காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 97

  • 64

வெளியே பொலிஸ் ஜீப்பின் சத்தம் கேட்டதும் சுதாரித்து கொண்டு மித்ரத் அங்கிருந்து தப்பித்து விட்டான். கில்கமேஷ் நெஞ்சில் துப்பாக்கி ரவை பாய்ந்து இருந்தது. பொலிஸ் சரசரவென உள்ளே இறங்கினார்கள். நாலாபக்கமும் ஆட்களை அனுப்பி மித்ரத்தை பிடிக்க அனுப்பினார்கள். அதிர்ச்சி, குழப்பம், கோபம், ஏமாற்றம் எல்லாம் கலந்து எங்கிடுவின் மூளையை கசக்கி பிழிந்து கொண்டிருக்க அதே கணம் தனக்கு பாய இருந்த புல்லட்டை தன் நெஞ்சில் வாங்கி கொண்டு சரியும் கில்கமேஷை பார்க்க பார்க்க அழுத்தம் இன்னும் அதிகரித்தது. மூளை தாறுமாறாக சிந்திக்க ஆரம்பித்தது. கடைசியில் யாரோ ஒருவர் பெரிய சுத்தியலால் தன்னை தலையில் அடித்து விட்டது போன்ற வலி.

“ஆஆஹ்…”

முடிகள் பிய்ந்து விழ கத்தினான் என்கிடு. அத்தனையும் சுர்ரென மனதில் தோன்றிவிட்டது. ஜெனி அழுது கொண்டே கில்கமேஷை உழுப்பி கொண்டிருந்தாள். அவள் அருகில் தான் என்கிடு நின்று கொண்டிருந்தான். அந்த டாக்டரும் உள்ளே வந்து நடப்பதை பார்த்து கொண்டிருந்தார்.

“ஐயோ… கில்கமேஷுக்கு என்னாச்சு?”

என்று ஆர்தரும் ராபர்டும் அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டே அவனருகில் வர என்கிடு கண்கள் கண்ணீரை பொழிய முகத்தில் எவ்வித சலனமும் இன்றி கில்கமேஷ் அருகில் முழங்காலில் மண்டி போட்டு தொப்பென்று விழுந்தான். பேரழுகையுடன் விம்மி விம்மி இருந்த ஜெனி அழுவதை நிறுத்தி விட்டு என்கிடுவை கோபத்தோடு பார்த்தாள்.

“இப்போ நிம்மதியா… உன்னை உயிருக்கு உயிராக நேசிச்ச உன்னோட உயிர் நண்பனை கொன்னுட்டே…”

என்று வார்த்தைகளால் பொங்க அவன் தனது இரு கைகளையும் மாறி மாறி பார்த்தான். அவனால் பேசமுடியவில்லை.

“பாரு இவன் இவ்வளவும் பன்னது உனக்காக தான். உனக்காக மட்டும் தான்.”

என்று சொல்ல கதறிக்கொண்டே என்கிடு கில்கமேஷை கட்டிப்பிடித்தான்.

“முட்டாளா இருந்துட்டேனடா என் உயிரை கொடுத்தாவது உனக்கு ஒன்னும் ஆகாமல் பார்ப்பேன். என்று வாக்களித்து விட்டு இப்ப உன் சாவுக்கு நானே காரணமாயிட்டேனே!”

என்று புலம்பினான். அப்போது தான் என்கிடுவுக்கு எல்லாம் நினைவுக்கு வந்து விட்டது. என மற்றவர்களுக்கு புரிந்தது.

“டேய் கில்கமேஷ்… எழுந்திருடா… நீ அழிவில்லாத வரம் பெற்றவன். எழுந்திரு உன் வலிமைக்கு முன் எல்லாமே தூசி நம்ம தாய் மீது சத்தியமாக சொல்லுறேன் உனக்கு எதுவும் ஆகாது.”

என்று கத்தினான். அப்போது அந்த டாக்டர் கில்கமேஷ் கண் அசைவதை கவனித்து விட்டு முன்னே வந்தார்.

“இவர் இன்னும் சாகல உயிர் இருக்கு”

என்றவர் கில்கமேஷை தூக்கி என்கிடு படுத்த இடத்தில் வைக்க உதவுமாறு ராபர்ட்டிடமும் ஆர்தர் மற்றும் என்கிடுவிடம் சொல்ல அவர்களும் அவசர அவசரமாக அவனை தூக்கி வைத்தனர்.

“தயவுசெய்து எங்க கில்கமேஷை காப்பற்றிடுங்க டாக்டர்”

என்று ஜெனி கெஞ்சினாள்.

“கொஞ்சம் கஷ்டம் தான் நீங்க தான் இங்கே இருந்த எக்கியுப்மெண்ட் எல்லாம் சேதம் பண்ணிடீங்களே!”

“அந்த மித்ரத்தின் திட்டத்தை பாழாக்க எங்களுக்கு வேற வழி தெரியல. என்கிடு இதயத்தை மட்டும் அவனுக்கு மாத்திட்டா அவனால் இந்த உலகத்துக்கு ஏற்படப்போற அழிவை யாராலும் தடுக்க முடியாது என்று நினைத்து தான் இப்படி பண்ணோம் இப்போ என்ன பண்ணுறது?”

என கேட்டாள் ஜெனி.

“ஆம்புலன்சுக்கு சொல்லவா?”

என ஆர்தர் கேட்டான்.

“இல்ல அதுக்கெல்லாம் நேரமில்லை. இப்போவே புல்லட்டை வெளியே எடுக்கணும். நான் ஏதாவது முயற்சி பண்ணுறேன்.”

என்றவர் அங்கிருந்த உபகரணங்களை பயன்படுத்தி கில்கமேஷுக்கு சிகிச்சை செய்ய ஆரம்பித்தார். பொலிஸார் தப்பிச்சென்ற மித்ரத்தை பிடிக்க ஆளுக்கொரு திசையில் விரைந்திருந்தனர். அப்போது தான் ஆர்தரும் ஜெனியும் ஒரு விடயத்தை கவனித்தனர். இருவரும் ஒருமித்து,

“மீரா!!!! மீரா எங்கே போனாள்.”

என்ற கேள்வியுடன் எல்லோரும் ஆளுக்காள் அதிர்ச்சி அடைந்தனர். அதேநேரம் ஒரு தெரியாத நம்பரில் இருந்து டாக்டருக்கு போன் கால் ஒன்று வந்தது.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

வெளியே பொலிஸ் ஜீப்பின் சத்தம் கேட்டதும் சுதாரித்து கொண்டு மித்ரத் அங்கிருந்து தப்பித்து விட்டான். கில்கமேஷ் நெஞ்சில் துப்பாக்கி ரவை பாய்ந்து இருந்தது. பொலிஸ் சரசரவென உள்ளே இறங்கினார்கள். நாலாபக்கமும் ஆட்களை அனுப்பி மித்ரத்தை…

வெளியே பொலிஸ் ஜீப்பின் சத்தம் கேட்டதும் சுதாரித்து கொண்டு மித்ரத் அங்கிருந்து தப்பித்து விட்டான். கில்கமேஷ் நெஞ்சில் துப்பாக்கி ரவை பாய்ந்து இருந்தது. பொலிஸ் சரசரவென உள்ளே இறங்கினார்கள். நாலாபக்கமும் ஆட்களை அனுப்பி மித்ரத்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *