உடைந்து போன உள்ளம்

  • 18

அவள் பேசுவாள் என்று
பல மாதங்களாக
கட்டார் நாட்டில்
தனி மரமாய்
இலைதுரிந்து
பட்டுப்போய் காத்திருந்தேன்!

திடீரென்று ஒரு
பலத்த காற்று
என்னை நோக்கியது
ஆமாம் அவள்தான்
என் [ருஷா]
நான்கே நான்கு
வார்த்தைகள்தான் பேசினால்.

உன்னை பிடிக்கவில்லை,
உன்னிடம் பேச நேரமில்லை,
என் நிம்மதியை அழித்து விடாதே,
என் வாழ்க்கை
உன்னால் அழிந்து விட்டது

இதைக்கேட்ட என் செவிகள்
கண் கலங்க வைத்து
சற்று மௌனமாய் வைத்தது
என் உள்ளத்தை

என் உதடு அவளிடம்
பேச அசைகின்றது
ஆனாலும் பேச்சு வரவில்லை
எதை பேசுவேனென்று.
எது பேசினாலும்
உன் இதயதில்
ஈரம் இருக்காது என்று
மௌனமாய் யோசித்தேன்

என்னை வேண்டாமென்று
சொல்ல பல காரணங்கள்
வைத்துள்ளாய் நீ!
இந்நிலையில் என்
பேச்சுக்கு மதிப்பில்லை
என்று உணர்ந்து கொண்டேன்

இம்மண்ணில்
உயிர் சொட்டும்
காலம் வரையன்றி
சுவர்க்த்திலும் காத்திருப்பேன்
உன்னுடன் பேசிய நினனைவுகளோடு.!!

F.M.Izzathullah
Ninthavur -03

அவள் பேசுவாள் என்று பல மாதங்களாக கட்டார் நாட்டில் தனி மரமாய் இலைதுரிந்து பட்டுப்போய் காத்திருந்தேன்! திடீரென்று ஒரு பலத்த காற்று என்னை நோக்கியது ஆமாம் அவள்தான் என் [ருஷா] நான்கே நான்கு வார்த்தைகள்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *