காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 94

  • 10

என்கிடுவை எப்படியோ தன்வழிக்கு கொண்டுவந்த மித்ரத் மறுநாளே அவனுக்கும் சேர்த்து ஹாங்காங் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்து விட்டான். ஏதோ தனக்கு கில்கமேஷால் உண்டான இந்த வியாதியை சரிசெய்யவே மித்ரத் தன்னை வெளிநாடு அழைத்து செல்வதாக என்கிடு எண்ணினான். இருவரும் விமான நிலையத்திற்கு வந்து இறங்கினர். பழைய விடயங்கள் தப்பி தவறி கூட நினைவுக்கு வராதபடி அம்னேஷியாவை தூண்டும் ஒருமருந்தை தினமும் கொடுத்து வந்தான் மித்ரத்.

“அந்த டாக்டர் இருக்குற ஊரை கண்டுபிடிச்சிட்டோம். போய் கொஞ்சம் தேடவேண்டி இருக்கும்.”

என்றான் மித்ரத். இதே விமான நிலையத்தில் ஜெனி குழுவும் தங்கள் பயணத்துக்காக ஒன்றுசேர்ந்து இருந்தனர்.

“என்னோட செமஸ்டர் எக்ஸாம் நாளைக்கா ஸ்டார்ட் பண்ணனும். எனக்கு ரொம்ப கவலையா இருக்கு… உங்க கூட வந்து உதவ முடியல என்று.”

என்றாள் டிடானியா.

“உங்களுக்கு ஏன் அப்படி ஒரு கவலை. அதுதான் இன்னொரு முக்கியமான பொறுப்பை உங்க கிட்ட விட்டிருக்கோமே.”

என்றான் கில்கமேஷ்.

“விக்டர், இதுவரை மித்ரத் செஞ்சே இல்லீகல் பிஸினஸ், அவன் பண்ண கொலைகளுக்கான விட்னஸ் இது பத்தி எல்லாம் நீ சேகரித்து வெச்சிருக்குற எல்லா எவிடன்ஸையும் உடனே போலீஸ்ல ஒப்படைச்சிடுங்க.”

என்றாள் ஜெனி.

“ஆஹ் நானும் டிடானியாவும் சேர்ந்து இதுவரை அவனுக்கு எதிரான எல்லா டீடைல்ஸையும் கலக்ட் பண்ணிட்டோம். உங்களை வழியனுப்பி வைக்கிற அதே கையோட பொலிஸ் ஸ்டேஷன் போய் எல்லாத்தையும் ஒப்படைச்சிட்டா போச்சு. அவனை இனி அவங்க பார்த்துப்பாங்க.”

என்றான்.

“எங்க அம்மாவை அநியாயமா கொன்றவனை என் கையால கொல்லனும் என்னு வெறியில் இருந்தேன். எது எப்படியோ அவனுக்கு தண்டனை கிடைச்சா சரி.”

என்றாள் டிடானியா.

“சரி பிளைட்டுக்கு நேரமாச்சு… நாங்க போய் வர்றோம். நீங்க பத்திரமா இருங்க.”

என்றான் ராபர்ட். டிடானியாவிடம். அவளுக்கு எப்படி தன் காதலை வெளிப்படுத்துவது என தெரியவில்லை. அவனையே பார்த்து கொண்டு இருக்க. விக்டர் அவளை அவன் மீது தள்ளி விட்டு,

“பா…. சொல்லி தொலையேன்… இல்லேன்னா ஜெனியை பார்த்தாவது கத்துக்கே.”

என்று சீண்டினான். ஜெனி விக்டரை முறைக்க எல்லோரும் ஒருமித்து டிடானியாவையும் ராபர்ட்டையும் தூண்டினர்.

“கமோன்.. யாரு முதலில் சொல்றாங்கன்னு பாக்கலாம்.

“ராபர்ட்!! ராபர்ட் ..!!”

என்று ஆண்கள் கத்த,

“டிடானியா! டிடானியா! “

என பெண்கள் கத்த இருவரும் ஒரே நேரத்தில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தினர். சுற்றி இருந்து எல்லோரும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

“இப்போ திருப்தியா…. இனி நீங்க ரெண்டுபேரும்.. லவ் பேர்ட்ஸ்… யம்மா பெண் பறவையை எங்க விமானம் கிளம்பிட போகுது… அவனை கொஞ்சம் விடேன்.”

என்று மீரா சொல்ல வெக்கத்துடன் டிடானியாவும் ராபர்ட் கிட்ட இருந்து விடைபெற்றாள். அவர்கள் இருவரும் காரில் புறப்பட்டு விட்டனர்.

இவர்களும் விமானத்தில் அவரவர் சீட்டில் அமர்ந்து கொண்டனர். விமானம் புறப்பட்டதும் கொஞ்ச நேரத்தில் ஆர்தர் பாத்ரூம் செல்வதற்காக எழுந்து சென்றான். அப்போது தான் தெரிந்தது என்கிடுவும் மித்ரத்தும் இந்த விமானத்தில் இருப்பது. உடனே தன்னை கையால் மறைத்து கொண்டு அங்கிருந்து ஓடிவந்துவிட்டான். எல்லோரிடமும் அவர்கள் இருவரும் விமானத்தில் இருப்பதை சொல்லி எச்சரிக்கை செய்தான். அவர்களும் இருவர் கண்ணிலும் படாமல் மறைந்து கொண்டனர்.

“இவனை அங்கேயே பொலிஸ் பிடிக்கும் என்னு பார்த்தா நமக்கு முன்னாடி பிளைட்ல வந்து உக்காந்து கிட்டு இருக்கான்.”

என்று வருத்தப்பட்டாள் ஜெனி,

“இதுவும் நல்லதுக்கு தான் இவனை பின்தொடர்ந்து போனாலே போதும்.”

என்றான் ஆர்தர். என்கிடுவுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டதோடு கொஞ்சம் மங்கலான தோற்றத்தில் ஒரு சில விடயங்கள் வந்து வந்து போயின. ஆனால் அவன் அதை எல்லாம் மித்ரத் கிட்ட சொல்லவில்லை. எல்லோரும் ஹாங்காங் சென்று சேர்ந்தனர். அதேபோல் அங்கு விக்டரும் டிடானியாவும் பொலிஸில் மித்ரத்தை பற்றிய அனைத்து ஆதாரங்களையும் சப்மிட் பண்ணினார்கள். விமானத்தில் இருந்து இறங்கியதும் ஜெனி குழுவினர் ஆளுக்கொரு திசையில் மித்ரத்தை கண்காணிக்க ஆரம்பித்தனர். அவனுக்கு இவர்கள் யாரும் தன்னை பின்தொடருவது தெரியாது. அவன் ஒரு டாக்சியை பிடித்து என்கிடுவோடு அதில் சென்றதும். இவர்களும் இரண்டு டாக்சியை பிடித்து பின்தொடர ஆரம்பித்தனர்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

என்கிடுவை எப்படியோ தன்வழிக்கு கொண்டுவந்த மித்ரத் மறுநாளே அவனுக்கும் சேர்த்து ஹாங்காங் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்து விட்டான். ஏதோ தனக்கு கில்கமேஷால் உண்டான இந்த வியாதியை சரிசெய்யவே மித்ரத் தன்னை வெளிநாடு அழைத்து…

என்கிடுவை எப்படியோ தன்வழிக்கு கொண்டுவந்த மித்ரத் மறுநாளே அவனுக்கும் சேர்த்து ஹாங்காங் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்து விட்டான். ஏதோ தனக்கு கில்கமேஷால் உண்டான இந்த வியாதியை சரிசெய்யவே மித்ரத் தன்னை வெளிநாடு அழைத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *