அமைதிப் பூங்காவில் அகதிக் கைதியாய் நான்!

  • 8

அமைதிப் பூங்காவில்
அகதிக் கைதியாய்
நான் இருந்த
வேளை அது!

கீச்சிட்டு கதறும்
இரவுகள், ஓட்டைகள்
நடுவில் மின்மினி
பூச்சிகலாய்த் தெரியும்
கண்கள், வாடிப் போய்
இருந்து தோடியும்
கிடைக்காத வாழ்வினால்
வந்த பாடத்தினால்!

அரண்ட இருட்டுக்குள்
உருண்டை உருண்டையாய்
ஓடித்திரியும் கண்
மணிகள் யாருடையது
என்று யுகிக்க முன்பு
நான் அடுத்தவனாய்
அங்கிருக்கிறேன்!

அங்கே அழகாய்
அரவணைப்பார்கள் தாய்
வயிற்றில் பாதுகாப்பைப்
போன்று என்ன
தாய் அவள்
சீண்டாமல் பராமரிப்பாள்
இவர் சீண்டியே பறியேடுப்பார்
உருக்களை!

காலை பகவலன் கண்
திறக்க. கண் மூடி
கிடப்பவர்களை யார்
பார்ப்பார் அங்கங்கள்
எங்கங்கே கிடப்பதைப்
பார்த்தால் இதயம்
தவழ்ந்து ஓடிவிடும்!

அந்த வலிகளையும் தாங்கி
வழிகளைத் தேட
வேண்டிய நேரங்கள்
வரும் இங்கு
சுவர்களுக்கு இரத்தக்
கரைகள் பூசி இருப்பதால்!

அடுத்து!
ருசியாக உண்ண
இரகசியமான உணவு
உணவுக்குள் குதுகலமாய்
திரியும் புழுக்கள்
அந்த புழுக்களை
அழுக்கு கைகளால்
தள்ளி விட்டு உண்டுதான்
ஆகவேண்டும்!

என்ன செய்வது
அழகழகாய் உபசரித்த
உறவுகள் கை
நழுவிப்போனதே!
ஆசை பேச்சுக்கள்
ஊமையாகிப் போனது
அநியாயக்காரன் நான்
செய்த கொடூரத்தால்!

கைதியாய் நான் இருந்து
கை நழுவிப் போனது
பல சொந்தங்கள்!
ஆசை முத்தம் தந்த தாய்,
அறிவாய் பேசிய தந்தை,
அன்பாய் கட்டியணைத்த
சகோதரங்கள்
என்பன!

நான் கைதியாய் இருந்து
விடுபட்டு வந்த வேளை
இங்கு ஊர் ஊமையாய்
கிடந்தது
உண்மைகளை குழியில்
தள்ளிவிட்டு!

அமைதியாய் வாழ
மீண்டும் கைதியாய்ப்
போனேன் இந்த
நாகரிக உலகில்
விடுதலையாகி!

என்னதான் நடக்குமோ
அதுவே நடக்கட்டும் என
உளறியபடி!!!

பொத்துவில் அஜ்மல்கான்
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அமைதிப் பூங்காவில் அகதிக் கைதியாய் நான் இருந்த வேளை அது! கீச்சிட்டு கதறும் இரவுகள், ஓட்டைகள் நடுவில் மின்மினி பூச்சிகலாய்த் தெரியும் கண்கள், வாடிப் போய் இருந்து தோடியும் கிடைக்காத வாழ்வினால் வந்த பாடத்தினால்!…

அமைதிப் பூங்காவில் அகதிக் கைதியாய் நான் இருந்த வேளை அது! கீச்சிட்டு கதறும் இரவுகள், ஓட்டைகள் நடுவில் மின்மினி பூச்சிகலாய்த் தெரியும் கண்கள், வாடிப் போய் இருந்து தோடியும் கிடைக்காத வாழ்வினால் வந்த பாடத்தினால்!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *