பதில் எதுவும் வராததால் கொஞ்சம் சந்தேகம் பிறந்தது. அவள் திரும்புவதற்குள் கே. கே,

“ஜெ..ஜெனி..”என்றதும் பின்னாடி நிற்பது கில்கமேஷ் தான் என்பதை உணர்ந்த ஜெனிக்கு நெஞ்சு வேகமாக அடிக்க ஆரம்பித்தது. மெதுவாக எழும்பி அவன் பக்கமாக திரும்ப முயற்சித்த போது கால் தவறி விழப்போக கில்கமேஷ் சட்டென பிடித்து காப்பாற்றினான். ஒரு சில நொடி அமைதி நிலவ இருவரும் சுதாரித்து கொண்டனர். ஆளுக்கோர் பக்கமாக திரும்பி கொண்டனர். கில்கமேஷே பேச்சை ஆரம்பித்தான்.

“அது வந்து… நேத்து ராத்திரி நடந்தது… என்னை மன்னிச்சிடு.. நான் வேணும் என்னு அப்படி பண்ணல…” என்று இன்னும் ஏதோ செல்வதற்குள் ஜெனி குறுக்கிட்டு

தெரியும்… அது நீங்க வேணும் என்னு பண்ணல என்னு தெரியும்….. உண்மையிலேயே தப்பு என்னோடது தான்.. நான் உங்களை தூண்டி விடுவது போல நடந்து இருக்க கூடாது… அதுதான் எல்லாத்துக்கும் காரணம்… சொரி….

என்றாள். மறுபடியும் அமைதி நிலவ அந்த அமைதியை அவளே உடைத்தாள்.

“சரி வாங்க போகலாம்.. எல்லோரும் நமக்காக காத்து இருப்பாங்க.”என்றாள்.

“ஹ்ம்ம்..”என்றபடியே கில்கமேஷ் முன்னாடி நடக்க ஜெனி பின்னால் நடந்து வந்தாள். வீட்டை நெருங்க கொஞ்ச தூரமே இருந்த போது மறுபடியும் ஜெனி,

“நில்லுங்க.. இன்னொரு முக்கியமான கேள்வி உங்க கிட்ட கேக்கணும்….” என்றாள். என்ன என்பது போல் அவன் திரும்ப,

நேத்து எதுக்காக என்னை விட்டுட்டீங்க…

அவள் அப்படி கேட்பாள் என அவனும் எதிர்பார்க்க வில்லை.. அதற்கு பதில் சொல்ல முன்பே இவர்களை தூரத்தில் கண்டுகொண்டு மீரா ஓடிவந்தாள்.

“கே. கே….!!!! ஜெனி!!!! “

“அது மீரா தானே..” என்றபடி ஜெனியும் வேகமாக செல்ல கே .கே வும் விரைந்தான். மூச்சு வாங்க வாங்க…

“ரெண்டுபேரும் சீக்கிரம் வாங்க… முக்கியமான விஷயம் ஒண்ணு காட்டனும்..”

என்று விட்டு மீரா மறுபடியும் வீட்டை நோக்கி ஓட இவர்களும் ஒன்றும் புரியாமல் பின்னாடியே சென்றனர். உள்ளே நுழைந்ததும்  மீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நிகழ்ச்சி ஒன்றை காட்டினாள்.

“என்ன ..என்னன்னு சொல்லேன்.”என்றபடியே டிவியை  பார்த்தாள் ஜெனி.

ஆஹ்…..

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அன்றிரவு முழுக்க ஜெனி தூங்கவே இல்லை. மீரா அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே தூங்கிப்போனாள். எதற்கும் ஜாக்கிரதையா இருப்போம் என்றுவிட்டு கில்கமேஷ் தூங்கிய அறையை வெளியில் பூட்டிவிட்டனர். “இவன் எப்போ என்ன பண்ணுவான்… எப்படி மாறுவான்…

அன்றிரவு முழுக்க ஜெனி தூங்கவே இல்லை. மீரா அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே தூங்கிப்போனாள். எதற்கும் ஜாக்கிரதையா இருப்போம் என்றுவிட்டு கில்கமேஷ் தூங்கிய அறையை வெளியில் பூட்டிவிட்டனர். “இவன் எப்போ என்ன பண்ணுவான்… எப்படி மாறுவான்…