காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 65

  • 14

“என்ன ஜெனி சொல்லுறே? நீ எப்படி!!!”

“காரணமா தான் சொல்லுறேன். எனக்கு சுமேரியன் மொழி நல்லாவே தெரியும், அதனால என்கிடுவோட என்னால ஈஸியா கம்மியூனிகேட் பண்ண முடியும்.” என்றாள்.

“இப்போ இருக்குற சிடுயூவேஷன்ல பொருத்தமான சயின்டிஸ்ட் கிடைக்கும் வரைக்கும் மித்ரத் என்கிடுவை எதுவும் பண்ண மாட்டான்.”என்றாள் ஜெனி,

“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்லுறே?”என்று டிடானியா கேட்டாள்.

“ஜெனி சொல்றது சரிதான், அந்த ஆராய்ச்சியை சக்ஸஸா செஞ்சி முடிக்க கூடிய ஆளுங்க தான் அவனுக்கு வேணும். சோ… அதுவரை என்கிடு உயிருக்கு எதுவும் ஆகாது. மித்ரத்துக்கு சுமேரிய மொழி அத்துப்படி என்பதால் என்கிடு அவனை ரொம்ப ஈஸியா நம்பிடுவான்.” என்றான் விக்டர்.

” இதுவரையில் அவனுக்கு விக்டரையும் டிடானியாவையும் தெரியாம இருந்தது நமக்கு ஒரு ட்ரம் கார்ட் ஆக இருந்தது. ஆனா இனி அப்படி கிடையாது. நடந்த கலவரத்தில்  அவனுக்கு நாம எல்லாருமே  கண்ணில் பட்டு இருப்போம். அங்க இருக்குற சி சி டிவி ஃபுட்டேஜ் ல கூட நாம தெரிஞ்சி இருப்போம். நாம இருக்குற இடத்தை அவன் கண்டிப்பாக கண்டுபிடிச்சிடுவான்.” என்றாள் மீரா.

“முதலில் பிளான். அப்பறம் தான் பிரோப்ளம் பற்றி யோசிக்கணும்.” என்றாள் ஜெனி.

“சரி அது என்னன்னு நீயே சொல்லிடு..” என்றான் கில்கமேஷ்.

“ஐயையோ…” என்று டிடானியா ஃபோனை பார்த்து கொண்டே கத்த எல்லோரும் அவளை திரும்பி பார்த்தனர்.

“என்னாச்சு??”

“வீ ஆர் இன் ட்ரபிள்?”

*************

மிக அவசரமாக நமது குழு டிடானியா வீட்டுக்கு விரைந்து கொண்டிருந்தது. அவளுடைய போனில் அவள் பார்த்த செய்தி லூதர் அங்கிள் ஊருக்கு வந்துவிட்டார் என்பது தான். வேனை ஒரு ஓரமாக பார்க் பண்ணிவிட்டு எல்லோரும் பயத்துடனும் பதற்றத்துடனும் உள்ளே சென்றனர் அப்பாவுடைய ஷூவை வாசலில் கண்டதும்,

“ஒஹ்ஹ் மை காட்…. சீக்கிரம் சீக்கிரம்..”என்று டிடானியா எல்லோரையும் அழைத்து கொண்டு அவளுடைய வீட்டுக்குள் நுழைந்தாள்.

அங்கே ஹாலில் அவளுடைய அப்பா  உட்கார்ந்து இருந்தார். வேலையாள் அவருக்கு ஜுஸ் ஏதோ கொடுத்து விட்டு போய்கொண்டிருந்தான். அவரை பார்த்ததும் தட்டு தடுமாறி…

“ஹேய் டாடி… எப்போ வந்தீங்க… சொல்லி இருந்தா எயார்போர்ட் வர வந்து இருப்பேனே!” என்ற படியே அப்பாவை போய் அணைத்து கொண்டாள் டிடானியா. இவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக ஹாலுக்குள் நுழைந்தனர்.

“எப்படிமா இருக்கே… இளைச்சி போய்ட்டியே, சரியா சாப்பிடல்லியா?” என்று கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல டாடி…”

“ஹேய் ஜெனி,கேகே..மீரா ஆர்தர் எல்லோரும் எங்க போய் வர்றீங்க?

ஒஹ்ஹ் விக்டர் நீயும் இங்கதான் இருக்கியா? ” என்றவர் ராபர்ட்டை  பார்த்தார், “ஓஹ்.. மை.. ராபர்ட் க்கு என்னாச்சு…?” என்று பதறிப்போய் கேட்டார்.

அப்போது தான் அங்கு வந்த புதிய முகங்கள் ரெண்டுபேரையும் பார்த்தார். ஒரே குழப்பத்துடன் டிடானியாவை திரும்பி பார்த்தார்.

“அது வந்து டாடி… இவங்க ராபர்டோட பேரண்ட்ஸ் வேலை விஷயமா இங்கு வந்து இருக்காங்க இவங்களை பிக் அப் பண்ண போன போது ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்.”

“என்னது ஆக்ஸிடெண்டா? ” என்று பதறிப்போய் கேட்டார்.

“ஐயோ அங்கிள் நீங்க நினைப்பது போல பெரிசா எதுவும் இல்லை எல்லோருக்கும் சின்ன சின்ன காயங்கள் தான்…” என்று ராபர்ட் சொன்னான்.

“ஒஹ்ஹ். மை குட்நெஸ்… வாங்க வந்தவங்க எல்லோரும் ஏன் நிக்குறீங்க வந்து உக்காருங்க.” என்றார்.

“ஆஹ் அங்கிள் நீங்க வந்த டயர்ட்ல இருப்பீங்க போய் பிரஷ் அப் பண்ணிட்டு வரலாமே.” என்றாள் மீரா.

“ஆஹ். அதுவும் சரிதான். எல்லோரும் இருங்க நான் இதோ வந்துர்றேன்.” என்று விட்டு லூதர் உள்ளே செல்ல அவருடைய லக்கேஜ் எல்லாம் வேலையாள் கொண்டு சென்றான்.

அப்போது மேசை மீது இருந்த பாஸ்போட்டை எதேச்சையாக எடுத்து பார்த்த ஜெனி மீண்டும் அதிர்ச்சி அடைந்தாள்.

“அட கடவுளே இதை எப்படி மறந்து போனேன்….????”

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“என்ன ஜெனி சொல்லுறே? நீ எப்படி!!!” “காரணமா தான் சொல்லுறேன். எனக்கு சுமேரியன் மொழி நல்லாவே தெரியும், அதனால என்கிடுவோட என்னால ஈஸியா கம்மியூனிகேட் பண்ண முடியும்.” என்றாள். “இப்போ இருக்குற சிடுயூவேஷன்ல பொருத்தமான…

“என்ன ஜெனி சொல்லுறே? நீ எப்படி!!!” “காரணமா தான் சொல்லுறேன். எனக்கு சுமேரியன் மொழி நல்லாவே தெரியும், அதனால என்கிடுவோட என்னால ஈஸியா கம்மியூனிகேட் பண்ண முடியும்.” என்றாள். “இப்போ இருக்குற சிடுயூவேஷன்ல பொருத்தமான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *