காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 39

  • 76

ராபார்ட்  ஃபோனை காணாமல் திருதிருவென முழிக்க அவனை சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் குட்டி ராட்சதர்களை போலவே உணர்ந்தான்…

“எங்கடா வெச்சி தொலைச்சே?”என்று ஆர்தர் கேட்க…. இவர்களிடம் எப்படி சொல்வது என தெரியாமல் தடுமாறி நின்றான் ராபர்ட்.

“உன்னை தான் கேக்குறோம்… ஃபோனை விடு குறைந்தது நீயாச்சும் ஒருவாட்டி அவங்க பேசியது என்னவென்று கேட்டாயா?” என்று கேட்க அதற்கும் ஊஹூம் என்று தலையாட்டிவிட்டு….

“என்னோட ஃபோன் டிடானியா ரூம்ல இருக்கும் என்று நினைக்கிறேன்..”என்றான் தலையில் கைவைத்து பின்புறம் திரும்பியபடி…

“வாட்!!!!உன்னோட ஃபோன் அங்க எப்டி போச்சு?”என்று மீரா அடிக்காத குறையாக அதட்டினாள்…

“சாரி.. காய்ஸ் நான் உண்மையை சொல்லிர்றேன்.. பவர் கட் ஆனப்போ அவ தனியா இருப்பா என்று கூட பேசிக்கிட்டு இருக்கலாம் என்று போனேன்.. அங்கேயே மறந்து வெச்சிட்டு வந்துட்டேன்…” என்றதும் எல்லோரும் அவனை கொல்வது போல முறைத்தனர்.

“இப்போ எப்படி போய் எடுக்கிறது…?”என்று கில்கமேஷ் யோசித்து கொண்டே கேட்டான்.

“அது பெரிய விஷயமே இல்ல… போனா கேட்டா தந்திட போகிறாள்.. ஆனா டிடானியா சும்மாவாச்சும் அந்த வாய்ஸ் நோட்ட கேட்டுட்டா.. அவ்வளவு தான் நாம எதுக்கு வந்திருக்கோம் என்று அவளுக்கு தெரிஞ்சிடும்…”என்றாள் ஜெனி…

“இருக்கட்டும்… நானே போய் வாங்கிட்டு வர்றேன்…”என்று எழுந்தான் ராபர்ட்.

“ம்ம் .சரி… சீக்கிரம் போ.. அவ தூங்கிடபோரா!” என்று அனுப்பினாள் மீரா…

ராபர்ட் வெளியே செல்ல கதவை திறந்த போது அங்கு டிடானியா நின்று கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் எல்லோரும் ஒரு கணம் ஸ்தம்பித்து போய் விட்டனர்.

“டி..டி….டிடானியா.. நீ என்ன. இந்த நேரத்தில்….?”என்று ராபார்ட் கேட்டான்.” ஒரு வேளை நாம பேசினது எல்லாம் இவளுக்கு கேட்டிருக்குமோ”என்று பயம் வேறு..

“இதை நீ என்னோட ரூம்லயே விட்டுட்டு வந்துட்டே.. அதான் திருப்பி தரலாம் என்று…” என கூறி ராபார்ட்டின் ஃபோனை அவன் கையில் திணித்தாள். அவனுக்கோ  சுவாசக்குழாய் அடைத்து விடுவது போல இருந்தது..

“த.த.. தாங்ஸ்….”

அவனை தாண்டி அறைக்குள் எட்டிப்பார்த்த டிடானியா,

“ஒஹ்ஹ் எல்லோரும் இங்கதான் இருக்கீங்களா?… ஏங்க… தூங்காம கூடவா ப்ரொஜெக்ட் ஒர்க் பண்ணுவாங்க… ஏதோ போங்க… அணிவே.. குட் நைட்..” என்றுவிட்டு எல்லோருக்கும் ஒரு குட்டி பை காட்டிவிட்டு அவள் அறைக்கு சென்றாள். அப்போது தான் உயிர் வந்தவன் போல பெருமூச்சு விட்டு கொண்டே உள்ளே வந்து கதவை லாக் பண்ணினான்…

எல்லோருக்கும் ஒரே கேள்விதான்,

“டிடானியா  புலனாய்வு துறையில் படிச்சி கிட்டு இருக்கா… சும்மாவே அவளுக்கு ஆயிரம் சந்தேகம் வரும்.. இப்போ கூட இந்த ஃபோன்ல என்ன இருக்குன்னு பார்க்காம விட்டிருப்பாளா? சந்தேகம் தான்..” இது எல்லோருடைய மனப்பதிவும்…

அதன் பின்னர் தான் உயிரை பணயம் வைத்து ரெகார்ட் பண்ணின ஆடியோவை கேளுங்க என்று பெரிதாக சீன் போட்டுவிட்டு அதை அழுத்தினான். அமைதியாக இருந்து அந்த ரேகார்டிங்கை கேட்டதில் இருந்து ஒரு சில விடயங்கள் மட்டுமே அவர்களுக்கு உதவியாக இருந்தது.

மித்ரத் ஆர்க்கியொலிஸ்ட்களுக்கு தெரியாமலேயே என்கிடு உடம்பை எடுக்க முயற்சி பண்ணி இருக்கான். ஆனா வேறு ஏதோ காரணத்தால அவங்க கிட்ட உண்மையை சொல்லி இருக்கான். அதாவது அவங்க கூட ஒரு டீலுக்கு வந்திருக்கான்.

இன்னும் மூணு மாசத்துக்குள்ள இந்த அகழ்வாராய்ச்சியை முடிச்சி என்கிடு உடம்பை இவர்களே கண்டுபிடிச்சி கொடுக்கணும். அதுக்கு பதிலாக அவர்களுக்கு ஆராய்ச்சிக்கு தேவையான அனைத்து வித உதவிகளையும், அதுதவிர உள்ளே இருக்குற ஏனைய தொல்பொருட்களையும் அவர்களே எடுத்து கொள்ளனும், என்பது தான் அது.

“சே… நாம நினைச்ச மாதிரி இந்த ஆர்க்கியொலிஸ்ட் டீமுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை போல இருக்கே”என்றான் ஆர்தர்.

“நீ சொல்றது சரிதான், இவங்க பேசினத பார்த்தா நாம  போய்ஆர்க்கியொலிஸ்ட்   விஷயத்தை அவன்கிட்டயே சொல்லி பர்மிஷன் எடுத்தப்பறம் தான் எனக்கு கால் பண்ணி நாளைகி வர சொன்னாங்க ஒரு வகையில் அதுவும் நல்லது தான். இப்போ நாளைக்கு நானும் மீராவும் ஆர்க்கியொலிஸ்ட் கூட அங்க நுழைஞ்சிடுவோம்.

அதேபோல் கில்கமேஷும் ஆர்தரும் அங்க வெர்க் பண்ணுறவங்களா போயிடுவாங்க.

ராபர்ட்! நம்ம பிளான்ல முக்கியமான ரோல் உன்னோடது தான்… அதனால நீயும் ஜாக்கிரதையா இரு அதே போல மோதிரத்தை எடுக்கவும் முயற்சி பண்ணிக்கிட்டே இரு…” என்றாள் ஜெனி…

“ஹ்ம்ம்”

“சரி சரி எல்லோரும் போய் தூங்குங்க…ரொம்ப நேரமாயிடுச்சு…”என்று மீரா சொல்ல…

“அப்போ நீங்க ரெண்டுபேரும் கெட் அவுட்டு… “என்றான் ஆர்தர்…

“அது சரி… வாடி… போயிடலாம்..” என்று கூறி மீரா ஜெனியை அழைத்து கொண்டு செல்ல போகிற போக்கில் அப்படியே திரும்பி கில்கமேஷை ஒரு பார்வை பார்த்து கொண்டு சென்றாள்.

அப்படியே நேரங்களும் கடந்து.. விடியற்காலை ஆனது.. திட்டமிட்டது போலவே எல்லோரும் புறப்பட தயாராகினர். டிடானியா தயாராகி காலேஜ் செல்ல போகும் போது கையில் ஒரு பேக் இருந்தது. அது அன்றைக்கு மீராவும் ஜெனியும் கண்ட அதே பேக் அவசர அவசரமாக போகும் போது அதிலிருந்து தெரிந்த கறுப்பு போல ஏதோ ஒன்று ராபர்ட் கண்ணிலும் தென்பட்டது ஏதோ யோசித்து கொண்டே அவனும் ஆபீசுக்கு சென்றான்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

ராபார்ட்  ஃபோனை காணாமல் திருதிருவென முழிக்க அவனை சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் குட்டி ராட்சதர்களை போலவே உணர்ந்தான்… “எங்கடா வெச்சி தொலைச்சே?”என்று ஆர்தர் கேட்க…. இவர்களிடம் எப்படி சொல்வது என தெரியாமல் தடுமாறி நின்றான்…

ராபார்ட்  ஃபோனை காணாமல் திருதிருவென முழிக்க அவனை சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் குட்டி ராட்சதர்களை போலவே உணர்ந்தான்… “எங்கடா வெச்சி தொலைச்சே?”என்று ஆர்தர் கேட்க…. இவர்களிடம் எப்படி சொல்வது என தெரியாமல் தடுமாறி நின்றான்…

One thought on “காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 39

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *