காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 80

  • 13

இரவு உணவு உண்டு முடிந்ததும் ஜெனிக்கு யோசனை. இப்போதைய நிலையில் என்கிடு கிட்ட பேச கூடாது. கண்டிப்பாக அவங்களுக்கு சந்தேகம் வந்துடும். என யோசித்து கொண்டிருக்கும் போதே என்கிடு ஜெனியிடம்,

“லீஸா! அப்பறம் மீதிக்கதை எப்போ!”

என்று கேட்டான். உண்மையில் இந்த கேள்வி அவளை ரொம்பவும் சந்தோசப்படுத்தி இருந்தாலும் பக்கத்தில் நின்று அவர்களையே பார்த்து கொண்டிருந்த மித்ரத்தின் அடியாளை பார்க்கையில் வந்த சந்தோஷமும் மறைந்தே போனது.

“அ… அது வந்து. இன்றைக்கு வேண்டாமே. எனக்கு தூக்கம் தூக்கமாக வருகிறது. காலையில் சொல்றேனே.”

என்றாள்.

“சரி நீ தூங்கனும் என்பதால விர்றேன்.”

என்றான். அவனும் எழுந்து வேறு திசையில் சென்றுவிட்டான். ஜெனி தனக்கு வழங்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள்.

*********

விக்டர் வீட்டுக்கு முன்னாடி கார் சத்தம் கேட்டதும், பதறியடித்து கொண்டு கதவருகே சென்று பார்த்தான். முதலில் உள்ளே நுழைந்த டிடானியா அவனை பார்த்து உதட்டை திருப்பிவிட்டு வேகமாக உள்ளே சென்று அமர்ந்தாள். அப்பறமாக கில்கமேஷ் குனிந்து கொண்டே உள்ளேவர தான் கேட்ட கேள்வி இவ்வளவு தூரம் இவனை பாதித்துள்ளது என்பதை விக்டரால் உணரமுடிந்தது. கில்கமேஷ் விக்டரை கடக்கும் அந்த நொடியில் அவன் வாயிலிருந்து,

“ஸாரி.”

என்று வந்தது. அவனை திரும்பி பார்க்காமலேயே அங்கேயே நின்று தோள்களை தடவி கொண்டே கில்கமேஷ் வீட்டுக்குள் நுழைந்தான்.

“நான் போய் ஹோட்டலில் ஏதாவது வாங்கிட்டு வரேன்.”

என்றான் விக்டர்.

“ஏய். அதெல்லாம் வேணாம். நாங்க வர்ற வழியிலேயே சாப்பிட்டோம். உனக்கும் வாங்கிட்டு வந்திருக்கோம்.”

என்று சொல்லி பார்சலை நீட்டினாள்.

“ஒஹ்ஹ். தாங்ஸ்.” என்று மறுபடி உள்ளே வந்தவன். அதை வாங்கி அங்கேயே இருந்து சாப்பிட்டு விட்டு அடுத்ததாக லேப்டாப்பில் ஜெனி பற்றி ஏதும் தகவல் வந்திருக்கிறதா என்று பார்த்தான்.

“அவகிட்ட இருந்து எந்த ரெஸ்பான்ஸும் வரலியா?”

என்று கில்கமேஷ் கேட்டான்.

“இன்னும் இல்ல அவங்க யாரும் வெளிய வந்ததாகவும் தெரியல.”

என்றான் விக்டர்.

“நாளைக்கு மதியம் வரை பார்ப்போம். அப்போ கூட எவ்வித ரெஸ்பான்ஸும் வரல என்றால் கண்டிப்பாக அவளுக்கு ஏதோ பிரச்சினை நாம அவளை காப்பாற்றி ஆகணும்.”

என்றாள் டிடானியா. அப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போது அவளுக்கு அப்பாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ஒஹ்ஹ்..டாடி….”

“எங்கம்மா இருக்கே, எவ்வளவு நேரமாச்சு உன்னோட ஃபோன் வேற ஸ்விச் ஆஃப்ல இருந்திச்சி நான் பயந்துட்டேன்.”

“ஸாரி டாடி… நான் ஒரு அசைன்மெண்ட் விஷயமா விக்கி கூடத்தான் இருக்கேன். இதோ வந்துர்றேன்.” என்றாள்.

“சரி சரி சீக்கிரம் வந்து சேரு.”

என்றுவிட்டு அவர் ஃபோனை வைத்தார்.

“ஓகே…நான் வீட்டுக்கு போகணும் விக்கி டிராப் பண்ணிடு..”

என்றாள். இருவரும் கில்கமேஷை கவனமாக இருக்கும் படி சொல்லிவிட்டு கிளம்பினார்கள். இன்றைக்கு அருகில் ஜெனி இல்லாதது அவனுக்கு ஏதோ ஒரு இனம்புரியாத கவலையை ஏற்படுத்தியது. நேற்று இரவு நடந்த சம்பவங்களை எண்ணி கவலைப்பட்டான்.

“ச்சே என்னால தான் அவ மாட்டிக்கிட்டா நான் தான் அவசர பட்டு அவளை கூட்டிட்டு போனேன். இப்போ அவ எந்த நிலையில் இருக்கிறாளோ மித்ரத் ஆளுங்க அவளை ஒன்னும் பண்ணிடாம இருக்கணும்.”

என்றெல்லாம் எண்ணி கொண்டு இருக்கும் போது லேப்டாப்பின் மேல் வைத்திருந்த டிவைஸ் ஏதோ ஒலியை ஏற்படுத்தவே, அதிர்ச்சியோட அதை எடுத்து காதில் மாட்டி கொண்டான். அங்கே அதிலே அவன் கேட்டது ஜெனியின் குரல்.

“ஹலோ ஹலோ. நான் பேசுறதை கேட்கிறீர்களா?”

“ஜெனி!”

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம் 

இரவு உணவு உண்டு முடிந்ததும் ஜெனிக்கு யோசனை. இப்போதைய நிலையில் என்கிடு கிட்ட பேச கூடாது. கண்டிப்பாக அவங்களுக்கு சந்தேகம் வந்துடும். என யோசித்து கொண்டிருக்கும் போதே என்கிடு ஜெனியிடம், “லீஸா! அப்பறம் மீதிக்கதை…

இரவு உணவு உண்டு முடிந்ததும் ஜெனிக்கு யோசனை. இப்போதைய நிலையில் என்கிடு கிட்ட பேச கூடாது. கண்டிப்பாக அவங்களுக்கு சந்தேகம் வந்துடும். என யோசித்து கொண்டிருக்கும் போதே என்கிடு ஜெனியிடம், “லீஸா! அப்பறம் மீதிக்கதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *