காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 45

  • 11

“என் கண்ணுமுன்னாடியே நடந்த இந்த அக்கிரமத்தை என்னால தட்டி கேட்க முடியவில்லை என்ற குற்ற உணர்வும், இவளை இப்படி அம்மா இல்லாதவளா ஆக்கின அந்த மிருகத்தை கொல்லனும் என்று முடிவு பண்ணினேன். அவ அம்மாவை கொன்றவன்.

“அவனை நான் சும்மா விடமாட்டேன். என்னோட நண்பனோட உடலை வைத்து. அவன் வேற ஏதோ திட்டம் போட்டிருக்கான். அப்படி நடக்க நான் விடவே மாட்டேன்.” என்று கோபமாக சொன்னான் கேகே

கேகே, நண்பன் என்றது யாரை என்று புரியாமல்  டிடானியாவும் விக்டரும் குழம்ப….

“ஓகே காய்ஸ். உங்களுக்கும் மித்ரத்துக்கும் என்ன தொடர்பு என்னு நாங்க தெரிஞ்சிகிட்ட மாதிரி நாங்க ஏன் இங்க வந்திருக்கோம். எங்களுக்கும் அவனுக்கும் என்ன தொடர்புன்னு நாங்க சொல்லிர்றோம்.” என்றான் ராபர்ட்.

அதன்பின்னர் ஜெனியும் நண்பர்களும் மியூசியம் பார்க்க சென்றதில் இருந்து இப்போது வரையான எல்லா சம்பவங்களையும் மாறி மாறி எல்லோரும் சொல்லி முடித்தனர். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த  விக்டரும் டிடானியாவும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

‘கி. கி.. கிங் கில்கமேஷ்.. ஒஹ்ஹ். மை காட்… இட்ஸ் இம்போசிபில்.?” என நாவு தடுமாறினான் விக்டர். டிடானியா அவனுக்கு அடுத்தபடியாக. பேச்சு மூச்சின்றி நின்றாள்.

“எங்களுக்கு உதவி பண்ண இவனுக்கு நாங்க செய்ய கூடிய ஒரே கைமாறாக அவன் கூடவே இருந்து என்கிடு பாடியை மீட்டு கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம்.” என்றாள் ஜெனி.

“வாவ்… கிரேட். நீங்க எல்லோரும் அமேசிங்…” என்றான் விக்டர்.

“ராபர்ட் என்னோட இலட்சியத்தை அவனோடதா எண்ணி எங்க கூடவே இருக்கான். அவனுக்கு நான் ரொம்ப கடமை பட்டிருக்கேன்.” என்றான் கில்கமேஷ்.

“தி கிரேட் கிங் கில்கமேஷ்காகவும் அவரோட கிரேட் நண்பர் என்கிடுவுக்காகவும் நான் சாகவும் கூட தயாரா இருக்கேன்.” என்று ராபர்ட் சொன்னதை கேட்டு எல்லோருக்கும் புல்லரித்து விட்டது.

“இன்னிக்கி அந்த மித்ரத்தை போட்டுத்தள்ள செம்ம பிளான் போட்டு வெச்சிருந்தோம். ஆனா ராபர்ட் தான் வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டான்.” என்று விக்டர் சொன்னான்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கில்கமேஷ்,

“என்ன அவனை கொல்ல திட்டம் போட்டீங்களா? என்ன ஆச்சு ஏன் அப்படி பன்னீங்க?” என்று கேட்டான்.

“எங்க பண்ண விட்டான். இவன். அதான் நடுவுல பூந்து எல்லாத்தையும் நாசமாகிட்டானே” என்று அவள் சொல்ல

“ஆமா கேகே… நான் அவன் கூட இருந்தேன் அப்போ டிடானியா துப்பாக்கியால் அவனை சுட தயாரா நின்னதும். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. உடனே அவளை தட்டிவிட்டு நடக்கவிருந்த அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்திட்டேன்.” என்றான்.

அப்பாடா என்பது போல் எல்லோரும் பெருமூச்சு விட்டனர். அப்பறம் கில்காமேஷே பேசினான்.

“முதலில் ஒருவிஷயத்தை நல்லா புரிஞ்சிக்க ஜெனி என்கிடு உடம்பு கிடைக்கும் வரை அவன் நமக்கு உயிரோட வேணும். ஆனா எப்படியும் அந்த மோதிரத்தை அதுக்கு முன்னாடியே நாம கைப்பற்றி ஆகணும்..

நீ ஒன்னும் வருத்தப்பட தேவையில்லை… அவனை கொன்னு நீங்க ரெண்டு பேரும் குற்றவாளி ஆக தேவல்லை.. நான் இருக்கேன்.. அவன் பண்ண எல்லா குற்றங்களுக்கும் அவன் அனுபவிக்க செய்வேன்.” என்று வாக்கு கொடுத்தான்.

“ஹ்ம்ம்… கில்கமேஷ் சொன்னபடி வாக்கை நிறைவேற்றுவான் காய்ஸ்… ஆனா இன்னிலிருந்து நீங்க எங்களுக்கு சப்போர்ட் டா இருந்தா…” என்றாள் ஜெனி…அதைகேட்டு இருவரும் இணைந்து

“கண்டிப்பாக…” என்றனர்.

“இப்போதான் எனக்கு ஒரு விஷயம் நியாபகத்துக்கு வருது… தன்னோட ரூம்ல வந்தது யாருன்னு அந்த மித்ரத் சி சி டீவி கேமராவில் பார்த்தான். சரியாக க்ளூ கிடைக்கல என்றாலும். விக்டர் உன்னோட பைக்கை போலீஸ் ட்ரேஸ் பண்ணுவதாக சொன்னாங்க. அதோட இன்னிக்கி ஹோட்டல்ல கூட கேமரா இருந்து இருக்குமே. இப்போ எல்லாரும் செம்மையா மாட்ட போறோம்.” என்றான் ராபர்ட்.

அதை கேட்டு ஆளுக்காள் முகத்தை பார்த்து கொண்டவாறே சிரித்தனர்.

“என்ன. என்னசிரிப்பு. நான் என்ன ஜோக்கா சொன்னேன்.”

“அட நான் துப்பாக்கி வெச்சிருந்தப்போ விக்டர் என்ன பண்ணிக்கிட்டு இருந்தான்னு நினைக்குறே.  அவன் கேமரா றூமில் இருந்தான். அந்த மொத்த பூட்டேஜையும் இவன் எடுத்துட்டான்.” என்றாள்.

“ஒஹ்ஹ் பலே கில்லாடியா இருக்கீங்க ரெண்டுபேரும்.” என்று ஆர்தர் புகழ்ந்தான். அதைக்கேட்டு இருவரும் சிரிக்க

அப்போது மீரா… “அதான் எல்லோரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோமே வாங்க ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்.” என்று சொல்ல எல்லோரும் சேர்ந்து அவளுடைய ஃபோனில் செல்ஃபி எடுத்து கொண்டனர்.

“இனியென்ன பண்ணனும். ஆமா உங்க டீம் லீடர் யாரு ..கேகேவா…?” என்று கேட்டாள் டிடானியா.

“இல்ல.”என்றுவிட்டு எல்லோரும் ஜெனியை நோக்கி கைகாட்ட அவளோ திரு திருவன முழித்து கொண்டிருந்தாள்.

“ஹலோ…. பியூட்டி…. டீம் லீடர்… மேடம் என்ன பிளான் போட்டு வெச்சிருக்கீங்க..” என்று கேட்டான் விக்டர்.

“ஹாஹா. இப்போ ரிங் எடுத்து வர்ற பொறுப்பை நாங்க இந்த சுட்டிப்பையன் ராபர்ட் கிட்ட கொடுத்து இருக்கோம். நாங்க எல்லோரும் ஒருவழியா அகழ்வாராய்ச்சி நடக்குற இடத்துக்கு போய் சேர்ந்துட்டோம். எப்படியும் என்கிடு பாடியை எடுத்துடுவோம். உங்க உதவி தேவைப்படும் போது கண்டிப்பாக சொல்லுறோம். சரியா…” என்றாள்.

“ஹ்ம்ம். ஓகே..”என்றாள் டிடானியா..

ஏதோ ஒருவழியாக நிலைமை எல்லோருக்கும் சார்பானதாக மாற சந்தோசமாக சிரித்து கொண்டே எல்லோரும் அவரவர் இடங்களுக்கு சென்றனர்… விக்டரும் ஜெனி மீது ஒரு காந்த பார்வையை வீசி விட்டு அவனுடைய பைக்கில் அவன் வீட்டுக்கு சென்றான்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“என் கண்ணுமுன்னாடியே நடந்த இந்த அக்கிரமத்தை என்னால தட்டி கேட்க முடியவில்லை என்ற குற்ற உணர்வும், இவளை இப்படி அம்மா இல்லாதவளா ஆக்கின அந்த மிருகத்தை கொல்லனும் என்று முடிவு பண்ணினேன். அவ அம்மாவை…

“என் கண்ணுமுன்னாடியே நடந்த இந்த அக்கிரமத்தை என்னால தட்டி கேட்க முடியவில்லை என்ற குற்ற உணர்வும், இவளை இப்படி அம்மா இல்லாதவளா ஆக்கின அந்த மிருகத்தை கொல்லனும் என்று முடிவு பண்ணினேன். அவ அம்மாவை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *