இப்படிக்கு தந்தை

  • 21

சோற்றுக்கு கஷ்டப்படும் தந்தைகளும் பிள்ளைகளும் அழுது கொண்டும் சோகத்திலும் இருக்க வேண்டுமென்பதில்லை. கூரை இடிந்து போனதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிராமல் மேலே நேரடியாகவே தெரியும் உதிக்கும் நிலாவை ரசித்துக் கொண்டு கடந்து போய்விடு என்றால் நாளை மழை பெய்து, பிள்ளைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமல் தந்தை யோசிக்க வேண்டி இருப்பதால் அதை ரசிக்கவா முடியும்.,? என்று கேட்க முடியும்.

நாளை மழை பெய்தால் நனைத்து கொண்டு ஆனந்தக் கூத்தாடுஅல்லது இப்போது அதை ரசிதுக் கொண்டு போய் விடு என்று ஒருவர் கூற முடியும். ஒன்று நடந்ததைப் பற்றியோ அல்லது நடக்க விருப்பத்தைக் குறித்தோ மனிதன் சிந்தித்து சிந்தித்து, அவன் நிகழ்காலத்து பல சந்தோஷங்களை இழந்து விடுகிறான். இன்று பொதுவாக மனிதனது வாழ்வு நிலை அவ்வாறே அமைந்துள்ளதால் கவலைகளும் சோகங்களும் அவனை ஆக்கிரமித்துக் கொண்டு, செத்து செத்து வாழும் அபாக்கிய நிலையே தோன்றியுள்ளது.

அல்லாஹ்வின் படைப்பினங்கள் சிந்திப்பதற்காக மட்டுமல்ல அந்த படைப்பினங்களின் ஆக்கத்திறனை உணர்வு ரீதியாக உணரும் போதே எமது சிந்தனை சீர் பெறுகிறது. அம் முறையிலேயே அவை அமையப் பெற்றுள்ளன.

சோற்றையும் வயிற்றையும் பற்றி மட்டும் சிந்திக்கின்ற ஒருவன் ஏனயைவற்றை கவனத்திற் கொள்ளாமல் விடுவது அவரவர் புலக் கட்சியைப் பொறுத்ததே.வாழ்வு பற்றிய ஒருவனது எண்ணக்கருவை கொண்டதே. அதை ஒவ்வொருவரும் எடுத்து கொள்ளும் விதத்தைப் பொறுத்ததே.

“ஒங்களுக்கத்தானே ராவு பகலா சம்பாதிக்கிற” என்று கூறிக் கூறியே தந்தைகள் நியாயங்கள் காணலாம். சம்பாதிப்பதும் வயிற்றை நிரப்புவதும் மட்டுமே தங்களது கடமை போல் அவர்கள் கருத்துக் கொண்டுள்ளனர். ஆனால் பிள்ளைகளுக்கு அவை நியாமல்ல. பெற்றோர்கள் தங்களோடு உடனிருக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. அதுவே அவர்களுக்கு நியாயமாக உள்ளது.

மானிட உலகில் வாழுவதால் மட்டும் பிரச்சினைகள் அதிகமாகவே இருக்கும். ஆன்மீகமும் இந்த விரிந்து கிடக்கும் இயற்கையுமே மனிதனுக்கு ஒத்தடம் கொடுக்கக் கூடியவை. இயற்கையோடு வாழ நினைப்பது மனித இயல்போடும் உணர்வோடும் சம்பந்தப்பட்டது. அதற்கு பிள்ளைகள் தூண்டப்பட வேண்டும். அதை நிராகரித்து வாழும் போது அவர்கள் சமநிலையை இழக்க நேரிடலாம்.

வருடத்திற்கு ஒருமுறை தமது குடும்பத்தை சுற்றுலா கூட்டிச் செல்வதை மட்டும் பலர் சிந்திக்கிறார்கள். வீட்டிற்கு வெளியே நாளாந்தம் அவர்கள் வாழும் போது விரிந்து கிடக்கும் இயற்கையோடும் இதமான காற்றோடும் கானும் பூக்களோடும் எவ்வாறு பிணைப்போடு வாழுவது பற்றி சிந்திப்பதில்லை அல்லது அவற்றை அனுபவிக்காமல் அவர்கள் சென்று விடுகிறார்கள்.

வாழ்வை சந்தோஷமாக வாழ்வதும் ரசிப்பதும் வாழ்வியல் பிரச்சினகளை ஊடறுத்துக் கொண்டேயொழிய பிரத்தியேகமாகவல்ல. அதுவே வாழ்வின் யதார்த்தமாக உள்ளது.

எம்.ரிஸான் ஸெய்ன்
வியூகம் வெளியீட்டு மையம்

சோற்றுக்கு கஷ்டப்படும் தந்தைகளும் பிள்ளைகளும் அழுது கொண்டும் சோகத்திலும் இருக்க வேண்டுமென்பதில்லை. கூரை இடிந்து போனதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிராமல் மேலே நேரடியாகவே தெரியும் உதிக்கும் நிலாவை ரசித்துக் கொண்டு கடந்து போய்விடு என்றால் நாளை…

சோற்றுக்கு கஷ்டப்படும் தந்தைகளும் பிள்ளைகளும் அழுது கொண்டும் சோகத்திலும் இருக்க வேண்டுமென்பதில்லை. கூரை இடிந்து போனதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிராமல் மேலே நேரடியாகவே தெரியும் உதிக்கும் நிலாவை ரசித்துக் கொண்டு கடந்து போய்விடு என்றால் நாளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *