காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 22

  • 9

“இந்த பொண்ணு டிடானியா பழகுறதுக்கு நல்ல பொண்ணா இருக்கால்லே…” என்று மீரா பாத்ரூம் செல்ல டவலை கையில் எடுத்து கொண்டே கூற ஜெனி,

“ஆ. ஆஹ்.. அதான் பார்த்தேனே… எவ்வளவு சாவுகாசமா பேசுரா என்னு.” என்றாள் வெடுக்கென மீரா சிரித்து கொண்டே

“சரி நான் முதலில் குளிச்சிட்டு வர்றேன். வெயிட் பண்ணு.” என்று சொல்லி குளியலறையில் நுழைந்தாள்.

******

கில்கமேஷ் குளிப்பதற்காக ஆடைகளை களைந்தான். அவனது உடலமைப்பினை பார்த்து ஆச்சர்யப்பட்ட ராபர்ட்,

“எலெ.. என்ன எக்சர்சைஸ்ல பண்ணுறே.. இப்படி ஒரு பாடி பில்டரை நான் பார்த்ததே இல்லை..”என்றான் பொறாமையாக

“அட மச்சான்… கேகேவுக்கு எதுக்கு எக்சர்சைஸ் எல்லாம் அவன் பிறப்பே அப்படித்தான்… மூனில் ரெண்டு பகுதி கடவுள்டா  நம்ம ஆளு.” என்றான் ஆர்தர்.

“ஆமா உன்னோட தோஸ்து.. அதான் என்கிடுவும் இப்படி தானா?” என்று கேட்டான் ராபர்ட் கில்காமேஷிடம்.

அதற்கு லேசான புன்முறுவலோடு அவனது அந்த நாள் நினைவுகளில் ஒன்றை எடுத்து விட்டான் கில்கமேஷ்.

“என்னோட நண்பனை பற்றி கேட்டே இல்ல.. அவன் எனக்கும் மேல… என்னை அழிக்கவேண்டும் என்பதற்காகவே உருவாக்க பட்டவன் அவன்… அப்போ என்னை விட பலசாலிதானே…” என்றான்.

“அப்படியா… இதை எனக்கு நீ சொல்லலியே ஆர்தர்..”

“அதான் காவிய தலைவனே கதை சொல்லுறானே கேட்டுக்க.. நான் போய் குளிச்சிட்டு வர்றேன்..” என்று விட்டு ஆர்தர் சென்று விட்டான்.

“நீ சொல்லு கேகே.. உங்க ரெண்டுபேருக்கும் எப்படி நட்பு உருவாகியது.?”

ஹ்ம்ம் சொல்லுறேன்…அன்னிக்கி எங்க ஊருல ஒரு சிறப்பான திருமணம் நடந்தது. அது காதல்ராணி என்றழைக்கப்படும் ஒரு பெண்ணோட திருமணம். அப்போதெல்லாம் எந்த பெண் திருமணம் செய்தாலும் அவளுடைய கணவன் அவளை தொட முன்னர் என்கூட இருக்கணும் என்னு வித்தியாசமான ஒரு கட்டளை போட்டு வெச்சேன்..

எனும் போதே ராபர்ட் வாக்குள்ளார

“அடப்பாவி… சரியான மன்மதனா இருப்பான் போல இருக்கே…”

“அன்னிக்கி ராத்திரி நான் அவ வீட்டுக்குள் நுழைய முன்னாடி என்னை ஒரு கால் தடுத்தது… அது வேற யாருமில்லை.. அவன் தான்… என்கிடு.”

“அப்பறம்….”

இருளில் இருந்து வெளிவந்த அவன் என்னை உள்ளே போகமுடியாதவாறு தடுத்தான். மூக்குவழியாக சுவாசம் நெருப்பென கக்க மதம் பிடிச்ச முரட்டு காளைகளை போல…வீடுகள், கதவுகள் எல்லாம் உடைந்து நொறுங்கின. சுவர்கள் இடிந்து நொறுங்கின. ரொம்ப நேரம் நாங்க சண்டை போட்டுகிட்டோம். அது அவனோட முதல் சண்டை என்பதால் அவனை நான் தூக்கி வீசினேன். அப்போ அவன் ஒரு வார்த்தை சொன்னான்..

என்றவன் அமைதியானான்.

“என்கிடு என்ன சொன்னாரு..???” என ராபர்ட் ஆர்வத்தோடு கேட்டான்.

உன்னை போன்று வரம் பெற்றவர்கள் இந்த உலகத்தில் எவருமில்லை. பசுவை போன்ற குணம்கொண்ட நின்சுன் உனது தாயார். ஆதாது என்ற கடவுள் உனக்கு அசுர வீரம் தந்து இருக்கார். என்லின் உன்னை மகா மனிதனாக்கி உனக்கு அரச பதவியை தந்து இருக்கார். நல்லா யோசித்து பாரு… தங்களையே பாதுகாத்து கொள்ள முடியாத பெண்களை பலவந்தம் செய்வது உனக்கு எந்த விதத்தில் பெருமையை தரும் சொல்லு…என்றான்..எங்கிடு.அந்த வார்த்தை எல்லாம் என்னை ரொம்பவே பாதித்தது. அதோட நான் அவனுக்கு கட்டுப்பட்டு அவனோட உண்மையான நண்பனா இருக்க ஆரம்பிச்சேன்.

என கில்கமேஷ் சொல்ல ராபர்ட்  கைதட்டி

“வாவ் செம்ம. செம்ம… தி கிரேட் என்கிடு…. நாம கண்டிப்பாக அவரை மறுபடியும் இந்த உலகத்துக்கு கொண்டு வர்றோம்.. உங்களோட சேர்த்து வைக்கிறோம்..” என்று விட்டு அவனும் செல்ல சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தான்  கில்கமேஷ்.

மீராவும் ஜெனியும் தயாராகிவிட்டு ஆண்கள் இருந்த அறைக்கதவை தட்டினார்கள். உள்ளே இருந்து கில்கமேஷ் மற்றும் ஆர்தர் வெளியே வந்தனர்.

“ஹே.. என்ன நீங்க ரெண்டு பேரும் மட்டும் வரீங்க. .ராபர்ட் எங்கே?” என மீரா கேட்டாள்.

“அவன் அப்போவே ரெடி ஆகிட்டு .கீழே அவனோட ஆள் இருக்கு .பாக்கணும் என்னு கிளம்பிட்டான்.”என்றான் ஆர்தர்.

“அடச்சே.. இந்த ராபர்ட் நம்ம மானத்தை வாங்காம விடமாட்டான் போல இருக்கே.” என்று ஜெனி கூற எல்லோருமாய் கீழே சென்றனர்.

அங்கே ஏற்கனவே சாப்பாட்டு மேசையில் உணவுகள் பரவியிருக்க ஊருக்கு முன்னர் அவன் போய் உக்கார்ந்து இருந்தான். கூடவே அந்த பெண்ணும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

“வாங்க… எல்லோருக்கும் முதலில் எங்க நாட்டு விருந்து…. தருவது எங்க கடமை.. சாப்பிட்டு கிட்டே பேசலாமே..”என்று டிடானியா அழைத்தாள்.

எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தனர். கில்கமேஷை அவளருகில் இருக்குமாறு சொன்னாள். இரண்டு உள்ளங்கள் இதனால் கடுப்பாகி போனது.

“ஆமா என்ன ப்ரொஜெக்ட் உங்களோடது?”

“அ.. அது வந்து… பபிலோனிய காவியங்களை தொகுக்குறது… அதோட பண்டைய நாகரிகங்களில் சிறப்பு வாய்ந்த யூப்ரதீஸ் தைக்கிறீஸ் நதிக்கரை நாகரிகம் பற்றி இவன் ஒரு புக் எழுதலாம் என்னு இருக்கான்…” என ஆர்த்தரை காட்டி ஜெனி பேசினாள்.

“வாவ்.. இன்டெர்ஸ்டிங்.. அப்பறம் யாரெல்லாம் இதுல கமிடெட்… யாரெல்லாம் இதுல சிங்கிள்” என்று கேட்டாள் டிடானியா.

அதற்கு ராபர்ட், ” நான்..நான் சிங்கிள் தான்…” என்று முண்டியடித்து கொண்டு சொன்னான்..

“என்ன இப்படியெல்லாம் கேக்குறே?”என்று ஜெனி அவளிடம் கேட்டாள்.

“வேற எப்படி கேக்குறது… சும்மா தெரிஞ்சிக்க தான் கேட்டேன்.” என்றாள்.

“ஒஹ்ஹ்.. அப்படியா… இதுங்க ரெண்டும் ரெண்டு வருசமா லவ் பண்ணுதுங்க…மத்தப்படி நாங்க எல்லோரும் சிங்கிள் தான் .”என்றாள்.

“அட சூப்பர்.. வாழ்த்துக்கள் …” என்று ஆர்தர் மற்றும் மீராவுக்கு சொன்னாள்.

“க்கும்… இந்த உலகமகா காதலுக்கு இது ஒண்ணுதான் குறைச்சல்.” என்று முணுமுணுத்து கூற மறுபடி அது என்ன என்று மீரா முறைத்து கொண்டே கேட்க

“இல்ல..பாராட்டினாங்களே.. அதுக்கு நன்றி சொன்னேன்.” என்று சொல்லி சமாளித்தான் ஆர்தர்..

“ஓகே நீங்க எல்லாம் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க.. எங்க போகவேணும் என்னாலும் ட்ரைவர் கிட்ட சொல்லுங்க. அவர் உங்களை கூட்டிட்டு போவாங்க… என் பிரெண்ட்டோட பெர்த் டே பார்ட்டி ஒண்ணு இருக்கு.. நீங்க வருவீங்க என்னு சொன்னதால் காலேஜுக்கு லீவு போட்டேன்… அவள் இப்போ செம்ம காண்ட்ல இருக்காள். பிலீஸ் நான் உடனே காலேஜுக்கு கிளம்பியாகனும்.. பாய்…” என்றுவிட்டு டிடானியா சென்றாள்.

அவர்களும் சாப்பிட்டு முடிந்த பின்னர்  ஆண்கள் இருந்த அறைக்குள்ளே சென்றனர்.

“எல்லாம் நாம நினைச்சமாதிரியே நடந்துகிட்டு இருக்கு.. இனி அடுத்து என்ன பண்ணனும் என்னு பிளான் போடணும்.” என்றாள் ஜெனி. எல்லோரும் அவளுடைய திட்டத்தை கேட்க தயாராக இருந்தனர்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“இந்த பொண்ணு டிடானியா பழகுறதுக்கு நல்ல பொண்ணா இருக்கால்லே…” என்று மீரா பாத்ரூம் செல்ல டவலை கையில் எடுத்து கொண்டே கூற ஜெனி, “ஆ. ஆஹ்.. அதான் பார்த்தேனே… எவ்வளவு சாவுகாசமா பேசுரா என்னு.”…

“இந்த பொண்ணு டிடானியா பழகுறதுக்கு நல்ல பொண்ணா இருக்கால்லே…” என்று மீரா பாத்ரூம் செல்ல டவலை கையில் எடுத்து கொண்டே கூற ஜெனி, “ஆ. ஆஹ்.. அதான் பார்த்தேனே… எவ்வளவு சாவுகாசமா பேசுரா என்னு.”…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *