எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 29

  • 16

“இங்க பாருங்க உங்க ரெண்டு பேபியையும் அளவில்லா சந்தோசம் நிசாத்தை கை கொள்ள கொஞ்சம் இருங்க டொக்டர் என்று தன போனை எடுத்து தன் இரு உயிர்களின் அசைவையும் விடியோ பண்ணி கண் கலங்கி நின்றான் நிசாத்…”

“என்ன நிசாத் இப்படி”

என்று டொக்டர் கேட்க,

“ஒரு பேபி என்று நினச்சம் அல்லாஹ்ட அருளால ரெண்டு, அவக ரொம்ப பரக்கத்தா இருக்காங்க பார்துட்டே இருக்கணும் போல இருக்கு டொக்டேர் அதான் விடியோ பண்ணன்.”

“இதை கேட்ட ருஷா தன் ஹபியின் கையை இருக்க பிடித்தாள் அவள் கண்ணில் ஆனந்த குதூகலம் பொங்கியது.

“வெல்டன் நிசாத்,,,”

“இஸ்கேனிங் ரிபோட் இந்தா இருக்கு நெக்ஸ்ட் டைம் வரும் போது கொண்டு வாங்க, இதுல ஒரு டோனிக் எழுதிருக்கன் அதை எடுத்து கொடுங்க நிசாத்,

“ஓகே தங்கியூ டொக்டேர்.”

என்று இருவரும் வீட்டுக்கு சென்றனர். ருஷா இடையில மார்க்கெட் போய் போகணும் நினைப்பு காட்டுடா என்று காரை ஓட்டி சென்றான் நிசாத். காற்று குளிர் தர இதமாக துயில் கொண்டாள் ருஷா. பேசி வந்த நிசாத் திரும்பி பார்க்க, அவள் குழந்தை தூக்கம் கண்டு பூரிப்படைந்தான். பத்து நிமிடத்தில் மார்க்கெட்டை அடைந்து,

“ருஷா… எழும்புங்க”

“என்ன ஹபி தூங்க விடுங்க”

“ஹோய் … இது வீடு இல்ல கார்”

“அய்யோ சோரி ஹபி…”

என்று எழும்பியவள். நக்கலாக ஒரு சிரிப்பு சிரிக்க,

“ஆஹ் மேடம் எழும்பி வாங்க,”

“ம்ம் சரி”

என்று சென்று கொஞ்சம் பழ வகைகளும் வாங்கி ருஷாவின் டோனிக்கையும் பார்மசியில் வாங்கி விட்டு பயணம் வீட்டை நோக்கி சென்றது. வீடு வந்து சேர,

“வாங்க நிசாத்”

என்று தாய் சாரா இருவருக்கும் பழ ஜூஸ் கொடுக்க, குடித்து குடித்து கதை ஆரம்பித்தது.

“என்ன நிசாத் போன விளக்கம்”

என்ன டொக்டேர் என்ன சொன்ன,

“அல்லாஹ் ரொம்ப சந்தோசம் மா பேபி எல்லாம் நல்ல ஹெல்தியா இருக்காங்க மா,,,”

“என்ன நிசாத் என்ன எல்லாம் என்கிங்க,,”

“ஓஹ் மா டுவின்ஸ் மா… போயும் கேர்ளும்.”

அளவில்லா சந்தோசம் சாரா திகைத்து,

“மாஷா அல்லாஹ்”

என்று சொல்லி ருஷா அருகில் வந்து நெத்தியில் முத்தம் இட்டு வயிற்றை தடவி துஆ செய்து கொண்டார் சாரா. சாராவின் செயல் தன் தாயை நினைவூட்டியதால்,

“அண்டி இந்த டைம் உம்மா இல்ல.”

என்று அழ ஆரம்பிக்க,

“ருஷா அப்டில உம்மாக்கு உம்மா நான் இருக்கன்டா எங்கட குடும்ப செல்லம் நீ அழ கூடா”

என்று கண்ணை துடைத்தார் சாரா,

“ஆஹ் சாரா ரோசன் கோள் பண்ணின.”

“என்னவாம் அண்டி,”

“ரோசனுக்கு ஸ்ரைக் லீவாம் நாளைக்கு போல வராராம் என்று சொன்னாரு,”

“இன்ஷா அல்லாஹ் தம்பிய பார்த்து எவ்வளவு நாள் என் உம்மா கூட இல்ல இந்த ஸ்ரைக் லீவு நீடிக்கனும் தம்பிக்கு”

என்று தன் தாயை நினைத்து வருந்தி கொண்டாள். கற்பம் தரித்த பெண் கவலைப் படுவது குழந்தைக்கு நல்லம் இல்லை என்று உணர்ந்த சாரா,

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

“இங்க பாருங்க உங்க ரெண்டு பேபியையும் அளவில்லா சந்தோசம் நிசாத்தை கை கொள்ள கொஞ்சம் இருங்க டொக்டர் என்று தன போனை எடுத்து தன் இரு உயிர்களின் அசைவையும் விடியோ பண்ணி கண் கலங்கி…

“இங்க பாருங்க உங்க ரெண்டு பேபியையும் அளவில்லா சந்தோசம் நிசாத்தை கை கொள்ள கொஞ்சம் இருங்க டொக்டர் என்று தன போனை எடுத்து தன் இரு உயிர்களின் அசைவையும் விடியோ பண்ணி கண் கலங்கி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *