எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 13

  • 11

“ம்ம்.. சரி கேட்குறன்… எனக்கு தங்கத்தால.. புரோக் செஞ்சி தாங்க…”

என்று கம்பீரமான குரலோடு சொன்னாள்.

“ஏமா நான் சொன்னன் என்று இப்படி ஒரு கேள்வியா?”

“பார்த்திங்களா? இது தான் நான் கேட்கக்கூடாதுனு நினைச்ச… குரான்ல பாருங்க. சூறா நிஷால தங்க குவியலை சொல்லி இருக்கு நான் என்ன குவியலயா கேட்டன்…”

என்று சொல்ல, அவளின் எதிர்பார்ப்பை அறிந்து இருந்தும் ஏன் பெருமையாக கேட்டாளா என்று மனதால் நினைக்க..

“என்ன இப்படி கேட்டுடன்”

என்று நினைக்குறிங்களா என்று அவள் கேட்க, நான் மனசுல நினைச்சது எப்டி இவள் சொல்லுறாள் என்று சற்று பொறுமை காத்தான்.

“மார்க்கத்தில் பெண்கள் உரிமையை ஆண்கள் கொடுக்க தவறாங்க. அவர்களின் விருப்பத்தை மட்டும் திணிக்கிறாங்க. ஆனா தனக்காக வாழ வந்தவள்ட ஏதிர் பார்ப்ப கொஞ்சம் கூட நினைத்து பார்க்காகங்க இல்ல. நான் கேட்ட மஹர் பெருமைக்கு இல்ல. பெண்ணுக்கு இருக்கும் மஹர்ட உரிமையை வெளிப்படுத்த”

என்று அவள் சொல்லி முடிக்க. அவன், அவன் மனதில் நினைத்தை தவறு என்று புரிந்து கொண்டு, தனக்கு இப்படி ஒரு மனைவி கிடைத்ததை நினைத்து பெருமைப் பட்டான்.

“யூ ஆஹ் வெரி கிரேட்.. ருஷா. இன்ஷா அல்லாஹ் சமூகத்துக்கு நல்ல திருப்புமுனை ஆக நீங்க இருக்க நான் துணையா இருப்பன்.”

என்று நிசாத் சொல்ல,இந்த பேச்சு அவளுக்கு பல தைரிங்களை அவளின் எதிர் கால கனவுகளுக்கு வழியாய் அமைந்தது.

“சரி ருஷா புரோக் என்றா எப்படி மா… நான் அப்படி பெறுமதி என் மஹர்க்கு சேர்த்தன். ஒரு புரோக் செய்ய செலவாகும் தானே அவ்வளவு செலவு இல்லாம என் மஹர்ட பெருமதியும் குறையாம நீங்க தந்தா அல்ஹம்துலில்லாஹ்.

“யாரும் ஏதிர் பார்க்காத மஹர் கேட்டிருக்குகன்.”

“அப்போ யாரும் கொடுக்காத மஹர் தான் நீங்க தரணும். ஆஹ்”

“அல்ஹம்துலில்லாஹ் கட்டாயம் ருஷா சரி நான் இதை கேட்க தான் இருந்தனன். அப்போ ராத்தாவும் பேச சொன்னாங்க அதான் பேசினன். சரி வைக்கன்…”

என்று மார்க்க வரையறையை மீறாது ஒழுக்கமாக ஸலாத்துடன் போனை கட் பபண்ணினான்.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

“ம்ம்.. சரி கேட்குறன்… எனக்கு தங்கத்தால.. புரோக் செஞ்சி தாங்க…” என்று கம்பீரமான குரலோடு சொன்னாள். “ஏமா நான் சொன்னன் என்று இப்படி ஒரு கேள்வியா?” “பார்த்திங்களா? இது தான் நான் கேட்கக்கூடாதுனு நினைச்ச……

“ம்ம்.. சரி கேட்குறன்… எனக்கு தங்கத்தால.. புரோக் செஞ்சி தாங்க…” என்று கம்பீரமான குரலோடு சொன்னாள். “ஏமா நான் சொன்னன் என்று இப்படி ஒரு கேள்வியா?” “பார்த்திங்களா? இது தான் நான் கேட்கக்கூடாதுனு நினைச்ச……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *