இலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் அரேபியரின் வம்சாவளியினர் என்பது திரிபுபடுத்தப்பட்ட வரலாறாகும்!

  • 8

கடல்வழி வர்த்தகத்துடன் தென்னிந்திய இலங்கை கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மற்றும் மலையாளம் பேசும் சுவனர்களுடன் அரேபிய வர்த்தகர்களுக்கு இஸ்லாத்திற்கு முன்பிருந்தே தொடர்பு இருந்திருக்கிறது.

அரேபியர்கள் மூலம் இஸ்லாம் இந்தப் பகுதிகளில் பரவ ஆரம்பித்திருக்கிறது, மாறாக இலங்கை வந்த அரேபியர்கள் சிங்கள தாய்மாரை திருமணம் செய்ததால் தான் இலங்கை சோனகர் தோற்றம் பெற்றனர் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்குமான வரலாறு அல்ல, அது ஒரு சிறு பகுதியினருக்கு மாத்திரமே பொருந்தும்.

அவ்வாறு சிங்களத் தாய்மார்களுக்கும அரபிகளுக்கும் பிறந்தவர்கள் சோனகர்கள் என்றால் தாய்மொழி சிங்கலாமாக அல்லது அரபியாக (தகப்பன் மொழி) இருந்திருக்கும். வட இந்தியாவில் இருந்து ஆரிய சிங்களவர் இலங்கைக்கு வர முன்னரும் இந்த நாட்டில் தமிழ் பேசும் இந்துக்கள் போல் நாகர்கள் அல்லது சுவனர்கள் எனும் எமது வம்சமும் பூர்வீகம் கொண்டிருக்கிறது.

இந்த திரிபு படுத்தப் பட்ட வரலாற்றை வைத்துக் கொண்டு அரேபியாவில் இருந்து வந்த முஸ்லிம்கள் இங்கு நாம் சொலவதைக் கேட்டு வாழுங்கள் அல்லது அங்கு சென்று விடுங்கள் என்று பேசும் இனவாதிகளும் இருக்கின்றனர்!

2500 வருட பின்புலத்தைக் பௌத்தர்கள் போல் 2019 வருட பின்புலத்தைக் கொண்ட கிறிஸ்தவர்கள் போல், இலங்கை முஸ்லிம்களுக்கும் 1440 வருட இஸ்லாமிய பின்புலம் இருக்கிறதே தவிர எம் எல்லோருக்கும் இந்த பிராந்தியத்தில் தான் பூர்வீகம் இருக்கிறது என்பதனை எந்தவொரு சமூகமும் மறந்து விடலாகாது!

இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன்

 

கடல்வழி வர்த்தகத்துடன் தென்னிந்திய இலங்கை கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மற்றும் மலையாளம் பேசும் சுவனர்களுடன் அரேபிய வர்த்தகர்களுக்கு இஸ்லாத்திற்கு முன்பிருந்தே தொடர்பு இருந்திருக்கிறது. அரேபியர்கள் மூலம் இஸ்லாம் இந்தப் பகுதிகளில் பரவ ஆரம்பித்திருக்கிறது,…

கடல்வழி வர்த்தகத்துடன் தென்னிந்திய இலங்கை கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மற்றும் மலையாளம் பேசும் சுவனர்களுடன் அரேபிய வர்த்தகர்களுக்கு இஸ்லாத்திற்கு முன்பிருந்தே தொடர்பு இருந்திருக்கிறது. அரேபியர்கள் மூலம் இஸ்லாம் இந்தப் பகுதிகளில் பரவ ஆரம்பித்திருக்கிறது,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *